7/19/2012

| |

கிழக்கு மாகாண சபையின் உருவாக்கத்தால் மீனவர்கள் வாழ்வில் புத்தொளி!


கிழக்கில் புலிகள் தோற்கடிக்கப்பட்டு  கிழக்கு மாகாண சபை தோற்றுவிக்கப்பட்ட  பிரதிபலன்களை கிழக்கு மாகாண மீனவர்கள் இன்று முழுமையாக அனுபவிக்கின்றனர்.
வாழைச்சேனை மீன்பிடித்துறைமுகம் இன்று கிழக்கு மீனவர்களின் வாழ்வில்  ஒளியூட்டிக்கொண்டிருக்கின்றது.
1990 ஆம் ஆண்டு புலிகளால் நிர்மூலமாக்கப்பட்ட இந்த மீன்பிடித் துறைமுகம்  ஆசிய அபிவிருத்தி வங்கி  வழங்கிய 480 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டு 2011 ஆம் ஆண்டு  திறந்துவைக்கப்பட்டது.
மிகவூம் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்த இந்த மீண்பிடித் துறைமுகத்தை  கொழும்பில் இருந்து சென்ற ஊடகவியலாளர்கள் கடந்த சனிக்கிழமை (14.07.2012) பார்வையிட்டனர். அதன் பின்னர் அதன் நிருவாக முகாமையாளரான  எஸ்.எஸ்.ஹெட்டிகே உடன் உரையாடினர். அந்த உரையாடலின்போது கிடைத்த தகவல்களை இங்கு தருகிறேன். வாழைச்சேனை பழைய மீன்பிடித் துறைமுகத்தை புலிகள் தாக்கி அழித்தன் பின்னர் புதிய மீன்பிடித் துறைமுகம் அமைக்கும் பணிகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரையில் 2009 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.
மீன்பிடிக் கூட்டுத்தாபனத்துக்குச் சொந்தமானது. இத்துறைமுகத்தை இப்போது 450 ஆழ்கடல் படகுகள் பயன்படுத்துகின்றன. இவை ஒரு வார காலம் கடலில்  தங்கியிருந்து மீன்பிடித்துக்கொண்டு திரும்புகின்றன. மீன்பிடித்துறைமுகத்தில் 40 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். 25000 மீனவர்கள் இத்துறைமுகத்தால் நன்மையடைகின்றனர்.
இரண்டு இலட்சம் கிலோ மீன்வகைகள் இத்துறைமுகத்தினூடாக வருடாந்தம் சந்தைப் படுத்தப்படுகின்றது. இது கிழக்கு மாகாண மொத்த மீன்பிடியில் 20 சதவீதமாகும் இதன் காரணமாக ஒரு கிலோவூக்கு ஒரு ரூபா வீதம் வருடாந்தம் இரண்டு லட்சம் ரூபா வருமானம் கிடைக்கின்றது. தினமும் கடலுக்குச் செல்லும் ஏனைய மீன்பிடி வள்ளங்கள் களப்புகளின் ஓரங்களில் அமைக்கப்பட்டுள்ள சுமார் 100 வாடிகளில் கரைசேர்க்கப்பட்டு மீன் விற்பனை நடைபெறுகின்றது.
தென் மாகாணத்தில் உள்ள பேருவளை மீன்பிடித் துறைமுகத்துக்கு வழங்கப்பட்டுள்ள சகல வசதிகளும் வழைச்சேனைக்கும் வழங்கப்பட்டுள்ளது. வாழைச்சேனை மீன்பிடித்துறைமுகத்தில் ஒரே நேரத்தில் 1500 பாரிய வள்ளங்களை நங்கூரமிடக்கூடிய வசதிகள் உள்ளன. சாதாரணமாக ஒரு வள்ளத்துக்கு ஒரு மாதம் 600 ரூபா இத்துறைமுகத்துக்கு கட்டணம் அறவிடப்படுகின்றது.
இப்பிரதேசத்தில் உள்ள சகல மீன்பிடி வள்ளங்களும் எமது இத்துறைமுகத்தைப் பயன்படுத்தக்கூடிய வசதிகள் உள்ளன. ஆனால் படிப்பறிவூ குறைந்தவர்காக அவர்கள் இருப்பதால் தமது தொழிலில் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதற்கு தயக்கம் காட்டுகின்றனர்.
ஐஸ் உற்பத்திச்சாலையொன்று இப்போது இப்பிரதேசத்தில் நிருமாணிக்கப்பட்டு வருகின்றது. ‘லங்கா ஐஸ்’ என்ற தனியார் நிறுவனம் இன்னும் இரண்டு மாத கலத்தில் அதனைத் திறந்துவைககும். தொழிலுக்காக் கடலுக்குச் சென்று காணாமல் போகும் மீனவர்களைத் தேடிக்கண்டு பிடிப்பதில் நாம் சில சிக்கல்களை எதிர்நோக்கியூள்ளோம்.
ஏனெனில் இலங்கையின் ஏனைய மீன்பிடிப் பிரதேசங்களான பேருவளை- நீர்கொழும்பு-சிலாபம் மீவர்களைப் போல் ரேடியோ அலைவரிசை சமிக்ஞைகளைப  புரிந்து செயற்படக்கூடடிய திறமை எமது பகுதி மீனவர்களிடம் இல்லை. எனவே உயிர் காக்கும் நவீனத் தொடர்பாடல் சமிக்ஞைகள் தொடர்பான விசேட பயிற்சி ஒன்றை இப்பகுதி மீனவர்களுக்கு வழங்க எமது முதலமைச்சரின் ஒத்துழைப்புன் நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம்.
இப்பிரதேசத்துக்கு மழைக்காலமான ஒக்டோபர் -நவம்பர் -டிசம்பர் மாதங்களில் மழை நீருடன் மணலும் சென்று களப்பில மணல் திட்டுக்களை ஏற்படுத்திவிடும். இவை வள்ளங்களை நகர முடியாமல் செய்துவிடும். எனவே வருடம் ஒரு முறை பாரிய டோலர்கள் மூலம் மணல்; தோண்டி எடுத்து களப்பை ஆழமாக்கும் நடவடிக்கைகளையூம் மேற்கொள்கிறௌம்.
கிழக்கு மீனவர்களுக்கு கரையில் இருந்து 200 கடல் மைல்கள் கடந்து சென்று மீன்பிடிக்க அனுமதியூண்டு. எனினும் பெரிய மீன்கள் கிடைப்பதாக்கூறி அதற்கும் அப்பால் சென்று வங்காள விரிகுடாவில் சில மீனவர்கள் மீன் பிடிக்கின்றனர்.
இவ்வாறானவர்களுக்கு எச்சரிக்கை மணி ஒலிக்கும் புதிய கருவிகளை நாம் விரைவில் மீன்படி வள்ளங்களில் பொருத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். அக்கருவி தானாக இயங்கி எமது கடல் எல்லையைத் தாண்டிவிட்டதை மீனவர்களுக்கு எச்சரிககை விடுக்கும்.
43 கோடி ரூபா செலவில் இந்த மீன்பிடித்துறைமுகம் அமைக்கப்பட்டுள்ளது. கொழும்பு பேலியகொட மீன் சந்தையில் வாழைச்சேனை மீன்களுக்கு பெரும் கிராக்கி இருக்கின்றது. பழுதடையூம் மீன்பிடி வள்ளங்களைத் திருத்தும் தெழிற்சாலையொறையும் இப்பிரதேசத்தில் அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம் என்றார் வாழைச்சேனை மீன்பிடித்துறை முக முகாமையாளர் எஸ்.எஸ். ஹேட்டிகே.