கிழக்கு மாகாண சபை தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 13 அரசியல் கட்சிகளும் 21 சுயேட்சை குழுக்களும் போட்டியிடுகின்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தாக்கல் செய்யப்பட்ட 34 வேட்புமனு பத்திரங்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் மாவட்ட செயலாளருமான பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.
இதில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு, ஐக்கிய தேசிய கட்சி, இலங்கை தமிழரசு கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் மக்கள் விடுதலை முன்னணி உட்பட 13 அரசியல் கட்சிகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுகின்றன.
அத்தோடு 21 சயேட்சை குழுக்களும் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுகின்றன.