இந்த கொடிய படுகொலைகளின் தலைவன் பிரபாகரனை தமிழர்களின் ஏக தலைவன் என்று தேர்தல் விஞ்ஞா பனம் எழுதி உருவான கூட்டமைப்பு இன்று தமிழ் முஸ்லிம் ஒற்றுமைக்கு தவம் தவம் கிடப்பதன் சூட்சுமம் என்ன ?
நாளை 22வது தேசிய சுஹதாக்கள் தினம்
காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா பெரிய ஜும்ஆ பள்ளிவாயலில் நாளை 03.08.2012 வெள்ளிக்கிழமை சுஹதாக்கள் ஞாபகார்த்த நினைவு தின நிகழ்வுகள் இடம்பெறவுள்ளது.
அஸர் தொழுகையை தொடர்ந்து கத்தமுல் குர்ஆன் சுஹதாக்கள் தொடர்பான விசேட சொற்பொழிவு துஆ பிரார்த்தனை என்பவற்றுடன் காத்தான்குடி இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தின் அனுசரணையுடன் விஷேட இப்தார் நிகழ்வும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வுகளில் அனைத்து பொது மக்களையும் கலந்து கொள்ளுமாறு பள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.