7/02/2012

| |

தேர்தலுக்காவே தங்களையும் கொள்கையையும் மாற்றும் கூட்டமைப்பு – முன்னாள் முதலமைச்சர்


இவ்வளவு காலமும் தமிழ் மக்களுக்காக எதனையுமே செய்யாத தமிழ் தேசிய அரசியல்வாதிகள் தற்போதுதான் கிழக்கு மக்களின் அரசியல் அபிலாசைகள் குறித்து சிந்திக்கிறார்களாம். இதனைக் கேட்டால் குழந்தப் பிள்ளைக்கும் சிரிப்பு வரும். ஏன் என்றால் தற்போது கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் நடாத்தபட உள்ள நிலையில், தங்களது கொள்ளைகளுக்கும் அப்பால். அதாவது வடகிழக்கு இணைந்த தனித் தமிழ் ஈழமே எங்களது உயிர் மூச்சு என்று எழுபது ஆண்டுகாலம் வங்குரோத்து அரசியல் நடாத்திய யாழ்மேலாதிக்க வாதிகளை முழுமையாகக் கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு கட்சியினர் ; தற்போது தங்களது கொள்கை கோத்திரங்கள் எல்லாம் தூக்கி எறிந்து விட்டு இன்று கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியைப் பெறுவதற்காக ; கிழக்கு மாகாண சபைத் தேர்தலிலே போட்டியிடப் போகின்றார்களாம். இவர்கள் இப்படித்தான் காலங்காலமாக தேர்தல்களுக்காக தங்களது கொள்கைகளை மாற்றி மாற்றி வாக்கு கேட்டு அரியாசனம் ஏறுவார்கள். பின்னர் மக்களுக்காக எதனையுமே செய்ய மாட்டார்கள.; இப்படிப்பட்டவர்களுக்கு இன்னும் மக்கள் வாக்களிக்கத்தான் வேண்டுமா? என முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேசியத் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
இன்று (30.06.2012) ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் எஸ். உதயசிறிதர் தலைமையில் இடம்பெற்ற கரடியனாறு கலாச்சார மண்டபத்தினை திறந்து வைக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், இரு நாடுகள் இணைந்து சர்வதேச ரீதியில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் அமையப் பெற்ற மாகாண சபை முறைமையானது, உண்மையிலே 1987 ஆம் ஆண்டுக்கு முன்னர் தமிழர்கள் பட்டதுயர்களை எல்லாம் ஓர் அதிகாரப் பகிர்வின் அடிப்படையில் தீர்ப்தற்கான ஓர் முறைமையை கொண்டமைந்ததாகவே இம் மாகாண சபை முறைறைமை அமையப் பெற்றது.
மாகாண சபை முறைமை கொண்டுவரப்பட்டபோது அதனை விரும்பியோ விரும்பாமலோ ஏற்றே இருக்க வேண்டும். காரணம் தமிழ் மக்களுக்கான ஓர் அதிகாரப் பகிர்வு விடயம் காலத்தின் கட்டாயம். அதன் ஆரம்பப் புள்ளிதான் மாகாண சபை. இதனை அப்போதைய விடுதலைப் புலிகள் ஏன் தமிழ் அரசியல் தலைவர்கள் கூட ஏற்க மறுத்தார்கள்.
ஆனால் 1988 ஆம் ஆண்டு ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் சார்பில் வடகிழக்கிணைந்த மாகாண சபையை வரதராஜபெருமாள் அவர்கள் பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்ற விடயம் வரவேற்கத்தக்கதொன்றாக இருந்தாலும்கூட,  இடைநடுவே அதாவது சுமார் 18 மாதங்கள் மாத்திரமே ஆட்சி செலுத்தி விட்டு பின்னர் தமிழீழத்தை பிரகடனஞ் செய்து விட்டு அவர் ஓடிவிட்டார்.
இவ்வாறாக முழுக்க முழுக்க தமிழ் மக்களுக்கென்றே கொண்டுவரப்பட்ட இம் மாகாண சபையினை பின்னர் யாருமே ஏற்கத்தயாராக இருக்கவில்லை. இந்த சந்தர்ப்த்தில்தான் 2008 ம் ஆண்டு கிழக்கிலே தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் எனும் கிழக்கு மக்களுக்கான தனிக் கட்சி ஒன்று உதயமாகி அதனூடாக தேர்தல் இடம்பெற்று கிழக்கு மாகாண சபையினை நாங்கள் கைப்பற்றினோம்.
