7/17/2012

| |

மக்கள் இம்முறை தமிழ் தேசிய கூட்டமைப்பு சரியான பாடம் கற்பிப்பார்கள்.

நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபைத் தேர்தலிலே தமிழ் மக்கள் இம்முறை சரியான ஓர் பாடத்தினை கற்பிப்பார்கள். மீண்டும் முதலமைச்சராக ஓர் தமிழன் அதுவும் நான் வரக்கூடாது என்பதற்காகவே தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரிந்திருக்கும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலிலே போட்டியிடுகின்றது. இதனை கிழக்கு தமிழ் மக்கள் நன்கு உணர்ந்திருக்கின்றார்கள். இவர்களுக்கு அதற்கான சரியான பாடத்தினை கற்பிப்பார்கள் என் கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைமைச்ரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகயள் கட்சியின் தேசியத் தலைவருமான சிவநேசதுரை  சந்திரகாந்தன் nரிவித்தார்.
நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலில் கிழக்கு மாகாண சபையை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றும். ஒருபோதும் தமிழ் தேசிய கூட்டமைப்பினால் வெற்றிபெற முடியாது என கலைக்கப்பட்ட கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு பாடும் மீன் விடுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே அவர் இதனை தெரிவித்தார்.
கிழக்கு மாகாணம் நெல், பால், தானியம் என உற்பத்தித்துறையில் பாரிய அபிவிருத்தியைக் கண்டுள்ளது. சுற்றுலா, மீன்பிடித்துறையிலும் குறிப்பிடத்தக்க அபிவிருத்தியினை அடைந்துள்ளது. கல்வித்துறையிலும் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
இவைகள் அனைத்தும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில்தான் நடந்தது. கிழக்கு மாகாண சபை உருவானதன் பின்னர் இம்மாகாணம் அபிவிருத்தியில் தன்னிறைவு கண்டுள்ளது என்றார்.