7/17/2012

| |

TNA விற்கும் SLMC இற்கும் இடையில் கூட்டணி ஏற்படுத்த முயன்று மீண்டும் மூக்குடைபட்ட நோர்வே

சிறுபான்மை அரசியல் கட்சிகளான தமிழ்த் தேசியக்கூட்டமைப்பிற்கும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும் இடையில் அரசியல் கூட்டணி ஒன்றை ஏற்படுத்த நோர்வே அரசாங்கம் முயற்சித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் இரு கட்சிகளுக்கும் இடையில் கூட்டணி ஒன்றை ஏற்படுத்த நோர்வே முயற்சி செய்ததாகவும், அந்த முயற்சி தோல்வியடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.
இரு தரப்பினருக்கும் இடையில் புரிந்துணர்வை ஏற்படுத்த இலங்கைக்கான நோர்வே தூதரகம் பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேர்தலில் ஆளும் கட்சியுடன் இணைந்து போட்டியிடத் தீர்மானித்துள்ளது.