விடுதலைப் புலிகள் இருக்கும் வரை வடகிழக்கு, இணைந்த தாயகம், விடுதலைப் புலிகள் போரில் தோல்வியடைந்ததும் வடக்கு, கிழக்கு என்ற பிரிப்பை ஏற்றுக் கொண்டு கிழக்குத் தேர்தலில் குதித்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பினர் வடக்கு கிழக்கு பிரிப்பை ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என்பதும் இத் தேர்தல் மூலம் வெளிப்படை. 1987ம் வருடம் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் மூலம் கிடைத்த வட கிழக்கு மாகாண சபையினை அன்றே ஏற்றுக்கொண்டிருந்தால் இன்று எம் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் உயிர்களை தியாகம் செய்திருக்க வேண்டிய அவசியமோ, உடமை, பொருளாதாரம், கல்வி, கலை, அபிவிருத்தி என்று எதனையும் இழந்திருக்க வேண்டிய அவசியமே இருந்திருக்காது.
அன்று விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இருக்கும் வரை தமிழர்களின் ஏக பிரதிநிதிகள் புலிகள் என்று மார்தட்டி பிரசாரம் செய்த தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்றும் ஈழப் போராட்டம், வடக்கு கிழக்கு இணைப்போம், சர்வதேச ரீதியாக அழுத்தம் கொடுப்போம் என்கின்றனர். அந்த சர்வதேச அழுத்தம் என்ன? போராட்டத்தினைக் காட்டிக் கொடுத்தது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியும், அதன் தலைமைகளும் என்பவர்கள் தம் கட்சியின் ஊடாக தேர்தலில் களம் இறக்கி இருக்கும் வேட்பாளர்கள் யார்? ஆயுதம் தூக்காத அகிம்சைவாதிகளா? மக்களைத் துன்புறுத்தாத தியாகிகளா? போராட்டத்தின் வீரியம் அதிகரிக்கும் முன்னரே அப்பாவித் தமிழ் மக்களிளைக் கொன்று குவித்தவர்களைத் தானே கூட்டிணைத்துள்ளார்கள்.
யார் தமிழர்களின் துரோகிகள்? யார் மக்களுக்காக களம் நிற்பவர்கள் என்று மக்கள் நன்கு உணர்வார்கள்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தற்காப்புக்காக ஆயுதம் ஏந்தினார்களே தவிர, யாரையும் கொன்று குவித்து சுகபோகம் அனுபவிப்பதற்காக அல்ல. அத்தோடு நம்பிய மக்களை நட்டாற்றில் விட்டு விட்டு வெளிநாடுகளுக்கு ஓடி தப்பி சுகபோகம் அனுபவிப்பதற்காகவும் அல்ல.
தம்மை நம்பிய மக்களை ஜனநாயக ரீதியாக இலக்கை அடைவதற்கு மாகாண சபை ரீதியாக தமிழர்களுக்கு அரசியல் அடையாளம் கொடுத்தது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியாகும்.

இன்று கிழக்குத் தமிழர்கள் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பின்னால் அணிதிரண்டு நிற்கின்றார்கள். காரணம் கடந்த நான்கு வருடம் கிழக்குத் தமிழர்களின் அபிவிருத்தி, உரிமை, என்று எதிலும் விட்டுக் கொடுக்காது துணிவுடன் செயற்படுத்திக் காட்டியமையால் என்பது வெளிப்படை. ஆனால் இன்று கிழக்கில் தமிழ் முதலமைச்சர் வரக்கூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டு செயற்படுகின்றார்களே இவர்களா தமிழர்களின் பிரதிநிதிகள்? அரசியல் தலைமை என்பது தாம் சார்ந்த சமுகத்தினை வழிநடத்துவதற்காகவே அன்றி நம்பிய மக்களை நட்hற்றில் விடுவதற்காக அல்ல. இலக்கு என்பது என்றும் ஒன்றாகவே இருக்க வேண்டும். எந்த இலக்கை நோக்கி பயணிக்கின்றோம் என்று தெரியாது விட்டால் எப்படி தமிழர்களைக் காப்பாற்றுவது? என த.ம.வி.பு. கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.
அண்மையில் துறைநீலாவணையில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினூடாக த.ம.வி.பு.கட்சியின் தேர்தல் கிளைக் காரியாலத்தினை ஆரம்பித்து வைத்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இங்கு த.ம.வி.பு.கட்சியின் கொள்கைபரப்புச் செயலாளர் அசாத் மௌலானா, மற்றும் ஊர் மக்கள், இளைஞர்கள், மகளீர் சங்கங்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இங்கு த.ம.வி.பு.கட்சியின் கொள்கைபரப்புச் செயலாளர் அசாத் மௌலானா, மற்றும் ஊர் மக்கள், இளைஞர்கள், மகளீர் சங்கங்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.