7/28/2012

| |

மீன்பாடும் தேன் நாடு என்றழைக்கப்படும் மட்டக்களப்பு மாவட்டத்தின் தலைநகரம் இன்று ஒரு நவீன நகரைப் போன்று அழகாக தோற்றமளிக்கின்றது.



மீன்பாடும் தேன் நாடு என்றழைக்கப்படும் மட்டக்களப்பு மாவட்டத்தின் தலைநகரம் இன்று ஒரு நவீன நகரைப் போன்று அழகாக தோற்றமளிக்கின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் அடையாள சின்னமாக இருந்த கல்லடி பாலம் இப்போது அகலப் படுத்தப்பட்டு, புனர்நிர்மாணம் செய்யப்பட்டு வருகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் இப்போது இருக்கும் குடும்பத் தலைவிகளின் எண்ணிக்கை 26ஆயிரத்து 965 ஆகும். இவர்கள் அனைவரும் யுத்தத்தினால் அல்லது சுனாமியினால் அல்லது இயற்கை காரணங்களினால் கணவன்மார்களை இழந்து கைம்பெண்ணானவர்களே இவர்களாகும். இதில் 18ஆயிரத்து 468 பேர் இயற்கை காரணத்தினாலும் 2ஆயிரத்து 883பேர் யுத்தத்தினால் கணவன்களை இழந்தவர்களாகும்.
விவாகரத்தினால் பிரிந்த பெண்கள் ஆயிரத்து 41 பெண்கள் இருக்கிறார்கள். குடும்பத் தலைவன் காணாமல் போனதால் குடும்பப் பொறுப்பை ஏற்றுள்ள பெண்களின் எண்ணிக்கை 349 ஆகும். கணவன் ஊனமுற்றதனால் குடும்பப் பொறுப்பை ஏற்றிருக்கும் பெண்களின் எண்ணிக்கை 507 ஆகும். வேறு காரணங்களினால் குடும்பத்தலைவிகளாக இருக்கும் பெண்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 717 ஆகும். இவர்கள் அனைவருக்கும் கிழக்கின் உதயம் திட்டத்தின் கீழ் தங்கள் குடும்பங்களை கொண்டு நடத்துவதற்கான வாழ்வாதாரங்கள் கிடைத்துள்ளன.
குடிசைக் கைத்தொழில்களை மேற்கொள்வதற்கு இவர்களுக்கு வங்கிக் கடன் உதவியும் கிடைத்துள்ளது. சிறிய விற்பனை நிலையங்களை திறப்பதற்கும், தையல் தொழில் புரிவதற்கும், மீன்பிடித்து வாழ்க்கை நடத்துவதற்கு சிறிய படகுகள் மற்றும் வலைகளும் இவர்களுக்கு இலவசமாக கொடுக்கப்படுகிறது.
இதனால் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கைம்பெண்கள் வறுமையின் பிடியில் இருந்து மீட்கப்பட்டு இன்று ஓரளவு நிம்மதியான வாழ்க்கையை மேற்கொண்டு வருகிறார்கள். மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை 76ஆயிரத்து 930 வீடுகளுக்கும் 789 கைத்தொழிற்சாலைகளுக்கும் 7ஆயிரத்து 452 வர்த்தக நிலையங்களுக்கும் மின்சார இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் சமுர்த்தி நிவாரணம் பெறுபவர்களின் எண்ணிக்கை இன்று 86ஆயிரத்து 564ஆக அதிகரித்திருக்கிறது. 19ஆயிரத்து 51 பேருக்கு மாதாந்தம் 210 ரூபாவும் 7ஆயிரத்து 782 பேருக்கு மாதம் ஒன்றுக்கு 250 ரூபாவும் 8ஆயிரத்து 582 பேருக்கு 150 ரூபாவும் ஆயிரத்து 216பேருக்கு 375 ரூபாவும் 47 ஆயிரத்து 962பேருக்கு 415 ரூபாவும் ஆயிரத்து 486பேருக்கு 525ரூபாவும் 415 பேருக்கு 615ரூபாவும் 70 பேருக்கு 900 ரூபாவும் சமுர்த்தி கொடுப்பனவாக வழங்கப்படுகிறது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்வித்துறையும் சிறப்புற்று விளங்குகிறது. இம்மாவட்டத்தில் எல்லாமாக ஒரு லட்சத்து 26ஆயிரத்து 958 மாணவ, மாணவிகள் இருக்கிறார்கள். இவர்களுக்கு என 326 பாடசாலைகள் இருக்கின்றன. இந்தப் பாடசாலைகளில் 6ஆயிரத்து 70 ஆசிரிய, ஆசிரியைகள் பணிபுரிகிறார்கள். மட்டக்களப்பு மாவட்டத்தில் 21 பிள்ளைகளுக்கு ஒரு ஆசிரியர் என்ற அடிப்படையில் ஆசிரிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று தேர்தல் பிரிவுகள் இருக்கின்றன.
