7/19/2012

| |

சந்திவெளி கிராமமும் இம் முறை சந்திரகாந்தனுக்கே பெருமளவிலான ஆதரவினை நல்குவதாக முடிவு எடுத்திருக்கின்றது.


நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபைத் தேர்தலிலே மீண்டும் சந்திரகாந்தனே முதலமைச்சராக வரவேண்டும் என்பதற்காக பல தமிழ் கிராமங்கள் ஆதரவினை தெரிவித்த வண்ணமே உளளன. அந்த வகையிலே சந்திவெளி கிராமமும் இம் முறை சந்திரகாந்தனுக்கே பெருமளவிலான ஆதரவினை நல்குவதாக முடிவு எடுத்திருக்கின்ற நிலையிலே, இன்று கோறளைப் பற்று பிரதேச சபையின் தவிசாளர் தா.உதயஜீவதாஸ் தலைமையில் தேர்தல் தொடர்பான விளக்கக் கூட்டம் இடம் பெற்றது.

சந்தி வெளி சித்திவிநாகர் வித்தியாலய கட்டிடத்திலே இடம் பெற்ற கூட்டத்திற்கு பெருமளவிலான கிராம மட்ட முக்கியஸ்த்தர்கள், தலைவர்கள் என வருகை தந்திருந்தார்கள். உண்மையில் கிழக்கு மாகாணத்திலே கடந்த 4 வருடங்களாக கிராமங்கள் சார்ந்த பல அபிவிருத்திகள் இடம்பெற்றிருக்கின்றன. ஆந்த வகையிலே எமது கிராமமும் அதற்கு விதி விலக்கல்ல என்ற வகையில் இம் முறை மீண்டும் ஓர் தமிழ் முதலமைச்சர் சந்திரகாந்தனாக வர எங்களது கிராமத்தினது பூரண ஒத்துழைப்பு இருக்கும் என கலந்து கொண்ட கிராமத் தலைவர்கள் தெரிவித்தார்கள்.