இன்று மாலை வரைக்கும் கிழக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிடுவதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டு அரசியல் கட்சிகள் வேட்பு மனுத்தாக்கள் செய்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் தெரிவித்தார்.
நேற்றைய தினம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் ஜனசெத பிறமுன எனும் அரசியல் கட்சி வேட்புமனுத்தாக்கள் செய்யப்பட்டது ஏற்கனவே ஐக்கிய சோசலிச கட்சி வேட்புமனுவை தாக்கள் செய்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று மாலை வரை 11சுயேட்சைக்குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் தெரிவித்தார்.
இதே வேளை முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வி தங்கேஸ்வரி கிழக்கு மாகாண சபை தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடுவதற்காக இன்று மாலை (16.7.2012) கட்டுப்பணம் செலுத்தியதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தங்கேஸ்வரி தெரிவித்தார். எதிர் வரும் வியாழக்கிழமை காலை வேட்புமனுப்பத்திரத்தை தாக்கள் செய்யவுள்ளதாகவும் தங்கேஸ்வரி மேலும் தெரிவித்தார்.