கிழக்கு மாகாண சபைத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கின்றது. அந்தவகையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்குரிய கிழக்கு மக்களின் ஆதரவும் வெற்றி வாய்ப்பும் அதிகரித்து வருகின்ற அதேவேளை தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குரிய மக்களின் ஆதரவு குறைந்து வருவதுடன், படுதோல்வியடைவதற்குரிய சாத்தியங்கள் தெட்டத்ததெளிவாகவும் வெளித்தெரிகின்றது. இந்நிலைமைகளுக்கிடையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் தேர்விற்குள் ஒளிந்திருக்கும் மர்மம் என்ன? என்பதை இக்கட்டுரை ஆராய்கின்றது.
கிழக்கு மகாணசபைத் தேர்தலில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது களமிறங்கும்போதே தாம் முதலமைச்சராக வரப்போவதில்லை என்பதை நன்கறிந்திருந்ததுடன், தற்போது அரசியலில் ஈடுபடும் பாராளுமன்ற உறுப்பினர்களின் எதிர்கால நிலைப்பையும் கருதியே வேட்பாளர் தேர்வினை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அதாவது தமது வேட்பாளர் தேர்வில் மக்கள் செல்வாக்கற்றவர்களையும், தமிழ் மக்களுக்கு துரோகமிழைத்தவர்களையும், கடத்ல்காரர்களையும் வேட்பாளர்களாக தேர்வுசெய்ததிலிருந்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை அறிந்துகொள்ள முடிகின்றது.
கிழக்கு மாகாண சபைத் தேர்தலிலே தமது கட்சி வெற்றி பெறாது என்றும், முதலமைச்சர் பதவி கிடைக்கப்போவதில்லை என்றும் அறிந்திருந்தமையும் தமது வேட்பாளர் தேர்வில் சாதாரணமானவர்களையே குறிப்பாக மக்கள் செல்வாக்கற்றவர்களையும் குற்றவாளிகளையும் தேர்வு செய்தமைக்கு முதலாவது காரணமாகும். கிழக்கு மாகாண சபை தேர்தலில் வெற்றிபெற்று முதல்வர் பதவி வகிப்பது என்பது மிகவும் அதிகாரமுள்ள ஒரு பதவியாகும். குறிப்பாக பாராளுமன்னற உறுப்பினர்கள் பாராளுமன்றத்திலே தனது அதிகாரத்தை செலுத்தமுடியும். ஆனால் முதல்வர் பதவி என்பது கிழக்கு மண் முழுவதையும் நிர்வகிக்கின்ற ஒரு அதிகாரமாகும். கிழக்கு மண்ணின் அபிவிருத்தி திட்டங்கள் அனைத்தும் கிழக்கு மாகாண சபைக்கூடாகவே இடம்பெறும்.
அந்தவகையில் இத்தகைய முதல்வர் பதவியை இலக்கு வைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு களத்தில் இறங்கியிருந்தால் நிச்சயம் தற்போதைய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அவர்களோ அல்லது வேறு யாராவது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களோ இத்தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை வேட்பாளர்களாக போட்டியிட்டிருப்பார்கள். ஆனால் இத்தேர்தலில் போட்டியிட்டால் வெற்றியீட்டமுடியாது என்றும் முதல்வர் பதவியோ அல்லது மாகாணசபை சபை உறுப்பினர் பதவியைக்கூட பெறமுடியாது என்று கருதியே தற்போதைய பாராளுமன்ற உறுப்பினாகள் எவரும் இத்தேர்தலில் போட்டியிடத் தீhமானிக்கவில்லை. ஏnனினில் தமது பாராளுமன்றப் பதவியையாவது வைத்துகொண்டிருப்போம் என்று கருதியமையே ஆகும்.
