கிழக்கு மாகாணத்தின் இன விகிதாசாரம் தெரியாமல் கிழக்கு மாகாணசபையினை நாமே
கைப்பற்றுவோம், முதலமைச்சர் பதவி எமக்குத்தான் என்றெல்லாம்.
கூட்டமைப்பினர் தம்பட்டமடிப்பது சிறு பிள்ளைத்தனமானது. கிழக்கு
மாகாணத்தில் ஒரு சமூகம் மாத்திரம் மாகாணசபை ஆட்சியை அமைக்க முடியுமா
இல்லையா என்பதனைக்கூட அறியாத கூட்டமைப்பினர் கிழக்கு மக்களுக்கு என்ன
செய்யப்போகின்றனர்.
கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை மூவின மக்களும் வாழ்ந்து வரும் ஒரு
பிரதேசம், கிழக்கு மாகாணத்தின் அரசியல் நிலைமைகளை எடுத்துப்
பார்க்கின்றபோது கிழக்கு மாகாணத்தின் இன விகிதாசாரம் கிழக்கு மாகாண
அரசியலை தீர்மானிப்பதிலே பெரும் பங்கு வகிக்கின்றது. தனித்து ஒரு
சமூகத்தினால் அட்சி அமைக்க முடியாத இன விகிதாசாரம் கிழக்கு மாகாணத்திலே
இருக்கின்றது.
இன்று கூட்டமைப்பினர் சொல்வதுபோது தமிழர்கள் மட்டும் ஆட்சியமைக்க
முடியுமா? வெறுமனே கண்ணை மூடிக்கொண்டு பேசிக்கொண்டிருக்கின்றனர்.
தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையிலான விகிதாசார வேறுபாடு ஒருசில
வீதங்களே. முஸ்லிம்கள் உச்ச அளவில் வாக்களிப்பார்கள் குறிப்பாக 80-90
வீதம் வாக்களிப்பார்கள். ஆனால் தமிழர்களோ 50-60 வீதம் வாக்களிப்பார்கள்.
இது கடந்தகால புள்ளிவிபரங்கள் சொல்கின்றன. தொடரும் பகுதிகளில்
புள்ளிவிபரங்களை இணைக்கிகின்றேன். மறு புறத்தில் இத் தேர்தலில்
முஸ்லிம்களின் வாக்களிப்பு வீதம் இன்னும் அதிகரிக்கலாம். காரணம் முஸ்லிம்
ஒருவரை முதலமைச்சராக பெற வேண்டும் என்பதில் முஸ்லிம்கள் உறுதியாக
இருக்கின்றனர்.
கிழக்கின் இன விகிதாசாரமோ வாக்களிப்பு வீதங்களோ அரசியல் நிலைமைகளோ
தெரியாமல் எங்களுக்குத்தான் முதலமைச்சர் கிடைக்கும் என்று கூட்டமைப்பினர்
சொல்வதற்கும் காரணம் இல்லாமல் இல்லை. அவர்களின் ஒரே நோக்கம் தமிழ்
முதலமைச்சரை இல்லாமல் செய்ய வேண்டும் என்பதாகும். அதுவும் குறிப்பாக
பிள்ளையானை அரசியலில் இருந்து துரத்தவேண்டும் என்பதே அவர்களின் ஒரே
நோக்கம்.
இன்று கிழக்கிலே ஒரு பாரிய அரசியல் சக்தியாக பிள்ளையானும் அவரது
கட்சியும் உருவெடுத்துவிட்டது. இனிமேலும் பிள்ளையானை விட்டுவைத்தால்
கிழக்கிலே தாம் அரசியல் நடாத்த முடியாது. கிழக்கு மாகாணம் பாரிய
அபிவிருத்தி கண்டு வருகின்றது. கிழக்கு மக்கள் பிள்ளையான் பின்னால் அணி
திரள்கின்றனர். என்பதை எல்லாம் பார்க்கின்றபோது கூட்டமைப்பினருக்கு
என்றுமில்லாத ஒரு அச்சமும் நடுக்கமும் பிடித்துவிட்டது.
பூசாரியை வைத்து பூசை முடித்து சில சதித் திட்டங்களைத் தீட்டி கிழக்கு
மாகாணத்தில் தமிழ் முதலமைச்சரை இல்லாமல் செய்ய முயற்சிக்கினறனர். பாவம்
இவர்கள் கிழக்கு மக்கள் உண்மைகளையும் யதார்த்தங்களையும்
உணர்ந்துவிட்டனர். கூட்டமைப்பினரை தூக்கி எறிந்துவிட்டனர் என்பதை
அறிந்தும் தாம் தோல்லி அடைவோம் என்று தெரிந்தும் ஆசாமியும் அவரது
அடிவருடிகளும் முதலமைச்சர் பதவி ஆசையோடு நாக்கை தொங்ஙவிட்டு நாயாய்
அலைகிறார்கள்.
காரணம் பல தசாப்த அரசியல் நடத்திய கூட்டமைப்பினருக்கு எப்படி அரசியல்
செய்வது என்பது தெரியாது. பிள்ளையான் நடாத்திய அரசியலைப் பார்த்து தாமும்
பிள்ளையானைப் போன்று கிழக்கு மாகாணசபையை ஆட்சி செய்து பார்ப்போம் என்ற
ஆசைதான்
தொடரும்..