தமிழ் முதலமைச்சர் இல்லாமல் போனால் அதற்கானமுழுப்பொறுப்பையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரே ஏற்றுக்கொள்ள வேண்டும்- மாற்றத்திற்கான மக்கள் அமைப்பு.
PEOPLE ORGANIZATION FOR CHANGE
மாற்றத்திற்கான மக்கள் அமைப்பு
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில்மாற்றத்துக்கான மக்கள் அமைப்பு போட்டியிடுகின்றது.
நடைபெற இருக்கின்ற மாகாணசபைத் தேர்தல்தமிழர்களுக்கு ஒரு முக்கிய தேர்தலாக அமைய இருக்கின்றது. இத் தேர்தலை ஒவ்வொருதமிழரும் கட்சி வேறுபாடுகளை மறந்து தமிழ் முதலமைச்சரை பெறுவதற்காக ஒன்றுபடவேண்டும்.
இன்று முஸ்லிம்களைப் பொறுத்தவரையில்முஸ்லிம் ஒருவரை முதலமைச்சராகப் பெற வேண்டும் என்பதற்காக பல வியூகங்களை வகுத்துசெயற்பட்டு வருகின்றனர். ஆனால் தமிழ் கட்சிகளைப் பொறுத்தவரை கட்சி வேற்றுமைகளைமறந்து செயற்பட வேண்டிய இத் தருணத்தில் தமிழ் முதலமைச்சரை இல்லாமல் செய்வதற்குரியநடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
உண்மையில் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில்தமிழ் கட்சிகள் என்ன செய்திருக்க வேண்டும். கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் இன்றுகளமிறங்க இருக்கின்ற பிரதான இரு கட்சிகள் இருக்கின்றன. தமிழ் தேசியக் கூட்டமைப்புமற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி இக் கட்சிகள் இரண்டும் இத்தேர்தலிலே ஒன்றுபட்டு ஒரே சின்னத்தில் போட்டியிட்டிருக்க வேண்டும்.
காரணம் இரண்டு கட்சிகளும் தனித்தனியேபோட்டியிடுவதனால் தமிழர்களின் வாக்குகள் சிதறடிக்கப்பட்டு தமிழ் முதலமைச்சர் இல்லாமல்போவதற்குரிய சந்தர்ப்பங்கள் அதிகமாக இருக்கின்றன. மாறாக இரு கட்சிகளும் ஒன்றுபட்டு தேர்தலிலே களமிறங்கியிருந்தால். தமிழர்களுக்கு கிழக்கிலே ஒரு அரசியல் பலம்வலுப்பெற்றிருப்பதுடன் அபிவிருத்தி கண்டு வருகின்ற கிழக்கை துரிதமாக அபிவிருத்திநோக்கி கொண்டு செல்ல முடியும்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பினைப் பொறுத்தவரைபாராளுமன்றத்திலே வலுப்பெற்றிருக்கின்ற வேளையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்கட்சியினர் கிழக்கு மாகாணசபையை கைப்பற்றி மாகாணசபையை ஆட்சி செய்து கிழக்குமாகாணத்தை துரிதமாக அபிவிருத்தி நொக்கி கொண்டு சென்றதுடன் கிழக்கிலே குறுகியகாலத்தினுள் வலுப்பெற்ற கட்சியாக மாறியிருக்கின்றனர்.
இவ் இரு கட்சிகளும் ஒன்று பட்டு தேர்தலிலேகளமிறங்கியிருந்தால் தமிழர்கள் அதிக வாக்குகளைப் பெற்று அதிகபிரதிநிதித்துவத்தினைப் பெற்று ஆட்சி அமைத்திருக்க முடியும் ஆனால் இவ் இரு கட்சிகளின்தனித்து போட்டியிடும் செயற்பாடானது தமிழர்களின் அரசியல் பலத்தை இல்லாமல்செய்வதுடன் தமிழ் முதலமைச்சரையும் இல்லாமல் செய்த பாரிய வரலாற்றுத் தவறையும் செய்யஇருக்கின்றனர்.
