1981ம் ஆண்டு முஸ்லிம் மக்களுக்கு செய்த துரோகத்திற்கு இன்று நல்ல பதிலடி கொடுத்திருக்கும் மு.கா
1965ம் ஆண்டு முதல் தந்தை செல்வாவின் அரசியல் சித்தாந்தத்தில் ஆழ்ந்த நம்பிக்கையும் நன்மதிப்பும் கொண்டிருந்த முஸ்லிம் மக்களுக்கு 1981ம் ஆண்டு நடைபெற்ற மாவட்டசபை தோர்தலிலே கண்மூடித்தனமாக துரோகமிழைத்த தமிழ் அரசியல் தலைமைகள் இன்று வெட்கம் மானம் ரோசம் எதுவுமின்றி முஸ்லிம் காங்கிரசின் தலைமைகளின் கால்களில் விழுந்ததற்கு முஸ்லிம் மக்கள் தகுந்த பாடத்தை கற்பித்திருக்கின்றார்கள்.
உண்மையில் இவ்வாறானதொரு முடிவை எடுத்த முஸ்லிம் மக்களின் ஏகோபித்த பெருமதிப்பபையும் அம்மக்களுக்கான சொத்தாகவும் விளங்குகின்ற முஸ்லிம் காங்கிரசுக்கு எனது இதயபூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன். காரணம் நானும் அந்த காலத்திலே முஸ்லிம் மக்களும் தமிழ் மக்களும் சமாதானமாக வாழ வேண்டும் என்பதற்காக பாடுபட்டவன் என்ற அடிப்படையில் இன்று மிகவும் எனக்கு சந்தோசமான ஒரு நாளாகும்.
1981ம் ஆண்டு நடைபெற்ற மாவட்ட சபை தேர்தலிலே அப்போதைய சனத்தொகை கணக்கெடுப்பின்படி அம்பாறை மாவட்டத்திலே முஸ்லிம்கள் 161481 41.5வீதமும் தமிழர்கள் 79725 20.5 வீதமும் ஆகும். இந்த விகிதாசாரப்படி உண்மையில் அதாவது ஜனநாயகப்படி பார்த்தால் ஆகக் குறைந்தது 1ஆசன ஒதுக்கீடாவது முஸ்லிமகளுக்கு வழங்கி இருக்க வேண்டும். இதனைத்தான் அன்று ஜனாப் எம்.எச்.எம்.அஸ்ரப் தமிழ் தலைமைகளிடம் கேட்டார். ஆனால் கொடுக்கவில்லை. முஸ்லிம் மக்களின் அபிலாசைகளுக்கு இடம் கொடுக்காது. அவ்வளவு காலமும் விசுவாசமாக இருந்த முஸ்லிம் மக்களின் தலைவன் அஸ்ரப்பை தூhக்கி எறிந்து விட்டு, அம்பாரை மாவட்டத்திற்கு அப்போது திரு .ஆ. வேல்முருகு என்னும் தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டார்.
அதனால் மிகவும் வேதனை அடைந்த முஸ்லிம் மக்களின் அப்போதைய தலைவர் அஸ்ரப் சிந்தித்து முஸ்லிம்களுக்கான ஓர் தனி அரசியல் பிரவேசம் பற்றி சிந்தித்தார். அதன் வெளிப்பாடுதான் ஏற்கனவே தமிழ் தலைமைகளுடன் சேர்ந்து இயங்கிய முஸ்லிம் ஐக்கிய முன்னணி 1981.09.21ல் முஸ்லிம் காங்கிரஸ் எனும் கட்சியை முஸ்லிம்கள் செறி;ந்து வாழ்கின்ற மட்டக்களப்பின் காத்தான்குடியிலே அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.
