குறித்த தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பிரசன்னமும் ஆளும் பொது சன ஐக்கிய கூட்டமைப்புடன் ஆசன ஓதுக்கீட்டில் உடன்பாடு காண முடியாத நிலையில் தனித்து போட்டியிடுவதென்ற முஸ்லீம் காங்கிரசின் முடிவும் பரபரப்பான செய்திகளாகவும் விமர்சனத்துக்குரிய விடயங்களாகவும் காணப்படுகின்றன. வட கிழக்கு இணைந்த மாகாண சபைத் தேர்தலில் அன்றி பிரிக்கப்பட்ட கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடமாட்டோம் என வீராப்புக் கூறி கடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலை புறக்கணித்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் திடீரென கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் களமிறங்கியிருப்பதானது தனித்தமிழ் நாட்டு கோரிக்கையினை கை விட்டு ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு என்ற நிலைப்பாட்டுக்கு இறங்கி வந்த தவிர்க்கமுடியாத வரலாற்று நிகழ்வு போன்று கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் குறித்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் பங்கெடுத்துக் கொண்டிருப்பதன் மூலம் வட கிழக்கு இணைப்பு என்ற கோரிக்கையினையும் கைவிட்டு வடக்கும் கிழக்கும் தனித்தனி மாகாணங்களாக ஆக்கப்பட்டிருப்பதை அங்கீகரிக்கும் தமது நிலைப்பாட்டினை பகிரங்கமாக ஒட்டு மொத்த தமிழ் மக்களுக்கும் அறிவித்துள்ளார்கள் என்பதையே வெளிச்சப்படுத்துகின்றது இவ்விதமாக அடிக்கடி தடம் புரளும் சந்தரப்பவாத அரசியல் போட்பாடுகளுடைய தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பின்னால் நின்று கொண்டிருக்கின்ற தமிழ் மக்களது நிலைமைதான் பரிதாபத்துக்குரியது.இதை விட முஸலீம் காங்கிரசைப் பொறுத்த வரையில் இட ஒதுக்கீடு பற்றாக்குறையினை முன்னிறுத்தி தனித்து போட்டியிட முடிவெடுத்திருப்பது விவேகமான முடிவா இல்லையா என்ற விவாத்ததுக்கப்பால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயா அவர்கள் முஸலீம் காங்கிரஸின் முடிவை முண்டியடித்துக் கொண்டு விவேகமான முடிவு என வரவேற்று புகழ் பாடியிருக்கின்றார் இதிலிருந்தே அதாவது எப்போதுமே இனங்களுக்கிடையே பிரித்தாளும் தந்திரத்தின் மூலம் அரசியல் செய்யும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரின் தலைவர் முஸ்லீம் காங்கிரசின் முடிவை அவசரஅவசரமாக பாராட்டியிருக்கின்றார் என்பதிலிருந்து முஸலீம் காங்கிரசின் முடிவின் பெறுமானத்தை அதன் பலாபலன்களை சாதாரண அறிவுள்ள ஒவ்வொருவராலும் புரிந்து கொள்ள முடியும்.
எது எப்படியோ முஸலீம் காங்கிரசின் இறுதி நேர முடிவு தமிழ்த் தேசிய கூடடமைப்புக்கு மட்டுமே இனிப்பான செய்தியாக இருக்கமுடியும் இத்தகைய அரசியல் காட்சிகளுக்கப்பால் கிழக்கு மாகாணத்தில் வசிக்கக்கூடிய மூவினமக்களிடையே முரண்பாடுகளை கூர்மைப்படுத்தும் வகையில் நாட்டிற்கு வெளியே உள்ள தீய சக்திகளால் வழி நடாத்தப்படும் சந்தர்ப்பவாத அரசியல் வாதிகளை அடையாளம் கண்டு அத்தகையவர்களை நிராகரிப்பதுடன் கிழக்கு மாகாணத்தில் வசிக்கக் கூடிய மூவின மக்களும் தமது வாழ்வியலை வளம்படுத்தக்கூடிய அதற்காக உண்மையாக உழைக்கின்ற – நாட்டை நேசிக்கின்ற இன இணக்கப்பாடுகளை விரும்புகின்ற – அமைதியினையும் சமாதானத்ததையும் கொண்டுவர முயற்சிக்கின்ற- மாகாணத்தினை அபிவிருத்தி பாதையில் தொடர்ந்து இட்டுச்செல்ல வல்ல தலைவர்களைத் தேரந்தெடுப்பர்கள் என்பதே தேச நல்ன விரும்பிகளது எதிர்பார்பபாகும்.