கிழக்கு மாகாண சபை தேர்தலுக்கு இன்னும் 3 வாரங்களே உள்ள நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ளனர். இதை ஒட்டி தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் வேட்பாளர்களுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்களுக்குமிடையில் பிரச்சராப் பனிப்போர் இடம்பெற்று வருகின்றது. களுவாஞ்சிகுடி மைதானத்தில் சம்மந்தர் பட்டாளம் நேற்று செவ்வாயன்று மாலை தங்களது பிரச்சராக் கூட்டத்தை நடாத்தினர்.
இதற்கு பதிலளிக்கும் முகமாக இன்று தமிழ் மக்க் விடுதலைப் புலி வேட்பாளர்களை ஆதரித்து பளுகாமத்தில் உரையாற்றிய முன்னாள் முதலமைச்சரும் தலைமை வேட்பாளருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் வடமாகாணத்தில் ஒரு மாகாண சபையை உருவாக்க வக்கற்ற த.தே.கூட்டமைப்பினர்க்கு கிழக்கு மாகாணத்தில் என்ன வேலை? ஏன கேள்வி எழுப்பினார்.