எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி அமோக வெற்றி பெற வேண்டும். அதே வேளை மீண்டும். சந்திரகாந்தன் முதலமைச்சராக வர வேண்டும். என்ற ஆர்வத்தின் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டதின் பல பாகங்களிலும் பல்வேறு அரசியல் பிரச்சார ஆதரவுக் கூட்டங்கள் இடம் பெற்ற வண்ணம் உள்ளன. அந்த வகையில் இன்று கல்லடி பேச்சி அம்மன் கலாச்சார மண்டபத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயற்குழு உறுப்பினர் செல்வி தலைமையில் மேற்படி கூட்டம் இடம் பெற்றது.
இக் கூட்டதில் கலந்து கொண்டவர்கள் முழுமையான ஆதரவினை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கு வழங்குவதோடு கட்சின் பிரச்சாரப் பணிகளிலும் தாங்கள் ஈடுபடத் தயார் எனவும் தெரிவித்தார்கள். இதில் மண்முனை மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் சுப்பிரமணியம் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் கொள்கைப் பரப்பு செயலாளர் ஆஸாத் மௌலானா ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.