யுத்தத்திற்கு பின்னரான கடந்த மூன்று வருட குறுகிய காலப்பகுதிக்குள் கிழக்கு மாகாணத்தின் பாரிய அபிவிருத்தி பணிகளுக்கு மாத்திரம் 53,000 கோடி ரூபா நிதியை அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
பிரதமர் டி.எஸ். சேனாநாயக்க தொடக்கம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க வரையான காலப்பகுதிகளில் செய்யப்பட்ட ஒதுக்கீடுடன் ஒப்பிடுகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் காலப்பகுதியில் செய்யப்பட்ட ஒதுக்கீடு அதிகூடிய தொகை யாகும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
கிழக்கின் நவோதயம் வேலைத்திட்டத்தின் மூலம் கல்வி, சுகாதாரம், நீர், வீதி உட்பட சகல விதமான அத்தியாவசிய மற்றும் உட்கட்டமைப்பு அடிப்படை வசதிகளும் இந்த மக்களுக்கு மிகவும் குறுகிய காலப் பகுதிக்குள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஏற்பாடு செய்த விசேட செய்தியாளர் மாநாடு கொழும்பிலுள்ள மகாவலி கேந்திரத்தில் நேற்றுக்காலை இடம்பெற்றது.
அமைச்சர் இங்கு மேலும் உரையாற்று கையில், தேர்தல் என்று சொன்னவுடன் பயந்து நடுங்கும் உலகிலேயே ஒரே ஒரு எதிர்க் கட்சி ஐக்கிய தேசியக் கட்சி யாகும். தேர்தலின் பலனையும், அதிகாரத்தை யும் தெரிந்து கொள்ளாமையே இதற்குப் பிரதான காரணமாகும்.
ஐ.தே.க. நினைப்பது போன்று கொழும் பிலிருந்து கொண்டு செய்தியாளர் மாநாடு களை வைப்பதன் மூலம் மாத்திரம் தேர்தலை வெற்றிகொள்ள முடியாது. மாறாக வீடு வீடாக கிராமம் கிராமமாக மக்கள் மத்தியில் சென்று மக்களின் மனதை வெற்றிகொள்ள வேண்டும் என்றார்.
மூன்று மாகாணங்களிலும் அரசாங்கம் வெற்றிகொள்ளும் விடயத்தில் எந்தவித போட்டிகளும் கிடையாது. விருப்பு வாக்குகளை பெற்றுக்கொள்வதிலேயே போட்டிகள் காணப்படுகின்றன.
தேர்தலில் நாங்கள் பெறும் வெற்றியானது யுத்த வெற்றியை காண்பித்து அல்ல, நாட்டில் வாழும் சகல இன மக்களுக்கும் வழங் கப்பட்டுள்ள பாரிய அபிவிருத்தியிலாகும். இன்று சகல இன மக்களுக்கும் இந்த அபிவிருத்தியை நேரடியாக அனுபவிக் கின்றனர்.
நாட்டில் தற்பொழுது எதிர்பாராத பாரிய அபிவிருத்திப் பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன. இதனை அனைத்து மக்களும் அறிவர்.
இன்று இனவாதம் என்ற பெயரில் சிலர் தமது அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றனர்.
ஐ.தே.க. பொருளாதார அபிவிருத்தி என்பதை மாத்திரம் காண்பித்து யுத்தத்தை வெற்றி பெற முயற்சித்தனர்.
ஆனால், அரசாங்கம் நாட்டை பாது காத்துக் கொண்டு பாரிய அபிவிருத்தியையும் காண்பித்தே தமது நடவடிக்கைகளை முன்னெடுக்கிறது. இந்த நாட்டில் 60 ஆண்டுகளாக இனவாத அரசியலே மக்களின் சிந்தனையில் புகுத்தப்பட்டுள்ளது. இதனை ஒரு குறுகிய காலத்தில் மிகவும் வேகமாக மாற்ற முடியாது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் இந்த நாட்டிலுள்ள சகல இன மக்களுக்கும் சொந்தமான ஒரு அரசாகும். ஏனெனில் நாங்கள் இனவாத அரசியலை தவிர்த்து தேசிய அரசியலை பற்றி பேசுகின்றோம் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
நல்லிணக்க ஆணைக்குழு
பரிந்துரை அமுலாக்கும்
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சில பரிந்துரைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளமைக்கு உலக நாடுகள் பாராட்டுக்களை தெரி வித்துள்ளன.
பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தவென ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தலைமையில் விசேட குழு செயற் பட்டு வருகின்றது.
எஞ்சியுள்ள விடயங்களும் உரிய முறையில் செயற்படுத்தப்படும். இதற்கு வெளிநாட்டவர்கள் எவரும் வருகைதர வேண்டிய தேவையில்லை என்றார்.