7/26/2012

| |

அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோத ஆட்கடத்தல்:முக்கிய சூத்திரதாரிகூட்டமைப்பு வேட்பாளர் கைது

பிரதான சந்தேகநபர் சுரேஷ்குமார் தமிழ்க் கூட்டமைப்பு வேட்பாளர்
அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோத ஆட்கடத்தல்:

முக்கிய சூத்திரதாரிகள் மூவர் திருகோணமலையில் கைது


சட்ட விரோத ஆட்கடத்தலுடன் தொடர்புடையவர்கள் எனச்சந்தேகிக்கப்பட்ட மூன்று பேரை திருகோணமலை பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
கடல் வழியாக அவுஸ்திரேலியா உட்பட வெளிநாடுகளுக்கு ஆட்கடத்தல்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் மேற்படி மூவரில் ஒருவர் திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபையின் தலைவராக இருந்து அந்தப் பதவியை இராஜினாமாச் செய்து தற்போது கிழக்கு மாகாண சபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளராகவுள்ள வெள்ளதம்பி சுரேஷ் குமார் (வயது 38) என்பவராவார்.
வெள்ளத்தம்பி சுதாகரன் (வயது 39) தண்டாயுதபாணி கரிகாலன் (வயது 39) உட்பட மூவருமே கைது செய்யப்பட்டுள்ளனர். பிரதான சந்தேக நபரான சுரேஷ் குமார் அப்பாவி தமிழ் மக்களை ஏமாற்றி அரசியல்வாதியாகவிருந்து சுமார் 2 1/2 கோடி ரூபாவை மோசடி செய்துள்ளார். புலம்பெயர் தமிழர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டு இவர் ஆட்கடத்தல் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார் என்றும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
கிழக்கு மாகாணத்திலிருந்து கடந்த காலங்களில் இவ்வாறான ஆட்கடத்தல் நடவடிக்கைகள் தொடர்ந்த வண்ணமே இருந்தன. 2012-01-01 ஆம் திகதி முதல் இன்றைய நாள்வரை சட்ட விரோதமாக செல்ல முயன்ற 620 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 40 பேர் ஆட்கடத்தலில் ஈடுபட்ட பிரதான சந்தேக நபர்களாவர்.
தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என தம்மை காட்டிக்கொண்டு அரசியலிலும் ஈடுபட்டுக்கொண்டு மக்களின் உழைப்பை அவர்கள் தம் வாழ்நாள் முழுவதும் சம்பாதித்த பணத்தை நகைகளை ஏமாற்றி மோசடி செய்துவருகின்றனர். இவ்வாறான நபர்களிடமிருந்து தமிழ் மக்கள் தம்மை பாதுகாத்துக்கொள்ளுமாறும் விழிப்பாக இருக்குமாறும் பொலிஸ் திணைக்களம் கேட்டுக் கொள்கிறது.
2012.07.11 ஆம் திகதி நமோ மரியா மற்றும் சிங்களே என்ற இரண்டு ஆழ்கடல் வள்ளங்களை கடற்படையினர் கைப்பற்றினர். இதில் 82 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த 20ஆம் திகதி மற்றுமொரு வள்ளத்திலிருந்த 53 பேர் கைது செய்யப்பட்டனர்.
சட்ட விரோதமாக அவுஸ்திரேலியா செல்வதற்காக 2 இலட்சம் ரூபா முதல் 12 இலட்சம் ரூபா வரையில் ஆள் கடத்தலில் ஈடுபடும் நபர்கள் பெற்றுவரு கின்றமையும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.