"கிழக்கு மாகாண சபை தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இணைந்து போட்டியிட்டிருந்தால் அது ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு பெரும் சவாலாக அமைந்திருக்கும்.
எனினும் தற்போது இவ்விரு கட்சிகளும் தனித்தனியே போட்டியிடுவதால் அது ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு ஒரு சவாலாக இல்லை" என கிழக்கு மாகாண முன்னால் முதலமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட தலைமை வேட்பாளரும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
மட்டக்களப்பிலுள்ள அவரது அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
" ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி போட்டியிடுகின்றது. தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் சார்பில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் 12 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இதில் மட்டக்களப்பில் 6 பேரும் அம்பாறையில் 3 பேரும், திருகோணமலையில் 3 பேரும் போட்டியிடுகின்றோம். இதில் மட்டக்களப்பு மாவட்டத்தில் குறைந்தது 5 ஆசனங்களையும் அம்பாறை மாவட்டத்தில் ஓரு ஆசனத்தையும் அதே போன்று திருகோணமலை மாவட்டத்தில் ஒரு ஆசனத்தையும் பெற்று தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்குள் அதிகமான ஆசனங்களை பெறும்.
கடந்த மாகாண சபையின் ஊடாக கிழக்கு மாகாணத்தில் கல்வி, சுகாதாரம், வாழ்வாதாரம் என பல்வேறு அபிவிருத்திகளை மேற்கொண்டுள்ளோம்.அடுத்த மாகாண சபையின் ஐந்தாண்டுகளிலே எங்களது கிழக்கு மாகாணத்திலே உயர்ந்த கல்வி வளர்ச்சி அதே போன்று எமது மாகாணத்திலே 43,000 குடிசைகiயும் தகரத்திலான வீடுகளையும் முழுமையாக கல் வீடுகளாக பூர்த்தி செய்தல், உற்பத்தி துறையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்துதல், சுற்றுலா துறையை அதிகரித்தல், தனியார் முதலீட்டை ஊக்குவித்தல், இளைஞர் யுவதிகளுக்கான வேலைவாய்ப்புக்களை அதிகாரித்தல் போன்ற பல வேலைத்திட்டங்களை முன்னெடுக்க இருக்கின்றோம்
தேசத்துக்கான மகுடம் திட்டத்தின் கீழ் எமது மாகாண மக்களுக்கான உட்கட்டுமான வேலைத்திட்டங்களை மேற்கொள்ளவுள்ளோம்.
எமது மாகாண மக்கள் நீண்ட காலமாக அரசியல் ரீதியாக நலிவடைந்த மக்கள் என்ற வகையில் எமது மக்களுக்கான வாழ்க்கை தரத்தை உயர்த்தல் உட்கட்டுமான வேலைகளை வழங்குதல் அது மட்டுமல்லாமல் அதிகார பகிர் வு ரீதியாக மாகாண சபையை வலுவாக்குதல் விடயங்ளை எமது கட்சி முன்நின்று செய்து கொடுக்கும்.
எமது மாகாண மக்கள் நீண்ட காலமாக அரசியல் ரீதியாக நலிவடைந்த மக்கள் என்ற வகையில் எமது மக்களுக்கான வாழ்க்கை தரத்தை உயர்த்தல் உட்கட்டுமான வேலைகளை வழங்குதல் அது மட்டுமல்லாமல் அதிகார பகிர் வு ரீதியாக மாகாண சபையை வலுவாக்குதல் விடயங்ளை எமது கட்சி முன்நின்று செய்து கொடுக்கும்.
அதற்கு முன்னராக இந்த தேர்தலில் வெற்றி பெறுவது காலத்தின் தேவையாகும். இதற்கு தமிழ் மக்களின் கட்டாய தேவையாகவும் இது உள்ளது.
இந்த தேர்தல் சுதந்திரமானதும் ஜனநாயகமானதுமான பிரச்சினைகளற்ற வன்முறைகளற்ற தேர்தலை நடாத்த அரசாங்கம் உறுதி பூண்டுள்ளது" என்றார்.
இந்த தேர்தல் சுதந்திரமானதும் ஜனநாயகமானதுமான பிரச்சினைகளற்ற வன்முறைகளற்ற தேர்தலை நடாத்த அரசாங்கம் உறுதி பூண்டுள்ளது" என்றார்.
இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிடும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் செயலாளர் பூ.பிரசாந்தன், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.