அந்தவகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது இத்தடவை தலைமைவேட்பாளாகளாக தேர்தலில் நிறுத்தியிருப்பவாகள் எவரும் மக்கள் செல்வாக்கற்வாகளாகவே காணப்படுகின்றனர். முன்னாளில் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து பின்னர் மக்களுக்கு சேவைசெய்யாததனால் வெறுப்படைந்த மக்களால் தோற்கடிக்கப்பட்ட துரைராசசிங்கம் என்பவரை மட்டக்களப்பில் தலைமை வேட்பாளராக நிறுத்தியுள்ளது. உண்மையில் அதேபோன்று திருகோணமலையில் தண்டாயுதபாணி; என்பவரையும், அம்பாறையில் மகேந்திரன் என்பவரையும் தலைமை வேட்பாளர்களாக களமிறக்கியது. இவ்வாறு மக்கள் செல்வாக்கற்றவர்களை தலைமை வேட்பாளர்களாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நிறுத்தியுள்ளமையே தமது கட்சி படுதோல்வியடையும் என்பதை முன்கூட்டியே உணர்ந்துள்ளமையயை எடுத்துக்காட்டுகின்றது.
தற்போது பாராளுமன்ற உறுப்பினர்களாக வலம்வரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரின் எதிர்கால அரசியல் இருப்பிற்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதிலும் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் சுயநலமாகக் கருதியமையும் மக்கள் செல்வாக்கற்றவர்களை தேர்தலில் களமிறக்கியுள்ளமைக்கு மற்றொரு காரணம் எனக் கூறப்படுகின்றது.
இத்தேர்தலில் மக்கள் செல்வாக்குள்ளவர்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் களமிறக்கினால் அவர்கள் இன்னும் இத்தேர்தலின் மூலம் பிரபல்யமடைவதுடன், அடுத்ததடவை இடம்பெறும் பாராளுமன்ற தேர்தலில் தம்மை தோல்வியடையச் செய்து விடுவர் என்று சில சுயநலமுடைய பாராளுமன்ற உறுப்பினர்கள் கருதியிருந்தனர். இக்காரணத்தினால் ஏனோதோனோ என்ற அலட்சியப் போக்கில் வீணாக தமிழ் மக்களை குழப்புவதற்காகவும் பொருத்தமற்ற வேட்பாளர்களைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்வு செய்தது.
அண்மையில் திருமலை மாவட்ட தமிழ்தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் ஒருவர் வெளிநாட்டுக்கு இலங்கையர்களை கடத்துவது தொடர்பில் கைதுசெய்யப்பட்டார். இத்தகைய கடத்தல் காரர்களை தமது கட்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு களமிறக்கியிருந்தது. எத்தனையோ நல்லவர்களெல்லாம் இருக்கின்றபோது இத்தகைய கடத்தல்காரர்கள்தானா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குக் கிடைத்தது. அதுமட்டுமன்றி கடந்த காலத்தில் ரெலோ, புளோட்,ஈபிஆர்எல்எப் போன்ற துணைஆயுதக் குழுக்களில் இருந்து தமிழ் மக்களுக்கு பல இன்னல்களை விளைவித்தவர்களையும் தற்போது உள்வாங்கியுள்ளது. அதுமட்டுமா முஸ்லிம் இனத்தவர்களையும்வேட்பாளர்களாக வீணாக தேர்தலில் களமிறக்கியுள்ளது. இந்த முஸ்லிம்களுக்கு சிறிய அளவில் கூட வாக்குகள் கிடைக்கப்போவதில்லை என்பதை அறிந்தும் கூட தமது சுநலங்களுக்காக தேர்தலில் களமிறக்கியுள்ளதானது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் சாணாக்கியமற்ற தன்மையினையும், மிகவும் பிற்போக்கான அரசியில் பாதையில் பயணிக்கின்றமையையும் எடுத்துக்காட்டுகின்றது.
தாம் வெற்றிபெறப்போவதில்லை,நமது பாராளுமன்றக் கதிரைக்கு ஆபத்து வரக்கூடாது போன்ற இரு காரணங்கiளாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தமது வேட்பாளர்களை நிறுத்தியுள்ளமையினால் கிழக்கில்; தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்களாக இருந்த ஒருசிலரையும் கூட மிக விரைவாக அண்மைக்காலத்தில் இழந்து வருவதனை அவர்களுடைய தேர்தல் பிரசாரக்கூட்டங்கள் தௌ;ளத்தெளிவாக உணர்த்தி நிற்கின்றன.