இம்முறை நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபைத் தேர்தலிலே கடந்த முறை போல் இம்முறையும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி 3 ஆசனங்களைப் பெற வேண்டும். அதற்கான தந்திரோபாயங்களை ஆராயும் விசேட கூட்டம் தமிழ் மக்கள விடுதலைப் புலிகள் கட்சியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான சோமசுந்தரம் புஸ்பராசா தலைமையில் இடம் பெற்றது. மட்டக்களப்பிலுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் காரியாலயத்தில் இடம் பெற்ற மேற்படி கலந்துரையாடலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சி. சந்திரகாந்தன் கொள்கைபரப்புச் செயலாளர் ஆஸாத் மௌலானா அம்பாறை மாவட்ட அரசியல் ஆய்வாளர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், புத்திஜீவிகள், மற்றும் பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள் கலந்து கொண்டார்கள். இம்முறை அம்பாறை மாவட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் சார்பில் மூன்று வேட்பாளர்கள் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான சோ.புஸ்பராசா, எஸ். செல்வராசா மற்றும் இவர்களோடு இணைந்து புஸ்பகுமார் ஆகிய மூவருமே ஆவார்கள்.