7/26/2012

| |

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி அன்றும் இன்றும்

ஒற்றுமை உரிமை தனித்துவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி இம்முறை இடம்பெற இருக்கும் கிழக்கு மகாணசபைத் தேர்தலில் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுகின்றது. கிழக்கு வாழ் தமிழ் மக்களின் மனங்களில் நிறைந்துள்ள ஒரு கட்சியாகவும், ஆசிபெற்ற ஒரு கட்சியாகவும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தற்போது உருவெடுத்து வருகின்றது. அந்தவகையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி கடந்த 2008 ஆம் ஆண்டு முதன்முதலாக கிழக்கு மாகாண சபை தேர்தலில் குதிக்கும்போது காணப்பட்ட நிலை என்ன? தற்போதைய நிலை என்ன ? கட்சி எந்தளவிற்கு மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்பட்டிருக்கின்றது என்பதனை விளக்குவதாக இந்த கட்டுரை அமைகின்றது.
 
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி 2008 ஆம் ஆண்டில் இடம்பெற்ற கிழக்கு மாகாண சபையில் மிகவும் பலம் பொருந்திய கட்சியாக இருந்து கிழக்கு மாகாணசபையைக் கைபப்ற்றியிருந்தது. உண்மையில் த.ம.வி.பு. கட்சியானது கடந்த 2008 தேர்தலில் போட்டியிடுகின்றபோது மக்களின் ஆதரவு தற்போதைய நிலையை விட சற்று குறைவாகவே இருந்தது. இதற்குக் காரணங்களாக த.ம.வி.பு. கட்சியானது ஆயுதப்போராட்டத்தில் இருந்து ஜனயாக வழிக்கு திரும்பிய கட்சி, தமிழர்களுக்கு இவாகள் நன்மை செய்வார்களா? என்று தமிழ் மக்கள் சந்தேகக் கண்ணோடு பார்கக்வேண்டிய நிலை ஆகியன முக்கியமானவையாகும்.
 
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியானது கிழக்கு வாழ் தமிழர்களுக்காக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து விலகி தலைமறைவான வாழ்க்கை வாழ்ந்து வந்தது. அக்காலப்பகுதியில் கிழக்கில் பல்வேறு அசௌகரியங்கள் மக்களுக்கு ஏற்பட்டது. சகோதரப் படுகொலைகள் பல நிகழ்ந்தன. குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளினால் பல அச்சுறுத்தல்கள் த.ம.வி.பு அமைப்பிற்கு ஏற்பட்டது. இவ்வாறு இடம்பெற்ற போராட்டங்களிலே பல தமிழர்களின் உயிர்களின் கொலை இங்கு  நிகழ்த்தப்பட்டது. அதை விடுத்து இத்தகைய குழப்பமான நிலையைப் பயன்படுத்தி சில தனிப்பட்டவர்களும், வேறு சில அமைப்புக்களும் கப்பம் கோருதல், கடத்தல் என பல்வேறு பட்ட இழிசெயல்களை நிகழ்த்திக் கொண்டிருந்தன. இத்தகைய இழிசெயல்கள் யாவும் பெரும்பாலும் த.ம.வி.பு. கட்சியின் மீதே முழுமையாகச் சுமத்தப்பட்டன. இதனால் எமது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மீது மக்களின் ஆதரவென்பது முழுமையாக பாமரமகக்கள் வரையிலும் பரம்பியிருக்கவில்லை. மக்கள் மத்தியில் ஒரு பயணஉணர்வு தென்பட்டதே தவிர, ஒன்று சேர்ந்து ஆதரவு தெரிவிக்கின்ற மணப்பாங்கு காணப்படவில்லை. இருந்தும் அரசியல் பாதைக்குள் காலடி எடுத்து வைத்தபோது இவற்றையெல்லாம் உணாந்து கொண்டவர்கள் எமக்கு பின்னால் திரளத் தொடங்கினர்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கடசியின் மீது பய உணர்வு காணப்பட்ட அதேவேளை இவர்கள் தமிழர்களுக்கு நன்மை செய்வார்களா? அபிவிருத்தி நிருவாகத்தைக் கவனிப்பார்களா? என்ற சந்தேகப் பார்வையும் பலர் மத்தியில் இருந்தது. குறிப்பாக ஆயுத வழியில் வந்தவாகள் எவ்வாறு அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுப்பார்கள்? நிருவாகத்தை எவ்வாறு சிறப்பாக நடாத்துவாhகள்? என்ற கேள்விகளெல்லாம் சில மக்கள் மத்தியில் இருந்தது. இத்தகைய இரு காரணஙகளுமே அன்றைய நிலையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கு மக்களை வென்றெடுப்பதில் பாரிய சவாலாக இருந்தது.

