7/12/2012

| |

அனல்பறக்கும் ரி. எம். வி. பியின் தேர்தல் பிரச்சாரம்


தற்போது விறு விறுப்பாக பேசப்படுகின்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலிலே அரசியல் கட்சிகள் முண்டியடித்துக் கொண்டு தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன.  தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்டுள்ள நிலையில் சில அரசியல் கட்சிகள் தற்போது கட்டுப் பணத்தை செலுத்திய வண்ணம் உள்ளன.
அந்த வகையிலே தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியும் தற்போது தேர்தலக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டு வருகின்றது. கடந்த (08.07.2012) அன்று வாழைச்சேனை மற்றும் வாகரைப் பிரதேசங்களுக்கான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேர்தல் பிரச்சாரக் குழு நியமனம் செய்யப்பட்டு அவர்களுக்கான வேலைகளும் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேசியத் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களால் பகிர்ந்தளிக்கப்பட்டது.
இந் நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப் பலிகள் கட்சயின் பிரதி தலைவர் யோகவேள், பிரதேச சபையின் தவிசாளர் உதயஜீவதாஸ், கட்சியின் பிரதேச அமைப்பாளர்கள, கட்சியின் உறுப்பினர்கள், அதிபர்கள், மற்றும் கட்சித் தொண்டர்களும் கலந்து கொண்டார்கள்.