7/21/2012

| |

மட்டக்களப்பு கூட்டமைப்பு வேட்பாளர்களிடையே குத்துவெட்டு ஆரம்பம்

மட்டக்களப்பு கூட்டமைப்பு வேட்பாளர்களிடையே குத்துவெட்டு ஆரம்பம் டெலோ பிரசன்னா.ஈ .பி .ஆர் .எல்.எப் .துரைரெட்ணம் மற்றும் களுதாவளை குணரத்தினம் போன்றோருக்கேதிராக தமிழ்வின் தொடங்கியுள்ள எதிர் பிரச்சாரம் 
கடந்த காலத்தில் இனத்தின் நன்மையைப் பற்றி இம்மியளவேனும் சிந்திக்காது ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளில் இணைந்து போட்டியிட்டு கணிசமான தமிழர்களின் வாக்குகளை ஆளும் கட்சிக்குப் பெற்றுக்கொடுத்த கோடரிக்காம்புகளும், பல பத்தாயிரம் வாக்குகளைச் சிதறடிக்கச் செய்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீதுள்ள தமது வக்கிரத்தை வெளிக்காட்டியவர்களுக்கும், தேர்தலில் தோற்றவர்களுக்கும், கொலைக்குற்றம் சாட்டப்பட்டு சமூகத்திலிருந்து ஒதுங்கி வாழ்ந்தவர்களுக்கும் பட்டியலில் சந்தர்ப்பம் வழங்கியது ஏன் என்ற கேள்வி பலவாறும் மக்களைச் சிந்திக்கத் தூண்டுகின்றது.
எவனுக்காகவோ ஓடி கால்முறிந்து போன முடக்குதிரைகளுக்கு தமிழரசுக் கட்சியிலும் கூட சந்தர்ப்பம் வழங்கியது எரிச்சலைத் தோற்றுவித்துள்ளது.
குறிப்பாக கடந்த பாராளுமன்றத் தேர்தலில் பட்டிருப்புத் தொகுதியிலிருந்து வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்டு 7000க்கு மேற்பட்ட விருப்பு வாக்குகளைப் பெற்ற களுதாவளை கிராமத்தைச் சேர்ந்த ஒருவரும் இம்முறை தமிழரசுக் கட்சியின் சார்பில் போட்டியிடுகின்றார்.
அன்றைய இக்கட்டான நிலையில் இந்த நபருக்கு வராத இன உணர்வும் சமூகப் பொறுப்பும் என்றைக்கும் வரப்போவதில்லை என்பதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் விளங்கிக் கொள்ளாமலில்லை.
இப்பேர்ப்பட்டவர்களுக்கு மாலை சூட்டி தியாகிகளாக லேபல் மாற்றி அவர்களது துரோகத்தனத்தை மறைப்பதற்கான காரியங்களைச் செய்யுமாறு தமிழ் தேசியத்தில் பற்றுள்ள எவரும் அப்பாவித் தமிழ் மக்களை தேர்தல்கள் வாயிலாக நிர்ப்பந்திப்பது தமிழ் மக்களுக்குச் செய்யும் படுபாதகமான துரோகத்தனமாகும்.
நன்றி தமிழ்வின் .