வடக்குக்கான அதிவேக நெடுஞ்சாலையை நிர்மாணிப்பதற்குத் தேவையான கேள்விமனு பத்திர (டெண்டர்) நடவடிக்கைகளை இவ்வருட முடிவுக்குள் பூர்த்திசெய்யுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.
கண்டி மாவட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளின் முன்னேற்றம் மற்றும் எதிர்காலத் திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தை கண்டி ஜனாதிபதி மாளிகையில் நேற்று நடைபெற்றபோது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அதிகாரிகளுக்கு மேற்படி பணிப்புரையை வழங்கினார்.
கண்டி - குருநாகலை இணைத்து திருகோணமலை - யாழ்ப்பாணம் வரை நிர்மாணிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டி ருக்கும் வடக்கு அதிவேக நெடுஞ்சாலையின் தூரம் 300 கிலோ மீற்றர்கள் ஆகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த அதிவேக நெடுஞ்சாலையின் முதற்கட்டத்தை நிர்மாணிப்பதற்கான திட்டம் தயாரித்து முடிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், கொழும்பிலிருந்து கண்டி வரை நிர்மாணிக்கப்படும் நெடுஞ்சாலையின் தூரம் 95 கிலோமீற்றர்கள் ஆகும். இதன்படி கொழும்பிலிருந்து கண்டிக்குப் பயணம் செய்வதற்கு ஒரு மணித்தியாலமும் பதினைந்து நிமிடங்களும் செல்லும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த நெடுஞ்சாலையின் முதற்கட்டத்தை நிர்மாணிப்பதற்காக ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகள் யாவும் சுற்றாடலுக்குப் பொருத்த மானதாகவும், சுற்றாடல் பாதிப்புகளைக் குறைக்கக்கூடியதாகவும் அமைவதன் அவசியத்தை ஜனாதிபதி இச்சமயம் அதிகாரிகளுக்கு எடுத்துக் கூறினார்.
இந்தப் பேச்சுவார்த்தையின்போது கண்டி மாவட்டத்தில் முன்னெடுக்கப்படு கின்ற அபிவிருத்தி வேலைத்திட்டங்கள், மாவட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளின் எதிர்காலத் திட்டங்கள், தற்போது விவ சாயம், சுகாதாரம், பொருளாதாரம் ஆகிய துறைகளில் பிரதேசத்தில் நிலவுகின்ற பிரச்சினைகள் என்பன தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டது.
இப்பேச்சுவார்த்தையின் போது கண்டி மாவட்டத்தில் கழிவுப் பொருட்களை அப்புறப்படுத்துவது தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினை குறித்து விசேட கவனம் செலுத் தப்பட்டது.
மாவட்டத்தின் பெரும்பாலான அரச காணிகள் பொதுவான நடவடிக்கைகள் அல்லாதவற்றுக்குப் பயன்படுத்தப்படுவ தாலும், தனியார் துறையினருக்கு வழங் கப்பட்டிருப்பதுமே இப்பிரச்சினை மேல் எழக்காரணம் என்பது இப்பேச்சுவார்த்தை யின் போது சுட்டிக்காட்டப்பட்டது.
இவ்விடயத்தில் கவனம் செலுத்திய ஜனாதிபதி ‘உள்ளூராட்சி மன்றங்கள் இவ் விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.
‘தனியார் துறைக்கு வழங்கப்பட்டுள்ள காணிகள் தொடர்பாக ஆராய்ந்து மீண்டும் பொறுப்பேற்கக்கூடிய காணிகளைத் துரிதமாகப் பொறுப்பேற்க வேண்டும்’ என்றும் ஜனாதிபதி அதிகாரி களுக்கு ஆலோசனை வழங்கினார்.
