கிழக்கு மாகாண சபை தேர்தல் நடவடிக் கைகளில் இன, மத அடிப்படையில் பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டாமென தேசிய தேர்தல் கண்காணிப்பு நிலையம் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் சில அரசியல் கட்சி கள் தேசியத்துவத்துக்கு முக்கியத்துவமளித்து தேர்தல் பிரசார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதைச் சுட்டிக்காட்டியுள்ள தேர்தல் கண்காணிப்பு நிலையம், சில கட்சிகள் இன, மத அடிப்படையில் பிரசாரங்களை முன்னெடுப்பதாகவும் தெரிவித்துள்ளது.
முப்பது வருட கால யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு அமைதிச்சூழல் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், இன வாத உணர்வைத் தூண்டுவதைத் தவிர்க்குமாறு மேற்படி கண்காணிப்பு நிலையத்தின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி ரசாங்க ஹரிச்சந்ர அறிக்கையொன்றின் மூலம் கேட்டுக் கொண்டுள்ளார்.
தேசிய தேர்தல் கண்காணிப்பு நிலையம் இம்முறையும் மாகாண சபை தேர்தலில் கண்காணிப்பு நடவடிக்கைகளை ஆரம் பித்துள்ளது. இதன் போது கிழக்கு மாகாணத்தில் தேசியத்துவத்துக்கு முக்கியத்துவமளிக்கப்படுவது கண்காணிக்க ப்பட்டுள்ளதாகவும் நிலையத்தின் கவனம் அதற்காக செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுவரை நாம் பெற்றுக் கொண்டுள்ள அனுபவங்களைப் பாடமாக்கிக் கொண்டு மீண்டும் ஒரு அழிவு ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ளு மாறும் தமது அரசியல் வேலைத் திட்டம் கொள்கைகளை மக்களுக்குத் தெளிவுபடுத்தி மக்கள் வெற்றி பெறும் தேர்தலாக இத னை நிகழச் செய்யுமாறும் ரசாங்க ஹரி ச்சந்ர கேட்டுக் கொண்டுள்ளார்.