7/04/2012

| |

கிழக்கு மாகாணசபைத் தேர்தலுக்காக கொக்கரிக்கும் கூட்டங்கள் - கொக்கரிப்பு 02

முந்திய என்னுடைய பதிவிற்கு ஒரு நண்பர் நீண்ட ஒரு கருத்துரையினை விட்டுச்
சென்றார் அவருக்கு பதிலாகவே இந்த பகுதி இடம்பெறுகின்றது.
சந்ரு

உங்கள் கருத்துக்கள் அடிமட்ட முட்டாள்தனமாக இருக்கின்றது. வெறுமனே கண்ணை
மூடிக்கொண்டு பிள்ளையான் கொலை செய்தான் கடத்தினான் கப்பம் பெற்றான்
என்றெல்லாம் சொல்வது உங்களைப்போன்ற யாழ்ப்பாண மேலாதிக்கவாதிகளின்
கொள்ளை. கொலைகளை தடுத்து நிறுத்தி கிழக்கில் உண்மையான ஜனநாயகத்தை
ஏற்படுத்திய பெருமை பிள்ளையானையே சாரும்.
வெறுமனே கண்ணை மூடிக்கொண்டு கொலை செய்தான் கொள்ளையடித்தான் என்று
குற்றம்சாட்டாதீர்கள் ஆதாரங்களோடு உண்மைகளைச் சொல்லுங்கள்.
கிழக்கு மாகாண புத்திஜீவிகளைக் கொன்றொழழித்தது யார் என்பதனை
மறந்துவிட்டீர்களா? இராஜன் சத்தியமூர்த்தி உட்பட எத்தனையோ புத்தியீவிகளை
கொன்றொழித்தவர்கள் யார்? கிழக்கிலே புத்திஜீவிகள்
கொன்றொழிக்கப்படுகின்றபோது இந்தக் கூட்டமைப்பினர் மெளனம் சாதித்தது
ஏன்? சாவது கிழக்குத் தமிழன் என்பதனாலா?
புலிகளிலிருந்து கருணா பிரிந்து வந்தபோது. பல வெற்றிச் சமர்களைப்
படைத்து உங்களையும் வடக்கையும் காப்பாற்றிய காவல் காத்த கிழக்குப்
போராளிகளை கொன்றொழித்தவர்கள்யார்? கிழக்குப் பொராளிகள் பிரிந்து
வந்தபோது வெருகலிலே சகோதரப் படுகொலைகளை மேற்கொண்டு 150க்கு மேற்பட்ட
போராளிகளை கொன்றொழித்தவர்கள் யார்? இதிலே வெட்கித் தலை குனியவேண்டிய
விடயம் உங்களோடு சேர்ந்து போராடிய பெண் போராளிகளை வெருகலில் கதறக்கதற
சித்திரவதை செய்து கொன்று குவித்தீர்கள். உங்களுக்காக பல வெற்றிச்
சமர்களை புரிந்தவர்களுக்கு நீங்கள் செய்த கைமாறு இதுதானா?
ஒன்று இரண்டல்ல பல நூற்றுக்கணக்கான புத்திஜீவிகளும் நூற்றுக்கணக்கான
போராளிகளும் கிழக்கிலே கொலை செய்யப்பட்டிருக்கின்றனர். அப்போது எங்கே
போனார்கள் இந்தக் கூட்டமைப்பினர்?
இதுவரை கிழக்கு மக்களுக்காக இந்தக் கூட்டமைப்பினர் என்ன
செய்திருக்கின்றனர்? தாம் சொத்துச் சேர்த்தனர், அரசாங்கத்திடம்
சலுகைகளைப் பெற்று அனுபவித்து வருகின்றனர். கூட்டமைப்பு அரசியல்வாதிகள்
சொத்துச் சேர்க்கவில்லையா? அரசாங்கத்திடமிருந்து சலுகைகளைப்
பெறவில்லையா? அமைச்சர்களோடு சேர்ந்து கொஞ்சிக் குலாவுவது பிள்ளைகள்
உறவினர்களுக்கு வேலை வாய்ப்புக்களைப் பெறுவது இவை எல்லாம் கூட்டமைப்பினர்
செய்யலாம்.
ஆனால் 30 வருடங்களாக யுத்தத்தால் சின்னாபின்னமாக்கப்பட்ட கிழக்கினை
அபிவிருத்தி செய்ய பிள்ளையான் அரசுடன் பேரம்பேசினால் துரோகம்
என்கின்றீர்கள் எங்கே இருக்கின்றது உங்கள் நீதி நியாயம்?
எங்கேயோ இருந்துகொண்டு பிள்ளையான் கொள்ளையடிக்கின்றான் சொத்துச்
சேர்க்கின்றான் என்று சொல்வது உங்கள் முட்டாள்தனம். முதலில் கிழக்கின்
தற்போதைய நிலைமைகளையும் உண்மைகளையும் யதார்த்தங்களையும்
உணர்ந்துகொள்ளுங்கள்.
கிழக்கிலே தற்போது என்ன நடடக்கின்றது யார் மக்களுக்காக சேவை
சேய்கின்றார் என்பதனை மக்கள் நன்கு உணர்ந்திருக்கின்றனர். இனிமேலும்
கிழக்கு மக்களை எவராலும் ஏமாற்ற முடியாது. இன்று கிழக்கு மாகாணம் துரித
கதியில் அபிவிருத்தி நோக்கி சென்றுகொண்டிருக்கின்றது. இவை யாரால்
சாத்தியமானது என்பது கிழக்கு மக்களுக்கு தெரியும். கிழக்கு மக்களை
இனிமேலாவது நிம்மதியாக வாழ விடுங்கள். கிழக்கை கிழக்காகவே இருக்க
விடுங்கள்.
தொடரும்...