7/19/2012

| |

மஞ்சந்தொடுவாய் கிராமத்திற்கு முன்னாள் முதலமைச்சர் திடீர் விஜயம்

மட்டக்களப்பு மாநகர எல்லைக்குட்பட்ட மஞ்சந்தொடுவாய் கிராமத்திற்கு கிழக்கு மாகாண முன்னாள் முதலiமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேசியத் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் இன்று நேரில் சென்று அங்குள்ள மக்களது உடனடித் தேவைகளை கேட்டறிந்து கொண்டதுடன், அங்குள்ள வீரபத்திரர் ஆலயத்திற்கு விஜயம் செய்தார். இவருடன் மட்டு மாநகர மேயர் திருமதி சிவகீத்தா பிரபாகரன் மற்றும் பிரதி மேயர் ஜோர்ச்பிள்ளை உட்பட கிராமத்தின் தலைவர்களும்  பங்கெடுத்தார்கள்.

குறித்த கிராமத்தினது உடனடித் தேவைகளாக உணரப்பட்ட வீதி அபிவிருத்தி மற்றும் வீட்டுப் பிரச்சினைகளும் ஆலய அபிவிருத்தி என்பன தொடர்பில் உரியநடவடிக்கை எடுக்கப்படும் என முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தன் தெரிவித்தார்.