இதேநேரம், பேராதனை மற்றும் கண்டி வைத்தியசாலைகளில் ஏற்பட்டி ருக்கும் இடநெருக்கடி தொடர்பாக ஜனாதிபதி கவனம் செலுத்தியதுடன், இப்பிரச்சினை யைத் தீர்த்துவைக்கும் வகையில் கண்டி நகரை சூழவுள்ள பல ஆஸ்பத்திரிகளை மேம்படுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆஸ்பத்திரிகளில் டொக்டர்கள், தாதியர்களின் சேவையை மேம்படுத்தல், சத்திரசிகிச்சை வசதிகள், வார்ட் வசதிகள், நோயாளர்களுக்கான வசதிகள் என்பனவற்றை மேம்படுத்துமாறு ஜனாதிபதி இச்சமயம் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தர விட்டார். இப்பேச்சுவார்த்தையின் போது ஹந்தான பாதுகாப்பு பிரதேசம் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டதுடன், ஹந்தான பாதுகாப்பு பிரதேசமென தீர்மானிக்கப்பட் டுள்ள காணியில் பிரச்சினை இருப்பதும் சுட்டிக் காட்டப்பட்டது.
அந்தப் பிரதேசத்தில் குடியிருப்புக்களும், நிர்மாணப் பணிகளும் நடைபெற்றிருப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. பாதுகாப்பு பிரதேசத்தின் எல்லைகளை ஒழுங்குமுறையாகவும், சீராகவும் வரையறுப்பதற்கும் இப்பேச்சு வார்த்தையின் போது தீர்மானிக்கப்பட்டது.
இதேநேரம், ஹந்தான பாதுகாப்பு பிரதேசத் துக்குரிய காணிகள் அரசியல்வாதிகளின் ஆதர வாளர்கள் மத்தியில் பகிர்ந்தளிக்கப்பட்டி ருப்பது குறித்தும் ஜனாதிபதி கவனம் செலுத் தினார்.
இதேவேளை, கண்டி மாவட்டத்தில் மரக்கறிவகைகளுக்கான முறையான சந்தை யொன்று இல்லாத விடயமும் சுட்டிக்காட்டப் பட்டதுடன், பயிர்ச்செய்கையின் போது சந்தைவாய்ப்புள்ள பயிர்களை அடையாளம் கண்டு அப்பயிர்ச்செய்கைகளில் ஈடுபடுமாறு விவசாயிகளுக்கு அறிவூட்டு மாறும் ஜனாதிபதி விவசாய அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
அத்தோடு பாது காக்கப்பட்ட பிரதேசத்தில் உண்ணாட்டு மருந்து செடிகள், பழவகைகளைப் பயிரிடு வது தொடர்பாகவும் கவனம் செலுத்து வதற்குத் தேவையான ஆலோசனைகள் வனஜீவராசிகள் அமைச்சின் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டன. விவசாயிகள் சரியான முறையில் பயன் பெறக்கூடிய வகையில் நீர் வீணாகாத வகையில் சிறு நீர்ப்பாசன கால்வாய்களைப் புனரமைக்குமாறும் ஜனாதிபதி அதிகாரி களுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.
“அபிவிருத்தி வேலைத்திட்டங்களை அடிக்கல்லுடன் மாத்திரம் நிறுத்தி விடாதீர்கள், மக்களின் பக்கத்தை யோசித்து அவர்களது தேவைகளை இனங்கண்டு அதனை அடிப்படையாக வைத்து நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள். அபிவிருத்தியின் உண்மையான பலா பலன்களை மக்களுக்குப் பெற்றுக் கொடுங்கள்.
எந்தச் சந்தர்ப்பத்திலும் மக்கள் வழிதவறக்கூடிய வகையில் செயற் படாதீர்கள்” என்று ஜனாதிபதி அரசியல்வாதிகளுக்கும், அரச அதிகாரி களுக்கும் மேலும் கூறினார். கண்டி மாவட்ட மக்க ளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக வும், அங்கு பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்து வதற்காகவும் எதிர்வரும் மூன்று வருடங் களுக்குமென வேலைத்திட்டமொன் றைத் தயாரிக்குமாறும் ஜனாதிபதி அதி காரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.