இவ்வாறெல்லாம் முஸ்லிம் மக்களுக்கு காலங் காலமாக துரோகம் செய்த தமிழ் தலைமைகள் இன்று தங்களது சுயநலத்திற்காக முஸ்லிம் காங்கிரசுடன் இணைவதற்கு உலமா சபை மற்றும் வெளிநாட்டு இராஜதந்திரிகள் மற்றும் முஸ்லிம்களின் முக்கிய அரசியல் தலைவர்களிடம் எல்லாம் கெஞ்சி கெஞ்சென கெஞ்சி கடைசியாக மூக்குடைந்து கிடக்கிறது தமிழ் தேசியக் கூடட்மைப்பு. குப்புற விழுந்தும் மீசையில் மண் ஒட்ட வில்லை என்பது போல் தற்போது (11.07.2012) மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராஜா தெரிவிக்கின்றார் தமிழ் தேசிய கூட்டமைப்பு கிழக்கு மாகாண சபைத் தேர்தலிலே தனித்துத்தான் பேட்டியிடும் என்று செய்தி வெளியிடுகின்றார்.வெட்கம் மானம் ரோசம் எதுவுமே இவர்களுக்கு இல்லை என்பதற்கு இந்த சம்பவம் சிறந்த ஒரு எடுத்துக் காட்டாகும்.
ஏப்படியாவது மீண்டும் ஒரு தமிழ் முதலமைச்சராக அது யாரு பிள்ளையான்தான் மீண்டும் முதலமைச்சராக வரக்கூடாது என்பதற்காக போட்ட திட்டமெல்லாம் பொடி பொடியாகி விட்டது. ஏன் தமிழ் மக்கள் தங்களுக்கு வாக்களிக்கும் என்ற நம்பிக்கை இருந்தால் எந்த முஸ்லிம் கட்சிகளுடனும் ஏன் கேவலம் காத்தான் குடியிலிருந்து கட்டுப் பணம் செலுத்திய ஓர் சுயேட்சைக் குழுவுடனும் பேச்சு வார்த்தை நடாத்தினார்கள். இப்படியெல்லாம் மானங்கெட்ட அரசியல் செய்வதை விட கிழக்கு மாகாண சபைத் தேர்தலிலே போட்டியிடாமல் ஒதுங்கி இருக்கலாமே. இப்பவும் குறையல தன்மானம் கொள்கை என்று ஏதாவது ஏன் கிழக்கு தமிழ் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்றால் இந்த தேர்தலிலே ஒதுங்குங்கடா சாமி.
நீதி மன்றில் வழக்கு தாக்கல் செய்தார்கள் சரிவரல, வெளிநாட்டு இராஜதந்திரிகளிடம் காலில் விழுந்தார்கள் தேர்தலை நிறுத்த சொல்லி அதுவும் நடக்கல, பின்னர் முஸ்லிம் கட்சிகளுடன் பேசினார்கள் அதுவும் சரிவரல, ஐக்கிய தேசிய கட்சியுடன் பேசினார்கள் அதுவும் சரிவரல. இனிமேல் இவர்களுக்கு எதுவுமே சரிவராது.
ஏப்போது இவர்கள் தேர்தல் பிரச்சாரத்திற்கு வடக்கிலிருந்து ஜனநாயகப் போராளிகளைக் கொண்டு வருவோம் என்றார்களோ அன்றே இவர்கள் கிழக்கு மாகாண சபைத் தேர்தலிலே தோற்று விட்டார்கள் என்பது உறுதி. பாருங்கள் அன்பு மக்களே யாரோடெல்லாம் பேசுரானுகள் இவ்வளவு காலம் ஆட்சி செய்த ஓர் முதலமைச்சர் பிள்ளையான். அவன் ஓர் தமிழன். அது மட்டுமா அவன் இந்த ஆண்டின் முதல் நாளிலே கடிதமும் அனுப்பியிருந்தான்சம்பந்தனுக்கு. அதற்கு இன்னும் பதிலில்லை. அப்படியென்றால் பிள்ளையானுடன் கதைத்திருக்கலாம் தானே. அதனை செய்யமாட்டார்கள். இவர்களுக்கு பிள்ளையான்தான் சாவு மணி அடிப்பான். அதற்கான நாள் 2012 செப்டெம்பர் 8ந் திகதிதான். காலம் பதில் சொல்லும். எம் கிழக்கு தமிழ் மக்கள் வாக்கு பலம் வெல்லும்.
நன்றி
மட்டு நரசிம்மன்