நாம் சரியான முறையில் சிந்தித்து செயலாற்ற வேண்டிய நேரமிது. தேர்தல் காலங்களில் மட்டுமே உங்களைத் தேடி வருபவர்களிடம் கவனமாயிருங்கள்.
வாகரை மக்களை இலகுவில் ஏமாற்றி விடலாம் என்ற எண்ணம் பலருக்கு இருக்கின்றது. மதுபான அரசியல் செய்ய இங்கே வருபவர்களிடம் ஏமாறாதீர்கள்.
வாகரையில் உங்களை மீளக் குடியமர்த்துவதில் முன்னின்று செயற்பட்டவர்கள் யார்? ஒரு மரண வீடு நிகழ்ந்தாலும் கூட ஓடி வந்து துன்பத்தில் பங்கெடுப்பவர்கள் யார்? எத்தனை வருடத்தின் பின்னர் வாகரையில் மின்சார வசதியைக் கண்டிருக்கின்றோம், மாட்டு வண்டிகள் மாத்திரமே பயணிக்கக் கூடிய வீதிகள் இன்று வாகரையில் நெடுஞ்சாலைகளாகக் காட்சியளிக்கின்றன. எதையும் எம் மக்கள் மறந்து விடக் கூடாது.
30 வருடங்களில் துன்பத்தையே அனுபவித்த எமக்கு சிறப்பான அபிவிருத்திகளைக் கொண்டு வந்து காலடியில் போட்ட பிள்ளையானை நாம் மறப்பதா?
ஓட்டமாவடிக்குச் சென்று பொருட்களைக் கொள்வனவு செய்து வர எத்தனை சோதனைச் சாவடிகளை கடக்க வேண்டியிருந்தது. இன்று நிலைமை எவ்வாறு மாறியிருக்கின்றது, சிந்தியுங்கள்.

ஒரு வீடு கூடக் கட்டித்தர திறமையற்ற கூட்டமைப்பினருக்கு வாக்களிப்பதா? அல்லது களமுனைகள் தொட்டு இன்று வரை எமது பிரதேச மக்களோடு மக்களாய் நிற்கும் பிள்ளையானை ஆதரிப்பதா? எம் மக்களில் எமக்கு ஆணித்தரமான நம்பிக்கை இருக்கின்றது. அவர்கள் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுக்கே ஆணையினை வழங்குவார்கள் என்று என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிரதி தலைவருமான நாகலிங்கம் திரவியம(ஜெயம்); தெரிவித்தார்.
நேற்று சனிக்கிழமை கதிரவெளி புதூர் மக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட அரசியல் கலந்துரையாடல் நிகழ்விலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.இக் கலந்துரையாடலில் முதலமைச்சர் வேட்பாளர் சந்திரகாந்தன் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், ஆலய பரிபாலன சபையினர் மற்றும் விளையாட்டு கழகங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டார்கள்.