எதிர்வரும் செப்ரம்பர் மாதம் நடைபெறவுள்ள வட மத்திய சப்ரகமுவ மற்றும் கிழக்கு, மாகாண சபை தேர்தலுக்கு வேட்பாளர்களை தெரிவு செய்யும் போது அவதானமாக செயற்படுமாறு அரசியல் கட்சி தலைவர்களிடம் பெவ்ரல் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
குறித்த மாகாண சபை தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன இந்நிலையிலேயே பெவ்ரல் அமைப்பு இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இம் மாகாண சபைகளுக்கான வேட்பாளர்களை தெரிவு செய்யும் போது, அவதானமாக தெரிவு செய்யுமாறும், வேட்பாளர்கள் லஞ்சம் மற்றும் ஊழல் சம்பவங்களுடன் தொடர்பு இல்லாதவர்களாக இருக்க வேண்டும் எனவும், மாகாண சபை உறுப்பினர்களுக்கான வேட்பாளர்களை தெரிவு செய்யும் போது அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அக்கறையுடன் செயற்பட வேண்டும் எனவும், பெவ்ரல் அமைப்பின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், எதிர்வரும் 6 ஆம் திகதி நடைபெறவுள்ள Mahaweli மத்திய நிலையத்தில் நடைபெறவுள்ள நேர்முகத் தேர்வில் அனைத்து வேட்பாளர்களும் கலந்து கொள்ள வேண்டும் என பெவ்ரல் அமைப்பின் பணிப்பாளர் றோஹன கெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.