நடைபெற உள்ள கிழக்கு மாகாண சபைத் தேர்தலிலே தமி;ழ் தேசியக் கூட்டமைப்பு போட்டியிட்டும் வெல்ல மாட்டோம் என்று தெரிந்தும் கூட தேர்தலிலே போட்டியிடுவது எதற்காக? கிழக்கு மக்களின் வாழ்விலே மண் அள்ளி போடுவதற்காக. கிழக்கிலே இன்று ஜனநாயகம் மிளிர்ந்து மக்கள் தங்களது அன்றாட வாழ்க்கையை சீராக அமைத்து வருகின்ற வேளையிலே அதனை இல்லாதொழிப்பதற்காக இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு கங்கணம் கட்டுகிறது.
நடைபெறப் போகும் கிழக்கு மாகாண சபை தேர்தலிலே பிள்ளையான் மீண்டும் முதலமை;சராக வரக்கூடாது என்பதற்காக என்ன என்ன வித்திதைகளையெல்லாம் செய்ய முடியுமோ அதனையெல்லாம் தமிழ் தேசிய கூட்டமைப்பு அருவருடிகள் செய்து வருகின்றார்கள். இன்று(7.7.2012) முஸ்லிம்காங்கிரசுடன் பேச்சு, வெளிநாட்டிலே நிதிகளை திரட்டி பிள்ளையானை தோற்கடிக்க சதி. இதற்காக ஆசாமி யோகேஸ்வரன் கனடாவில் தற்போது கருவாட்டு விஸ்னெஸ் செய்கின்ற ஓர் பெரிய முதலாளியிடம் காசு வாங்கி விட்டு பின்னர் ஏனைய தமிழ் மக்களிடம் பிச்சை கேட்கிறார் பேமாலி யோகேஸ்வரன்.
இவர்களுக்கு நன்றாக தெரியும் இம் முறை மீண்டும் பிள்ளையான்தான் முதலமைச்சராக வருவான். வுந்தால் கிழக்கு மாகாணத்திலே தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் அதன் பின்னால் வால் பிடித்த வடக்கானும் வழிதெரியாமல் வட்டகச்சிக்கு போய் விடுவார்கள் என்ற பயம் ஒருபுறம். அடுத்தது, அத்தோடு தமிழ் தேசியக் கூட்டமைப்பு இருப்பிற்கே ஆப்பு. இதனை எல்லாம் நன்கு உணர்ந்துதான் பிள்ளையானுக்கு கிடைக்க இருக்கின்ற முதலமைச்சர் பதவியை முஸ்லிம் சகோதரனுக்கு தாரைவார்த்து கொடுக்க வேட்டிக் கூட்டம் வெட்டிப் பேச்சு பேசி வெறுங் கையுடன் நின்று வேடிக்கை பார்க்கப் போகிறது.
இதனால் பிள்ளையானுக்கு தோல்வி இல்லை. கிழக்கு தமிழ் மக்களுக்குத்தான் தோல்வி. அன்று அதாவது 1977 ஆம் ஆண்டு மட்டக்களப்பில் இராஜாயதுரையை தோற்கடிக்க காசியானந்தனை களமிறக்கிய மாதிரி தற்போது 2012 கிழக்கு மாகாண சபைத் தேர்தலிலே மட்டக்களப்பிலிருந்து பிள்ளையான் மீண்டும் முதலமைசசராக வரக் கூடாது என்பதற்காக பலரை தேர்தல் களத்திலே இறக்க அதுவும் தோற்பம் என்று தெரிந்தும் போட்டியிட வைக்கிறார்களே.
இவர்கள் தான் உண்மையான துரோகி கருணா துரோகி அல்ல. அவன் நல்லவன்தான். அவர் பிரிந்து வரா விட்டால் மட்டக்களப்பிலும் ஏன் கிழக்கிலும் ஓர் முள்ளிவாய்க்கால் விவகாரம் தொடர்ந்திருக்கும். போதுண்டா சாமி இவனுகளுக்கு எம்மட சனம் கொடுக்கும் நல்ல சாட்டையடி இந்த முறை. இதற்கு பிறகு எவனாச்சும் திறந்திங்க என்ன வாயத்தான் அப்பறம் தெரியும் இந்த நரசிம்மண்ட சித்து விளையாட்டு………. சந்திப்பம் மீண்டும் சந்திப்பம்.
மட்டு நரசிம்மன்.
மட்டு நரசிம்மன்.