8/01/2012

| |

சந்திவெளி எகோ விளையாட்டுக் கழகம் சந்திரகாந்தனுக்கே ஆதரவு


கோறளைப்பற்று தெற்கு பிரதேசத்தில் சந்திவெளி எக்கோ விளையாட்டுக் கழகம் மிகவும் பிரபல்யமான ஓர் கழகமாகும். இக் கழகத்தின் உறுப்பினர்கள் இம்முறை  கிழக்கு மாகாண சபைத் தேர்தலிலே ஐக்கிய மக்கள் சதந்திரக் கூட்டமைப்பு சின்னத்தில் போட்டியிடுகின்ற மட்டக்களப்பு மாவட்டத்தின் முதன்மை வேட்பாளரும் முன்னாள் முதலமைச்சருமான சி.சந்திரகாந்தனுக்கே தங்களது முழுமையான ஆதரவினை தெரிவிப்பதாக முடிவு செய்துள்ளார்கள்.
 
இன்று நடைபெற்ற சந்திவெளி எக்கோ விளையாட்டுக் கழகத்தின் உறுப்பினர்களுடனான சந்திப்பின் போதே அக் கழக உறுப்பினர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்கள். தங்களது கழகமானது கிராமத்தின் பல முக்கிய முடிவுகளை எடுக்கின்ற ஓர் ஸ்தாபனமாகும். அந்த வகையில் தொடர்ந்து இம் முறையும் முதலமைச்சராக வரக்கூடிய சந்திரகாந்தனுக்கே தமது ஆதரவினை தெரிவிக்க உள்ளதாக அவர்கள் தெரிவித்தார்கள்.
 
இக் கலந்துரையாடலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சயின் தலைவரும் மட்டக்களப்பு மாவட்டத்தின் முதலமைச்சர் வேட்பாளருமான சி.சந்திரகாந்தன், கோறளைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் உதயஜீவதாஸ், பிரதேச சபையின் உறுப்பினர் நடராஜா, கட்சியின் செய்குழ உறுப்பினர் பாலகிருஸ்ணன் மற்றும் கட்சியின் முக்கியஸ்த்தர்களும் கலந்து கொண்டார்கள்