நான்கு வருடங்களுக்கு முன்னர் இருந்த மட்டக்களப்பின் நிலையும் தற்போது இருக்கின்ற நிலையும் நாம் நன்கறிந்ததே.
தற்போதைய அபிவிருத்திப் பணிகளை எமக்குக் கொண்டு வந்து சேர்த்தவர் எமது முதல்வர் சி.சந்திரகாந்தன் அவர்களே.
62 வருடங்கள் யாராலும் சாதிக்க முடியாதவற்றை எமது மாவட்டத்தில் வெறும் நான்கே வருடங்களில் சாதித்துக் காட்டியவர் எமது முதல்வர் ஒருவரே என்பதை நாம் நன்கறிவோம் என்று கொம்மாதுறை பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
நேற்று வெள்ளிக்கிழமை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் திரு.சி.சந்திரகாந்தன் அவர்கள் கொம்மாதுறை பிரதேச மக்களுடன் நிகழ்த்திய கலந்துரையாடல்களின் போதே பிரதேச மக்கள் இவ்வாறு தெரிவித்திருந்தனர்.
வடிகான் அமைக்கும் தேவையொன்று அப் பிரதேசத்தில் இருப்பதை இனங்கண்டு கொண்ட சி.சந்திரகாந்தன் அவர்கள் செங்கலடி பிரதேச சபையின் தவிசாளர் திரு.வினோத் அவர்களை உடனடியாக அழைத்து இத் தேவையினைப் பூர்த்தி செய்து கொடுப்பது தொடர்பிலான ஆலோசனைகளை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.