7/09/2012

| |

நாட்டின் நற்பெயர், ஐக்கியத்தை அழிக்க எல்.ரீ.ரீ.ஈ சார்பு புலம்பெயர்ந்தோர் சதி

மேற்குலக நாடுகளில் வசிக்கும் எல். ரீ. ரீ. ஈ.க்கு ஆதரவான இலங்கையர்கள் அந்த நாடுகளில் ஊடகம், அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி, இலங்கையின் நற்பெயரை அழிக்கவும் நாட்டின் ஐக்கியத்தை சீர்குலைக்கவும் திட்டமிட்டு வருகின்றனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இவ்வாறு தெரிவித்தார்.

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கை தூதுவர்கள், ஸ்தானிகர்கள் ஆகியோருக்கான இருநாள் செயலமர்வின் ஆரம்ப அமர்வில் பேசிய ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
தியத்தலாவை இராணுவ கேட்போர் கூடத்தில் இந்தச் செயலமர்வு நடைபெற்றது.
இங்கு ஜனாதிபதி தொடர்ந்து கூறிய தாவது :-
மஹிந்த சிந்தனையில் குறிப்பிடப்பட்டுள்ள இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கை தொடர்பாக இலங்கையைப் பிரதிநிதித்துவம் செய்யும் உயர்ஸ்தானிகர்கள், தூதுவர்கள் ஆகியோரிடம் 2006 ல் நான் கருத்து தெரிவித்தேன்.
இரண்டாம் முறையாக மீண்டும் நாம் இன்று சந்திக்கிறோம். அன்றிருந்ததைவிட வேறு ஒரு நாட்டை நாம் கட்டியெழுப்பி யுள்ளோம். கனவாக இருந்த கெளரவமான சமாதானம் உருவாகியுள்ளது.
30 வருட யுத்தம் காரணமாக சிக்குண்ட மக்களின் வாழ்வு மூன்று வருடங்களுள் வழமை நிலைக்கு மாறிவிட்டது.
அவசரகாலம், அதிஉயர் பாதுகாப்பு வலயம் இல்லை. அகதி முகாம்கள், கண்ணி வெடிகள், வீதித் தடைகள் இல்லை. சமாதானத்தை நோக்கி வேகமாக பயணிக்கும் நாடு இலங்கை என்பதை முழு உலகும் ஏற்றுள்ளது. 2011 ல் 8.3 வீத பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டது. சுதந்திரத்துக்குப் பின்னர் அறிக்கை செய்யப்பட்ட ஆகக் கூடிய முன்னேற்றம் இதுவாகும்.
தொடர்ச்சியான பொருளாதார அதிகரிப்பு இலங்கையை உயர்ந்த பொருளாதார நிலைமைக்கு கொண்டு வந்துள்ளது. இலங்கை உலகில் மத்திய வருமானமுள்ள நாடுகள் மத்தியில் ஒன்று சேர்ந்துள்ளது.
நீங்கள் மூன்றாம் உலகில் வறுமை நாட்டைப் பிரதிநிதித்துவம் செய்யவில்லை. மகிழ்ச்சிமிக்க பொருளாதாரம் காணப்படும் நாட்டையே பிரதிநிதித்துவம் செய்கிaர்கள்.
எரிசக்தி உற்பத்தி நிலையங்கள் நிர்மாணிக்கப்படுகின்றன. கிராமப்புறங்களில் நல்ல முன்னேற்றத்தை நீங்கள் பார்க்கிaர்கள்.
கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்தி கிராமத்தை நாம் கட்டி எழுப்புகிறோம். அணிசேரா வெளிநாட்டுக் கொள்கையைப் பின்பற்றும் அதேவேளை இலங்கையின் அடிப்படை தேவைகள், அபிலாஷைகள் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயற்பட நாம் எப்போதும் முயன்றோம்.
அந்த முயற்சியில் சகல நாடுகளுடனும் நட்புறவை உருவாக்கி செல்வதற்கும். அயல்நாடுகளுடன் நெருக்கமான இருதரப்பு உறவுகளை கொண்டு நடத்துவதற்கு நாம் முதலிடம் வழங்கினோம்.
நாம் தவறு இல்லாத வெளிநாட்டுக் கொள்கையைப் பின்பற்றுகிறோம். டயஸ் போராவினைப் போன்று அவர்களுக்கு அனுதாபம் காட்டுவோரால் தொடுக்கப்படும் நிர்ப்பந்தங்களும் சிறியவை அல்ல.
இது தான் எமக்கு உள்ள பெரும் சவாலாகும். போட்டியை வெல்ல வேண்டுமானால் இந்தச் சவாலை வெற்றிகொள்ள வேண்டும்.
இந்த மிரட்டல்களை வெற்றிகொள்ள வெளிநாடுகளில் சேவையாற்றும் இலங்கை ராஜதந்திர அதிகாரிகள் தமது போக்குகளில் மாற்றத்தை உருவாக்க வேண்டுமென நாம் கருதுகிறேன்.
