எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத்தேர்தலுக்கு மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் அலுவலகம் தயாராகிவருகின்றது. இன்று மாகாண சபைத்தேர்தலுக்கான முதலாவது கட்டுப்பணம் சுயேற்சைக்குழு ஒன்றிற்காக கட்டப்பட்டதாக மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் தெரிவித்தார்.
காத்தான்குடியைச் சேர்ந்த ஏ.ஜீ.எம்.ஹாறூன் என்பவர் இக்கட்டுப்பணத்தைச் செலுத்தியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் விடுமுறை நாட்கள் உட்பட வாரத்தில் ஏழு நாட்களும் கிழக்கு மாகாண சபைத்தேர்தலுக்கான அலுவல்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றுவருகின்றன.
இம்மாவட்டத்தில் எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் வாக்களிக்கவென 3 இலட்சத்து 47 ஆயிரத்து 99 ஏபர் தகுதி பெற்றுள்ளதாகவும் உதவி தேர்தல் ஆணையாளர் அசங்க ரத்னாயக்கா தெரிவித்தார்.