தமிழ் முதலமைச்சர் இல்லாமல் போனால் அதற்கானமுழுப்பொறுப்பையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரே ஏற்றுக்கொள்ள வேண்டும்.தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஒன்றுபட்டு செயற்படுவதற்காக ஒருஉடன்பாட்டுக்கு வருவதற்காக ஒரு பேச்சுவார்த்தை நடாத்தவதற்காக இவ் வருட ஆரம்பத்தில்சந்திரகாந்தன் அவர்கள் சம்பந்தன் அவர்களுக்கு ஒரு கடிதம் அனுப்பினார் இதுவரை எந்தபதிலும் அனுப்பப்படவில்லை.
அது ஒரு புறமிருக்க கிழக்கு மாகாணசபையைகைப்பற்றி யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு கிழக்கு மாகாணத்தை துரித அபிவிருத்திநோக்கி கொண்டு சென்றவர் சந்திரகாந்தன் அவர்களும் அவரது தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியும்.
அண்மைக்காலமாக தமிழ் தேசியக்கூட்டமைப்பினரின் செயற்பாடுகள் தமிழ் முதலமைச்சரை இல்லாமல் செய்ய வேண்டும் என்பதில்உறுதியாக இருப்பதனைப் போன்று இருக்கின்றது. சந்திரகாந்தன் அவர்களின் தமிழ் மக்கள்விடுதலைப் புலிகள் கட்சியினைப் பொறுத்தவரை அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியாகஇருந்து பேரம்பேசல்கள் மூலமாகவே கிழக்கு மாகாணத்தை துரிதமாக வளர்ச்சி நோக்கிகொண்டு சென்றனர்.
அண்மையில் கூட்டமைப்பினர்தெரிவித்திருந்தனர் அரசில் அங்கம் வகிப்பவர்களை வெற்றிபெற விடமாட்டோம் என்றுகுறிப்பிட்டிருக்கின்றனர். இவர்களின் இந்தக் கூற்றானது அரசாங்கத்தின் பங்காளிக்கட்சியாக இருந்து கிழக்கை அபிவிருத்திப் பாதைநோக்கி கொண்டு சென்ற சந்திரகாந்தன்அவர்களை அரசியலில் இருந்து ஓரங்கட்ட வேண்டும் என்ற நோக்கம் புலப்படுகின்றது.
தமிழ் முதலமைச்சரை தக்க வைப்பதுடன் தமிழ்பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டும் என்பதில் தமிழ் உணர்வாளர்கள் உறுதியாகஇருக்கும் இவ் வேளையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் முஸ்லிம்பிரதிநிதித்துவத்தினை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதுவேதனைக்குரிய விடயமாகும். இவர்களின் இச் செயற்பாடானது அதிக வாக்காளர்களைக் கொண்டதமிழர்களுக்கு முதலமைச்சர் பதவி கிடைக்காமல் செல்வதற்கும் குறைந்த வாக்காளர்களைக்கொண்ட முஸ்லிம்கள் முதலமைச்சர் பதவியினை பெறுவதற்கும் சந்தர்ப்பத்தினைஏற்படுத்திக் கொடுக்கும் செயற்பாடாக அமைகின்றது.
தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து போட்டியிட்டுஅதிக தமிழ் பிரதிநிதித்துவத்தினையும் முதலமைச்சர் பதவியினையும் பெற்று கிழக்குதமிழர்களின் அரசியல் பலத்தினை வலுப்பெற வைக்க வேண்டிய தருணத்தில் தமிழ்பிரதிநிதித்துவத்தினையும் தமிழ் முதலமைச்சரையும் இல்லாமல் செய்யும் இவர்களின்செயற்பாடுகள் கவலைக்குரியதாகும். இத் தருணத்தில் கிழக்கு மாகாணத்திலே மாற்றத்தைஏற்படுத்த வேண்டும் என்று செயற்பட்டுக் கொண்டிருக்கும் நாம் இத் தேர்தலில்களமிறங்க வேண்டியது காலத்தின் தேவையாக இருக்கின்றது. இத் தேர்தலில் மாற்றத்திற்கானமக்கள் அமைப்பினராகிய நாமும் போட்டியிட தீர்மானித்திருக்கின்றோம்.
மாற்றத்திற்கானமக்கள் அமைப்பு
கிழக்கிலங்கை
தொலைபெசி– 0775860168
16.07.2012