7/25/2012

| |

கிழக்கு மாகாணசபைத் தேர்தலுக்கா​க கொக்கரிக்​கும் கூட்டங்கள் - கொக்கரிப்​பு - 07

முஸ்லிம்கள் விரட்டியடிக்கப்பட்டபோதும் படுகொலை செய்யப்பட்டபோதும் தமிழ்
தேசியக் கூட்டமைப்பினர் எங்கே போனார்கள்?
கிழக்கு மாகாணசபை தேர்தலில் யார் முதலமைச்சர்? முஸ்லிம்களும் தமிழர்களும்
தாங்கள் முதலமைச்சர் பதவியினைப் பெற வேண்டும் என்று வியூகங்களை
வகுத்துக்கொண்டிருக்கும் இக் கால கட்டத்தில் தமிழ் கட்சிகள் சிலவும்
குறிப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் ஒரு சில அரசியல்வாதிகளும்
தமிழ் முதலமைச்சரை இல்லாமல் செய்வதற்கு பல சதித் திட்டங்களை தீட்டி
வருகின்றனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கிழக்கு மாகாண விகிதாசாரத்தின்
அடிப்படையில் தாம் கிழக்கு மாகாணத்தில் ஆட்சி அமைக்க முடியாது.
முதலமைச்சரை பெற முடியாது எனபது தெரிந்தும் கிழக்கில் தமிழ் முதலமைச்சர்
வரக்கூடாது என்பதற்காகவே போட்டியிடுகின்றனர். தாம் போட்டியிடுவதன் மூலம்
தமிழர்களின் வாக்குகள் சிதறடிக்கப்பட்டு தமிழ் முதலமைச்சர் இல்லாமல்
போகலாம் என்பது கூட்டமைப்பினருக்கு தெரியும்.
தமிழ் முதலமைச்சர் இல்லாமல் போவதன் மூலம் கிழக்கின் துரித அபிவிருத்திகள்
இல்லாமல் போகலாம் என்பது தெரிந்திருந்தும் கூட்டமைப்பினர் இத் தேர்தலில்
தமிழர்களின் வாக்குகளை சிதறடித்து கிழக்கின் அபிவிருத்தியை இல்லாமல்
செய்யவே போட்டியிடுகின்றனர்.
இப்பொழுதுதான் கூட்டமைப்பினருக்கு முஸ்லிம்கள்மீது அக்கறை
வந்திருக்கிறதா? கூட்டமைப்பினர் இதற்கு முன்னர் முஸ்லிம்கள் பல அவலங்களை
சந்தித்தபோது எங்கே போனார்கள்? வடக்கிலிருந்து முஸ்லிம்கள்
விரட்டப்பட்டபோதும், பள்ளிவாசல்களில் முஸ்லிம்கள் படுகொலை
செய்யப்பட்டபோது இந்தக் கூட்டமைப்பினர் எங்கே போனார்கள்? அன்று ஏன்
முஸ்லிம்கள்மீது அக்கறை வரவில்லை. அன்று வடக்கிலிருந்து
விரட்டப்பட்டபோதும் பள்ளிவாசல்களில் முஸ்லிம்கள் படுகொலை
செய்யப்பட்டபோதும் புலிகளுடன் பக்கப்பாட்டுப் பாடியவர்களுக்கு
முஸ்லிம்கள் பற்றி பேசவோ அக்கறைப்படவோ எந்த அருகதையும் இல்லை.
முஸ்லிம்கள் அவலங்களையும் அழிவுகளையும் சந்தித்தபோது திரும்பிக்கூட
பார்க்காமல் கைகொட்டிச் சிரித்தவர்களுக்கு முஸ்லிம்கள் நிம்மதியாக
வாழுகின்றபோது அக்கறை வந்திருக்கின்றது. முஸ்லிம்கள் நிம்மதியாக வாழ்வது
பிடிக்கவில்லைபோலும். முஸ்லிம் காங்கிரஸ் கூட்டமைப்பினருடன் கூட்டுச்
சேர்வது தொடர்பாக பேசப்படுகின்றது. முஸ்லிம்காங்கிரஸ் கூட்டமைப்பினருடன்
கூட்டுச் சேர்வார்களானால் முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம் மக்களுக்கு
மிகப்பெரும் வரலாற்றுத் தவறினைச் செய்யும்.
முஸ்லிம்கள் விரட்டியடிக்கப்பட்போதும் படுகொலை செய்யப்பட்டபோதும்
கைகொட்டிச் சிரித்து வேடிக்கை பார்த்து புலிகளுக்கு ஆதரவு வழங்கியவர்கள்
இக் கூட்டமைப்பினரே.
தொடரும்..