இலங்கை தமிழரசுக் கட்சியின் பிரதி செயலாளர் நாயகமும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டதரணி கே. துரைராஜசிங்கத்தின் வீட்டின் கதவுகள் அவரது மனைவியால் பூட்டுப்போடப்பட்டு அவர் வெளியேறதாவாறு செய்யப்பட்டுள்ளன.
இச் சம்பவம் இன்று அதிகாலை (18.7.20120) இடம் பெற்றுள்ளது. இவர் வசித்து வரும் மட்டக்களப்பு லேக் வீதியிலுள்ள இவரின் வீட்டின் கதவுகளுக்கு சங்கிலி போடப்பட்டு பூட்டு போடப்பட்டுள்ளது.
இவர் தூங்கிக் கொண்டிருக்கும் போது இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது. இவர் காலை வெளியில் வருவதற்கு மயற்சித்த போது கதவுகள் சங்கியிலினால் பூட்டு போடப்பட்டுள்ளதை அவதானித்து பொலிசாருக்கு அறிவித்துள்ளார்.
இதையடுத்து பொலிசார் ஸ்தலத்திற்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்ததுடன் போடப்பட்ட பூட்டை உடைத்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு பொலிசார் மனைவியிடம் விசாரணைகளை நடாத்திவருகின்றனர். மேற்படி சட்டத்தரணி துரைராஜசிங்கம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் கிழக்கு மாகாண சபை தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தலைமை வேட்பாளாராக போட்டியிடவுள்ளமைக்கு அவரது மனைவியிடமிருந்து கிளம்பிய எதிர்ப்பை ஒட்டிய குடும்பகுழப்பமே காரணம் என தெரிய வருகின்றதுதெரியவருகின்றது