7/13/2012

| |

தமிழ் அரசுக்கட்சி மட்டக்களப்பில் இரண்டாகபிளவுபடுமா ?துரைரெத்தினம்,பிரசன்னா போன்றோரின் நுழைவு ஏற்படுத்தியுள்ள புதிய தலையிடி

துரைரெத்தினம்,பிரசன்னா போன்றோரின் நுழைவு ஏற்படுத்தியுள்ள புதிய தலையிடி 
thurairatnam
மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும் இனந்தேரியாதோரினால்  நேற்றிரவு 10.00 மணிக்குப் பின்னர்  “ தமிழரசுக்கட்யின் தலைமைக்குழுவுக்குப் பகிரங்கமான வேண்டுகோள் “ என்ற தலைப்பிடப்பட்ட சுவரொட்டிகசிள் வீதிகளில் வீசப்பட்டிருந்தன. எனினும் இதிலுள்ள விடயங்களும் நியாயத்தன்மையையும் பொய்யானவை என்பதனை சிலர் மறுதலிக்க முடியாத நிலையில் குழப்பத்துக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதன் விபரம் வருமாறு.
எஙகள் மதிப்பிற்கும் கெளரவத்துக்கும் உரிய தமிழ் அரசுக்கட்சி தலைமைக் குழுவுக்கு பகிரங்கமான வெண்டுகோள். ஈழத்து காந்தி என்று எல்லொராலும் போற்றப்பட்ட தந்தை செல்வா அவர்களால் 1949 ஆரம்பிக்கபட்ட தமிழ் அரசு கட்சியானது அகிம்சை கொள்கையுடைய கட்சியாகும்.
1952 கறுப்புக்கொடி போராட்டம் தொடங்கி 1972 தபால் தந்தி போராட்டம் வரை அகிம்சை வழி போராட்டம் நடாத்திய கட்சி.
30வருட ஆயுத போராட்ட காலத்தில் கூட அகிம்சையை கைவிடாத கட்சி.ஆனால் இன்று இந்தக் க்ட்சிக்குள் தேசிய கூட்டமைப்பு என்ற போர்வையில் கொலைகாரர்களும் கொள்ளைக்காரர்களும் நிரம்பிய கூட்டமைப்பாகவுள்ளது.இது எமக்கு பெரும் கவலையையும் வேதனையையும் தருகின்றது. ஈழத்து விடுதலை போராட்டம் மேலோங்கிய கடைசி காலப்பகுதியில் ராசிக்குழு என்ற போர்வையில் தமிழ் இளைஞர்களை தலைவேறு முண்டம் வேறாக வெட்டி சந்திகளில் குவித்த EPRLF உறுப்பினர் துரைரெத்தினம் போன்ற கொலைகாரர்களும் தமிழ் அரசுகட்சியுடன் இணைந்தனர் என்ற செய்தி கடுமையான வலியை ஏற்படுத்தியுள்ளது.
ரெலோ உறுப்பினர் பிரசன்னா அவர்கள் எமது தமிழ் இனத்துக்கு இழைத்த துரோகத்தை எப்படி மறக்க முடியும்? கண்ணுக்கு தைத்த அழகிய பெண்களின் கணவன்மார்களை கடத்தி விட்டு அப்பொண்களை தங்களிடம் வரவழைத்து அந்த பெண்களின் கற்பை சூறையாடிய சம்பவங்களை மறக்கமுடியமா? புலி ஆதரவாளர்கள் என்று தமிழ் இளைஞர்களை துண்டுதுண்டாக வெட்டியதை மறக்க முடியுமா? ஆட்கடத்தல், கொலை,கொள்ளை,கற்பழிப்பு இவற்றுக்கெல்லாம் அதிபதியான பிரசன்னா என்பவன் கட்சியில் இணைந்துள்ளான் எற்ற செய்தி கேட்டு அதிர்ச்சியடந்துள்ளோம்.
மண்டயன் குழு தலைவன் சுரேஸ்பிரேமச்சந்திரன் எத்தனை தமிழர்களின் உயிரை குடித்த கொலை வெறியன் இவணும் தமிழ் அரசு கட்சியில் கூடாரம் இட்டு இருப்பதனை நாம் ஏற்க மாட்டோம். அகிம்சாமூர்த்தி ஆரம்பித்த கட்சியில் கசாப்புக் கடைகாரர்கட்கு இடம் கொடுப்பதனை ஏற்க முடியாது அவ்வாறு ஏற்றுக்கொண்டால் நாம் எக்காரணம் கொண்டும் தமிழ் அரசு கட்சிக்கு ஆதரவு வழ்ங்க மாட்டோம்.
தமிழ் அரசுக்கட்சி
-ஆதரவாளர்கள்-