7/31/2012

| |

அவுஸ்ரேலியா செல்ல முயன்ற 108 பேருக்கு சந்திரகாந்தனின் ஏற்பாட்டில் பிணையில் செல்ல அனுமதி




மட்டக்களப்பு மாவட்டத்தில் கடநத் வாரம் வாழைச்சேனை பிரதேசத்திலிருந்து அவுஸ்ரேலியாவிற்கு சட்டவிரோதமான முறையில் செல்ல முயன்ற 108 பேரை பொலிசார் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தினர். இவர்கள் அனைவரும் இன்றுவரை விளக்கமறியலில் வைக்கும் படி நீதி மன்றம் உத்தரவிட்டது. இது தொடர்பான வழக்க இன்று எடுத்துக் கொள்ளப்பட்டது. ஆந்த வகையில் 108 பேருக்கு இன்று வாழைச்சேனை நீதி மன்றம் பிணையில் செல்ல அனுமதித்துள்ளது. குறித்த வழக்கு விசாரணை தொடர்பில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முதலமைச்சர் வேட்பாளர் சந்திரகாந்தனை அணுகியவுடன் இதற்கான உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்கென் விசேடமாக கொழும்பிலிருந்து வரவழைக்கப்பட்ட சட்டத்தரணி நஜீம் அவர்கள் ஆஜராகியிருந்தார். குறித்த ஒவ்வொரு குற்றவாளிகளுக்கும் தலா ஒரு இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் முதலமைச்சர் வேட்பாளர் சந்திரகாந்தன் மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.