நாம் பழைய முறைகளில் இருந்து, தூரமாக வேண்டும். அறையில் இருந்து தொலைபேசியில் இருந்து தூரமாகி வெளிநாடுகளில் வசிக்கும் வர்த்தகர்கள் மற்றும் மக்களுடன் சேர்ந்து நாட்டில் பலன்மிக்க திட்டங்களை உருவாக்க முயற்சி செய்ய வேண்டும்.
ராஜதந்திரிகளுக்கு பாரிய பணிகள் உள்ளன. களிப்பூட்டல், ராஜதந்திர வைபவங்களில் பங்குகொள்ளல் போன்ற பொறுப்புகளுக்கப்பால் முக்கிய பொறுப்புகளும் உள்ளன.
‘பார்ட்டி’களுக்குச் செல்ல வேண்டாம் என்றும், ராஜதந்திரிகளுக்கு ‘பார்ட்டி’ கொடுக்க வேண்டாம் என்றும் நான் கூறவில்லை. நாட்டைப் பிரதிநிதித்துவம் செய்ய நியமிக்கப்பட்டுள்ள நீங்கள் நாட்டைப் பற்றி ஆழமாக புரிந்திருக்க வேண்டும்.
குறுகிய, நடுத்தர, நீண்டகால தேவைகள் பிரச்சினைகள், சவால்கள் பற்றி நீங்கள் முதலில் அறிய வேண்டும். உங்கள் பொறுப்பும், பணியும் முழுமையாக அமைய வேண்டும்.
மேற்குலக நாடுகளில் வசிக்கும் எல். ரீ. ரீ. ஈ. க்கு ஆதரவான இலங்கையர்கள் அந்தநாடுகளில் ஊடகம், அரச சார்பற்ற நிறுவனங்கள், கொள்கை வகுப்பாளர்கள் ஆகியோருடன் தொடர்புகொண்டு இலங்கையின் நற்பெயரை அழிக்கவும், நாட்டின் ஐக்கியத்தை சீர்குலைக்கவும் திட்டமிட்டுள்ளனர்.
அந்த நாடுகளுக்கு இயைபான பிரசாரத் திட்டத்தை கட்டியெழுப்ப நாம் முன்வர வேண்டும். உல்லாசக் கைத்தொழில், வெளிநாட்டு முதலீட்டு மேம்பாடு, பொருளாதார மேம்பாட்டுக்காக இதனைச் செய்ய வேண்டும்.
2016ல் தனிநபர் வருமானத்தை 4000 அமெரிக்க டொலர்களாக மாற்ற நாம் எதிர்பார்க்கிறோம். தூதுவராலயங்களின் செயற்பாடுகளை மதிப்பீடு செய்ய நான் எதிர்பார்க்கிறேன்.
வெளிநாடுகளில் தொடர்புகளை அதிகரித்து அங்குள்ள இலங்கையர்களுடன் நெருக்கமான தொடர்புகள் ஏற்படுத்தப்படும். அவர்களின் நலன்களுக்காகப் பணியாற்ற வேண்டும்.
தூதுவர்களையும், உயர் ஸ்தானிகர்களையும் நாம் நியமிக்கிறோம். அவர்கள் பதவிகளை ஏற்ற நாள் முதல் அரச அதிகாரிகளாகின்றனர்.
அவர்கள் பொறுப்புக்களை ஏற்க வேண்டும். அரச ஊழியர்கள் பின்பற்றும் ஒழுக்க நெறிக் கோவையையும் அவர்கள் பின்பற்ற வேண்டும்.
குறிப்பாக நிதி, நிர்வாகப் பிரமாணங்களை முறையாக பேணவேண்டும். ஐக்கிய குடும்பமாக நீங்கள் அனைவரும்இருக்க வேண்டும். தூதுவராலயங்களை திறம்பட நடத்த வேண்டும். சகலரின் மத்தியிலும் விசுவாசம் கட்டி எழுப்பப்பட வேண்டும்.
பயங்கரவாதத்தை ஒழித்து பின்னர் வட, கிழக்கு மாகாணத்தில் அபிவிருத்தி மேற்கொள்ளப்படுகிறது. விடுதலைப் புலிகளின் புனர்வாழ்வு, மீள்குடியேற்றம், வாழ்வு முன்னேற்றத்துக்கு அரசு பெருந்தொகை நிதியைச் செலவிட்டுள்ளது.
அரச ஊழியர்களுக்கான மும்மொழித் திட்டம், தகவல் தொழில்நுட்ப அறிவைக் கிராமங்களுக்குக் கொண்டு செல்லல், கமநெகும, திவிநெகும திட்டங்கள் பற்றியும் நீங்கள் விரிவான அறிவைப்பெற வேண்டும்.
இந்த அறிவும், தெளிவும் மூலமாக இலங்கையில் மனிதஉரிமைகள், சுற்றாடல் பாதுகாப்பு போன்றவற்றில் நாட்டுக்கு சர்வதேச ரீதியில் எடுக்கப்படும் நிர்ப்பந்தங்களுக்கு மீள் பதில் கொடுக்கும் ஆற்றல் உங்களுக்கு உருவாகும்.
இவ்வாறு ஜனாதிபதி கூறினார்.
அமைச்சர்களான பசில் ராஜபக்ஷ, ஜீ. எல். பீரிஸ், நிமல் சிரிபால டி சில்வா, டிலான் பெரேரா, பிரியங்கர ஜயரத்ன, ரெஜினோல்ட் குரே, பிரதி அமைச்சர் நியோமால் பெரேரா, பாராளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்த்தன, ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோரும் கலந்து கொண்டனர்.