7/19/2012

| |

12 மணியுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் 22 சுயேட்சைக்குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன

இன்று (18.7.2012) புதன்கிழமை மாலை வரைக்கும் கிழக்கு மாகாண சபை தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக நான்கு அரசியல் கட்சிகளும் 6 சுயேட்சைக் குழுக்களும் வேட்புமனுப் பத்திரத்தை தாக்கல் செய்துள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று மக்கள் விடுதலை முன்னணி மற்றும் ஈரோஸ் எனப்படும் ஈழவர் ஜனநாயக முன்னணி ஆகிய அரசியல் கட்சிகளும் 3 சுயேட்சைக் குழுக்களும் வேட்புமனுப் பத்திரங்களை தாக்கல் செய்தன.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலருமான பி.எஸ்.எம்.சார்ள்ஸிடம் இவர்கள் தமது வேட்புமனுப் பத்திரத்தை தாக்கல் செய்தனர்.
இன்று பகல் 12 மணியுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் 22சுயேட்சைக்குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் தெரிவித்தார்.
நாளை (19.7.2012) வியாழக்கிழமை வேட்புமனுப்பத்திரம் தாக்கள் செய்யும் இறுதி தினமாகும் இன்று பிரதான கட்சிகளான ஆளம் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி, இலங்கை தமிழரசுக் கட்சி (தமிழ் தேசியக் கூட்டமைப்பு) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய அரசியல் கட்சிகள் வேட்புமனுக்களை தாக்கல் செய்யவுள்ளன.
இதே நேரம் மட்டக்களப்பு மாவட்ட செயலகம் வேட்புமனு தாக்கல் நடை பெறுவதை யொட்டி பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன. கச்சேரிக்கு வெளியே வாகனங்கள் நிறுத்தப் படுவதற்கு வேட்புமனுப்பத்திரம் தாக்கல் செய்பவர்கள் மாத்திரமே கச்சேரிக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.