7/20/2012

| |

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டடைப்பின வேட்பு மனுவை முதலமைச்சர் வேட்பாளர் சந்திரகாந்தன் கையளித்தார்.

கிழக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிடுவதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி, உட்பட சுயேட்சைக் குழுக்கள் இன்று வியாழக்கிழமை காலை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தன.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் அதன் செயலாளர் அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த, கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட தலைமை வேட்பாளர் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி ஆகியோர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் சார்பில் அதன் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம், தவிசாளர் பிரதியமைச்சர் பசீர் சேகுதாவூத், தலைமை வேட்பாளர் நசிர் அகமட் உட்பட அதன் வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் சர்பில் அதன் தலைமை வேட்பாளர் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அரசரட்ணம் சசிதரன் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.மாசிலாமணி ஆகியோரும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
இதேவேளை, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தங்கேஸ்வரி, நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சார்பில் அதன் தலைமை வேட்பாளர் எம்.எம்அப்துர் றஹ்மான் ஆகியோர் சுயேட்சைக் குழுக்களில் போட்டியிடுவதற்கான தமது வேட்பு மனுப்பத்திரங்களை மட்டக்களப்பு மாவட்ட தெரிவித்தாட்சி அலுவலரும் மாவட்ட அரசாங்க அதிபருமான திருமதி பி.எஸ்.எம்.சால்ஸிடம் கையளித்தனர்.