7/10/2012

| |

மட்டக்களப்பு பாலர்சேனை வேப்பவட்டுவானில் இன நல்லுறவை ஏற்படுத்தும் முகமாக திருமண நிகழ்வொன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றுள்ளது.


நயினாக்காடு சம்மாந்துறையைச் சேர்ந்த முஸ்லிம் நபருக்கும் மேற்படி இடத்தைச்சேர்ந்த தமிழ் யுவதிக்குமே இந்து ஆகமவிதிப்படி பாலர்சேனை முருகன் ஆலயத்தில் செங்கலடி வர்த்தக சங்கத் தலைவர் கே.மோகனால் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. இதேவேளை மேற்படி நபர் தனது பெயரை நயினைக் குமார் எனவும் பெயர் மாற்றம் செய்துள்ளதாகவும் வர்த்தக சங்கத் தலைவர் தெரிவித்தார்.
இதன்முலம் இனங்களுக்கிடையேயுள்ள முரண்பாடுகள் தீர்க்கப்படுமெனவும் மேலும் அவர் தெரிவித்தார்.