7/18/2012

| |

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி வேட்பாளர் பட்டியல் தயார்

 ஐக்கிய மக்கள் சுதந்திர  கூட்டமைப்பில்  தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியை சேர்ந்த 12 பேர் கிழக்கு மாகாணத்தில் போட்டியிடுகின்றனர்.மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னாள் முதல்வர் சிவநேசதுரை சந்திரகாந்தன், முன்னாள்  மாகா  சபை உறுப்பினர்கள்  நாகலிங்கம் ஜெயம், பிரசாந்தன், பிரதீப் மாஸ்டர், மற்றும் மோகன் ,வெல்லாவெளி பிரதேச சபை தவிசாளர் சிறிதரன் என்கின்ற 6 பேரும், போட்டியிடவுள்ளனர் 
திருமலை மாவட்டத்தில் முன்னாள்  மாகா  சபை அமைச்சர் நவரட்ணராஜா, நளினிகாந்தன் (தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவராகவிருந்து சுட்டுக்கொல்லப்பட்ட ரகு வின் சகோதரன்) செந்தூரன் என்கின்ற மூவரும், போட்டியிடவுள்ளனர் 
அம்பாறை மாவட்டத்தில் முன்னாள்  மாகா  சபை உறுப்பினர்கள் புஸ்பராஜா , செல்வராஜா , மற்றும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் மூத்த உறுப்பினர் இனியபாரதி என்கின்ற மூவரும் போட்டியிடுவதாக அறிய முடிகிறது