7/17/2012

| |

மண்முனை வடக்கு பிரதேசத்தின் பொது அமைப்புக்கள் முன்னால் முதலமைச்சருடன்; தேர்தல் குறித்து ஆராய்வு

கலைக்கப்பட்ட கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் இடம்பெற உள்ள நிலையில் பல்வேறு கட்சிகள் சுயேட்சைக் குழுக்கள் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. அந்த வகையிலே இன்று(15.07.2012) மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேசியத் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தனை சந்தித்து தேர்தல் குறித்து கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தார்கள்.
 
இக் கலந்துரையாடலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன், தேசிய அமைப்பாளர் பிரதீப் மாஸ்டர், மட்டக்களப்பு மாநகர சபையின் பிரதி மேயரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயற்குழு உறுப்பினருமான ஜோர்ச்பிள்ளை உட்பட மண்முனை வடக்கு பிரதேசத்தின் கிராம மட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டார்கள்.
கலந்துரையாடலின் பின்னர் தாங்கள் அனைவரும் இம் முறை மீண்டும் ஓர் தமிழ் முதலமைச்சர் அதுவும் சந்திரகாந்தனை முதலமைச்சராக்குவதற்கு அனைத்து உதவிகளையும் வழங்குவோம் என முதலமைச்சரிடம் உறுதியளித்தார்கள்.
 
இவ்வாறு மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பல பொது அமைப்புக்கள் , ஆலயநிருவாக சபையினர்கள், கல்வியாளர்கள் , பொது மக்கள் என பலர் தொடர்ந்து முதலமைச்சருக்கான ஆதரவினை தெரிவித்த வண்ணமே உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.