7/11/2012

| |

காலங்காலமாக தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களித்து எந்த நன்மையையும் நாங்கள் பெறவில்லை. – கிண்ணையடி மக்கள் பெருமுச்சு


கிண்ணையடி பிரதேச மக்களால் ஒழுங்கு செய்யப்பட்ட விசேட கூட்த்தில் கிண்ணையடி பிரதேச மக்கள் தமது பூரண ஆதரவை இம் முறை கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருக்கே தமது ஆதரவை வழங்குவதாக உறுதி பூண்டுள்ளார்கள். காலங்காலமாக கிண்ணயைடி பிரதேச மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு தமது பூரண ஆதரவை வழங்கி வந்த போதும் இதுவரை காலமும் அவர்களால் கிண்ணையடி மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. ஆந்த வகையிலே ஊhர் மக்கள் அனைவரும் ஒன்றுகூடி இம்முறை ஓர் தீர்க்கமான முடிவை எடுத்திருக்கின்றோம்.

ஆனால் இம் முறை நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலிலே தமிழன் ஒருவர் முதலமைச்சராக வருவதற்கு தமிழ் மக்கள் அனைவரும் சந்திரகாந்தனுக்கு ஆதரவு வழங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்கள். அந்த வகையிலே எதிர்பாராத ஓர் அமோக வெற்றியை சந்திரகாந்தன் பெறுவார். அந்த வெற்றிக்காக பாடுபட்ட மக்களின் வரிரசையிலே இம் முறை கிண்ணயைடி வாழ் மக்களும் பங்கு கொள்வது பெரு மகிழ்ச்சியாக இருக்கும் எனவும் அக்கிராம மக்கள் தெரிவித்தார்கள்.