“சூரியனை எவராலும் மறைத்து விட முடியாது” என்பது போல தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் திறமைகளை அவர்களுடைய சிறந்த அரசியலை வராலாற்றுக் கடமையை மக்கள் மத்தியில் மிகக் குறுகிய காலத்திற்குள்ளே தமது சிறந்த ஆளுமையினால் வெளிப்படுத்தி நின்றார்கள். கல்லடியில் 2012 இல் இடம்பெற்ற கட்சியின் தேசிய மாநாட்டில் உரையாற்றிய அமைச்சர் ஹிஸ்புல்லா அவாகள் பின்வருமாறு கூறினார். “அபிவிருத்திக்காக இணக்கப்பாட்டு அரசியலையும், உரிமைக்காக பேரம்பேசும் தனித்துவ அரசியலையும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி மேற்கொள்கின்றது.” என்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் அரசியல் ஞானத்தை தந்திரோபாயத்தை அன்று வெளிப்படுத்தினார். மேற்கூறப்பட்ட உரையிலே த.ம.வி.பு. கடசியின் அரசியல் விவேகம் வெளிப்பட்டு நிற்பதனை அறிந்து கொள்ளலாம்.
கிழக்கு மண்ணின் அபிவிருத்திக்காக அரசுடன் இணைந்து பல அபிவிருத்திகளை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி மேற்கொண்டு வருகின்றது. பல பாடசாலைகள், மருத்துவ மனைகள், பஸ்தரிப்பு நிலையங்கள், வீதிகள், பாலங்கள் என அபிவிருத்திப் பணிகளை அடு;க்கிக்கொண்டே போகலாம். அண்மையில் படுவான் கரைப் பகுதியில் நடந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மகாணா சபைக்கான தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றிலே உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் அவர்கள் “2008 கிழக்கு மாகாண சபை கிடைப்பதற்கு முன்னர் அபிவிருத்திகள் நிகழவில்லையா? ஏன் சுனாமிக்குப் பிறகு பல அபிவிருத்திகள் நிகழ்ந்தன தானே. “ என்று கூறியிருந்தார். அவருடைய கருத்தில்கூட கிழக்கு மகாண சபை பொறுப்பேற்றதன் பின்னரும் அபிவிருத்திகள் நிகழ்ந்துள்ளன என்பதனை சூக்சுமமாக சுட்டிக் காட்டுகின்றார்.
 
இது ஒரு புறமிருக்க சுனாமியினால் ஏற்பட்ட அபிவிருத்திகள் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு மாத்திரமே கிடைக்கப்பெற்றது. ஆனால் கிழக்கு மாகாண சபையை எமது முதல்வர் பிள்ளையான் அவர்கள் பெறுப்பேற்றதன் பின்னர் அனைத்துப் பகுதிகளும் அத்தியாவசிய தேவைகளும் கூட அபிவிருத்தி செய்யப்பட்டிருக்கின்றன.
 
அவர்கள் தமது கூட்டத்தை நடாத்திய படுவான் கரைப் பிரதேசத்திற்குக் கூட தனித்துவமான ஒரு கல்வி லையம் முதல்வர் பிள்ளையான் காலத்திலேயே நிகழ்ந்தது. கல்வியில் பின்தங்கிய பிரதேசமாக படுவான் கரைப் பிரதேசம் காணப்பட்டது. அதற்கு தனக்கென ஒரு தனித்தவமான கல்வி வலையம் இன்மையும் ஒரு காரணமாகும். ஏனெனில் ஏணைய கல்வி வலயங்களுடன் இணைத்து விடப்பட்போது இப்பகுதிகள் பெருமளவில் நிர்வகிகக்ப்படவில்லை. ஆனால் இன்று அந்த நிலை மாறியிருக்கின்றது. தனித்துவமான தமது கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகளின் கல்வி வளர்ச்சிக்காக அதிகாரிகள் பல திட்டங்களை மேற்கொண்டு வருகின்றார்கள்.
கிழக்கு வாழ் தமிழ் மக்களின் உரிமை விடயத்திலும் த.ம.வி.பு. கட்சியும் முதல்வர் பிள்ளையானும் பின்நின்றதில்லை. கிழக்கு மகாண சபையை வலுப்படுத்தவதற்காகவே அவர்மீண்டும் முதல்வராக வேண்டும்  என்ற எண்ணத்தில் வாக்களிக்க இருக்கின்றார்கள். “அன்று ஒரு தமிழன் என்று வாக்களித்தவர்கள் இன்று எமது பிள்ளையான்தான் முதல்வராக கிழக்கு மண்ணை ஆளவேண்டும்” என்று கூறுவதற்கு காரணம் அவருடைய சேவையும்,மக்கள் மீது கொண்டுள்ள அளவில்லாத அக்கறையும் அன்பும்தான் என்றால் அது மிகையில்லை.
தொடரும்……….
தணிகையான்