உண்மையில் ஜனநாயகம் சார்ந்த ஓர் அரசியல் கட்சியின் மக்கள் தலைவர்கள் என்றால் தான் சார்நத சமூகத்திற்கு தங்களது அரசியல் பின்புலத்தால் ஆகக் கூடியதாக எதை பெற்றக் கொடுக்க முடியுமோ அதனைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். ஆனால் கடந்த சமார் 70 வருட கால தமிழர் அரசியல் வரலாற்றிலே இவைகள் நடந்ததாக சரித்திரமே இல்லை.
ஆனால் நான் 4 வருடம் கிழக்கு மாகாண சபையை பொறுப்பேற்று சீராக ஓர் ஜனநாக ஆட்சி முறையினை ஏற்படுத்தியதன் விளைவாக தற்புபாத அனைவருக்கும் முதலமைச்சர் பதவியின் மேல் மோகம் ஏற்பட்டு விட்டது. அதாவது எது வேண்டாம் அது தங்களது கொள்கைக்கு முரணானது என சர்வதேச ரீதியல் பகிரங்கமாக விமர்சனம் செய்தார்களோ அதே மாகாண சபை முறைமையயை ஏற்று இன்று தேர்தலிலே குதிக்க கங்கணம் கட்டுகிறார்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பினர்.
பாருங்கள் மக்களே! 1970 ம் ஆண்டு தேர்தலிலே தங்களது சொந்த தொகுதிகளிலே அப்போதைய தமிழ் தேசிய வாதிகள் என தங்களை பறைசாற்றிய  அமிர்தலிங்கம் , ஜி.ஜி.பொன்னம்பலம் போன்றோர் தோற்றதன் வெளிப்பாடுதான் 1976 ஆண்டு கொண்டவரப்பட்ட தமிழீழப்  பிரகடணம். உண்மையில் இப் பிரகடணம் கொண்டுவரப்பட்டதன் நோக்கம் 1977ம் ஆண்டு தேர்தலிலே தாங்கள் வெற்றி பெற வேண்டும் என்பதாகும். ஆனால் அப்போது அவர்கள் வெற்றி பெற்றார்கள்.
அதனடிப்படைடயில் தற்போது அவர்கள் அவ்வாறே சிந்திக்கிறார்கள். அன்று அதனை மக்கள் முடட்டாள்தனமாக ஏற்றுக் கொண்டார்கள். காரணம் அவர்களுக்கு அரசியலின் யதார்த்தத்தை சொல்லிக் கெதாடுக்க யாரும் இருக்க வில்லை. அதற்கான ஓர் தேவையும் அப்போது இருக்கவில்லை. ஆனால் தற்போது அந்த அரசியல் தெளிவை விசேடமாக கிழக்கு மக்களுக்கு சொல்ல எமது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி இருக்கிறது. கிழக்கு பற்றி சிந்திப்தற்கு மக்களுக்கு சுய அறிவும் அதற்கான தலைமையும் அவர்களிடத்தில் இருக்கிறது.
எனவே 1976 ம் ஆண்டு போல் தற்போது எமது கிழக்கு மக்களை யாரும் ஏமாற்ற முடியாது . அதற்கு எமது கட்சி ஒருபோதும் இடமளிக்காது. கிழக்கின் உண்மை நிலையை மக்களுக்கு எடுத்துச் சொல்வோம். அன்றிருந்த காலம் வேறு இன்றைய காலம் வேறு. எனவே மக்களே இந்த காலத்திற்கு காலம் கொள்கைகளை மாற்றுகின்ற இந்த கூட்டமைப்பினர்க்கு தகுந்த பாடத்தினை கிழக்கு மக்கள் புகட்ட வேண்டும் எனவும் அவர் தனதுரையில் குறிப்பிட்டார்.
உண்மையில் இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு கிழக்கு தேர்தலிலே போட்டியிடுவதன் உள் நோக்கம் கிழக்கிலே தமிழ்மகன் அதுவும் இந்த சந்திரகாந்தன் மீண்டும் முதலமைச்சராக வரக் கூடாது என்பதே அவர்களது இமாலய இலக்கும் கூட. அதனை எமது மக்கள் புரிந்து கொண்டு எமது கிழக்கை எம்மவரே ஆள நீங்கள் சிந்தித்து செயலாற்ற வேண்டும். அதற்கான சந்தர்பப்ம் ஒவ்வொரு கிழக்கு தமிழ் மக்களின் கைகளிலே காலம் தந்திருக்கிறது. அதனை சரியாக எம் மக்கள் கையாள்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேசியத் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சி.சந்திரகாந்தன் தெரிவித்தார்.
குறித்த கலாச்சார மண்டபமானது முதலமைச்சரின் நிதி ஒதுக்கீட்டில் புணரமைக்கபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஒருங்கிணைந்த நிறுவனங்களின் பணிப்பாளர் க. மோகன், கரடியனாறு பெரும்போக உத்தியோகஸ்த்தர் வீமன், மற்றும் கரடியனாறு மகா வித்தியாலயத்தின் அதிபர் செந்தில்நாதன் உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள்.