அவை கல்குடா, மட்டக்களப்பு, பட்டிருப்பு பிரிவுகளாகும். இவற்றில் எல்லாமாக 3லட்சத்து 44ஆயிரத்து 750 வாக்காளர்களின் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளன. கல்குடா பிரிவில் 99ஆயிரத்து 955 வாக்களர்களும் மட்டக்களப்பில் ஒரு லட்சத்து 61ஆயிரத்து 116 வாக்காளர்களும், பட்டிருப்பு பிரதேசத்தில் 83ஆயிரத்து 679 பேரும் இருக்கிறார்கள். மட்டக்களப்பு மாவட்டத்தில் எல்லாமாக 14ஆயிரத்து இரண்டு தொலைபேசி இணைப்புகள் இருக்கின்றன.
அங்கு சி.டி.எம்.ஏ. தொலைபேசி இணைப்புகள் 16ஆயிரத்து 597 இருக்கின்றன. ஏ.டி.எஸ்.எல். வலையமைப்பில் 3ஆயிரத்து 477 பேர் இணைந்துள்ளார்கள். மட்டக்களப்பு மாவட்டத்தில் 21 பிரதான அஞ்சல் நிலையங்களும் 66 உப அஞ்சல் நிலையங்களும் காணப்படுகின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு போதனா ஆஸ்பத்திரியும் 4 ஆதார வைத்தியசாலைகளும் 3 மாவட்ட ஆஸ்பத்திரிகளும் 3 மத்திய மருந்தகங்களும் 9 கிராமிய ஆஸ்பத்திரிகளும் ஒரு இடைநிலை ஆஸ்பத்திரியும் என்று எல்லாமாக 21 ஆஸ்பத்திரிகள் இருக்கின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தில் இப்போது 92ஆயிரத்து 771 நிரந்தர வீடுகளும் 20ஆயிரத்து 537 நிர்மாணம் பூர்த்தி பெறாத வீடுகளும் 35ஆயிரத்து 414 தற்காலிக வீடுகளும் இருக்கின்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 5ஆயிரத்து 944 பேர் ஓய்வூதியம் பெறுகிறார்கள். மட்டக்களப்பில் விவசாயம் பருவகால மழையுடன் மேலோங்கி நிற்கின்றது. அங்கு 49ஆயிரத்து 850 விவசாய குடும்பங்கள் இருக்கின்றன. பெரும்போகத்தில் அங்கு 18ஆயிரத்து 987மெற்றிக் தொன் நெல் அறுவடை செய்யப்படுகின்றது. சிறு போகத்தில் 87ஆயிரத்து 386 மெற்றிக் தொன் நெல் அறுவடை செய்யப்படுகின்றது. மட்டக்களப்பில் 6 பாரிய நீர்த் தேக்கங்களும் நடுத்தர அளவிலான 15 நீர்த்தேக்கங்களும் 302 சிறிய நீர்த்தேக்கங்களும் காணப்படுகின்றன.
இங்கு கால்நடை வளர்ப்பு, பால் உற்பத்தி, கோழி முட்டை உற்பத்தியும் சிறப்புற்று விளங்குகின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சனத்தொகையில் 71.87சதவீதம் தமிழர்களாவர். 26.84 சதவீதத்தினர் முஸ்லிம்களாவர். 0.66 சதவீதத்தினர் பறங்கியராவர். 0.58 வீதத்தினர் சிங்களவராகும். ஏனையோர் 0.05 சதவீதமாகும். மட்டக்களப்பில் மீன் உற்பத்தி 41ஆயிரத்து 655.2 மெற்றிக் தொன் ஆக அதிகரித்துள்ளது. இவர்கள் நன்னீர் மீன் பிடிப்பிலும், ஆழ்கடல், கரையோர மீன்பிடிப்பிலும் ஈடுபட்டு மீன் உற்பத்தியை பெருக்கி வருகிறார்கள். இவ்விதம் மீன்பாடும் தேன் நாடு இன்று வளம்மிக்க பிரதேசமாக மாறிக்கொண்டிருக்கிறது.