கடந்த மாதம் 29ம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்தில் வேலையற்றிருந்த
பட்டதாரிகளுக்கு பட்டதாரிப் பயிலுனர் நியமனங்கள் வழங்கப்பட்டன. இதன்போது
HNDA பட்டதாரிகளுக்கும் பட்டதாரிப் பயிலுனர் நியமனங்கள் வழங்கப்பட்டன.
இதனடிப்படையில் மட்டக்களப்பு கச்சேரியிலும், பிரதேச செயலகங்களிலும்
பட்டதாரிகள் பயிற்சிக்காக இணைக்கப்பட்டிருக்கின்றனர்.
இவ் நியமனக் கடிதத்தினை மட்டக்களப்பு அரச அதிபர் திருமதி P.S.M.சார்ள்ஸ்
அவர்கள் கையொப்பமிட்டு வழங்கியிருக்கின்றார். ஆனால் இன்று மட்டக்களப்பு
அரச அதிபரினால் பிரதேச செயலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள
கடித்தில் HNDA பட்டதாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள நியமனங்கள் நிறுத்தப்பட
இருப்பதனால். HNDA பட்டதாரிப் பயிலுனர்களை பயிற்சியல் இணைத்துக் கொள்ள
வேண்டாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்ட HNDA பட்டதாரிகள் இவ்விடயம் தொடர்பில்
குழப்பமடைந்திருக்கின்றனர். காரணம் மண்முனை தென் எருவில் பற்று
(களுவாஞ்சிகுடி) பிரதேச செயலகம் உட்பட ஒருசில பிரதேசசெயலகங்களில் HNDA
பட்டதாரிகளை நாளை முதல் வேலைக்கு வரவேண்டாம் என்று
கூறப்பட்டிருக்கின்றது. ஆனால் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல பிரதேச
செயலகங்களில் HNDA பட்டதாரிகளை வேலைக்கு வரவேண்டாம் என்ற கட்டளை
பிறப்பிக்கப்படவில்லை. பிரதேச செயலகங்களுக்கு வெவ்வேறு சட்டதிட்டங்களா?
HNDA கற்கை நெறியும் பல்கலைக் கழக பட்டங்களுக்கு சமமானது என்கின்ற சுற்று
நிருபம் அரசினால் வெளியிடப்பட்டு கடந்த காலங்களில் HNDA பட்டதாரிகளுக்கு
நியமனங்கள் வழங்கப்பட்டன. HNDA பெறுமதி வாய்ந்த ஒரு கற்கைநெறி என
பலராலும் பேசப்படுகின்ற இக் கற்கை நெறிக்கு வருடந்தோறும்
ஆயிரக்கணக்கானவர்கள் விண்ணப்பித்து இக் கற்கை நெறியை நான்கு வருடங்கள்
பயின்று தொடர்ந்து வேலை வாய்ப்பில் ஈடுபடுத்தப்பட்டு வந்தனர்.
ஆனாலும் இந்தப் பட்டதாரிப் பயிலுனர் நியமனத்தில் HNDA பட்டதாரிகள்
புறக்கணிக்கப்படுவது ஏன்? நான்கு வருடங்கள் கஸ்ரப்பட்டு படித்து பட்டம்
பெற்றது இதற்குத்தானா? அரசாங்கம் ஏமாற்ற நினைக்கின்றதா? இதற்கு முன்னர்
HNDA பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்பட்டு இப்போது
புறக்கணிக்கப்படுவது ஏன்? பல்கலைக்கழக பட்டங்களுக்கு சமமான கற்கைநெறி
என்ற சுற்று நிருபம் எங்கே போனது. அரசாங்கம் ஏன் ஏமாற்ற நினைக்கின்றதா?
இவை ஒரு புறமிருக்க நியமனம் வழங்கும்போது இவை பற்றி ஏன் இவர்கள்
சிந்திக்கவில்லை. நியமனத்தை அரச அதிபர் சார்ள்ஸ் அவர்கள்தான்
கையொப்பமிட்டு அன்று வழங்கினார். இன்று இரண்டு நாட்கள் வேலைக்கு
சென்றபின்னர் வேலையிலிருந்து நீக்கியிருக்கின்றார். இது மனித உரிமை
மீறலில்லையா?
நியமனம் வழங்கப்பட்டபோது 2400 பட்டதாரிகளுக்கு முன்னிலையில் HNDA
பட்டதாரிகளுக்கும் நியமனம் வழங்கப்பட்டது. இரண்டு நாட்கள் வேலைக்கு
சென்றபின்னர். எந்தவித காரணங்களும் சுட்டிக்காட்டப்படாமல் நியமனத்தை
இரத்துச் செய்வது மனித உரிமை மீறலில்லையா? இவ்வாறான செயற்பாடுகளினால்
எத்தனை பேரின் மனநிலை பாதிக்கும் எத்தனைபேர் தற்கொலைக்குக்கூட
செல்லக்கூடிய நிலையில் இருப்பார்கள் என்பதனை இவர்கள் அறியாமலா
வாழ்க்கையில் விளையாடுகின்றனர்.