7/05/2012

| |

கட்சிகளும் சுயேச்சைகளும் நாய், புலிச்சின்னங்களை பயன்படுத்துவதற்கு தடை

தேர்தலில் போட்டியிடும் அங் கீகரிக்கப்பட்ட கட்சிகளினதும் சுயேச்சைக் குழுக்களினதும் சின் னங்களிலிருந்து நாய் மற்றும் புலிச் சின்னங்கள் நீக்கப்படுவதாக தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
1981 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க பாராளுமன்ற தேர்தல்கள் சட்டத்தின் பிரகாரம் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் 139 சின்னங்கள் அங்கீகரிக்கப்படுவதாக 1686/46 2010 டிசம்பர் 31 ஆம் திகதி அரச வர்த்தமானி மூலம் தேர்தல் ஆணையாளர் அறிவித்துள்ளார்.
இவ்வாறு அங்கீகரிக்கப்பட்டிருந்த கட்சிச் சின்னங்களிலிருந்தே நாய் மற்றும் புலிச் சின்னங்கள் நீக்கப்படுவதாக குறிப்பிட்டார்.
இதேவேளை புலிச் சின்னத்துக்குரிய கட்சி தடை செய்யப்பட்டதால் இச்சின்னம் நீக்கப்படுவதுடன் இனிவரும் காலங்களில் நாய், புலி, சிங்கம், தாமரை, சுத்தியலுடன் கூடிய அரிவாள், இரண்டு வாள்கள், ஆலவட்டம் போன்ற சின்னங்களுமே இனிவரும் காலங்களில் வழங்கப்படமாட் டாது என்றும் குறிப்பிட்டார்.
அத்துடன் நாயை சின்னமாக ஏற்றுக்கொள்ள எந்தவொரு கட்சியும் சுயேச்சைக் குழுக்களும் முன்வருவதுமில்லை. இதேபோன்று புறா சின்னமும் காளை மாடு சின்னமும் அவற்றுக்குரிய கட்சிகளும் ரத்துச் செய்யப்பட்டுள்ளன. எனவே இவ்விரு சின்னங்களையும் சுயேச்சைக் குழுக்கள் பயன்படுத்த முடியும் என்றும் தேர்தல் ஆணையாளர் குறிப்பிட்டார்.