7/31/2012

| |

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் தேர்விற்குள் ஒளிந்திருக்கும் மர்மம் என்ன?

கிழக்கு மாகாண சபைத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கின்றது. அந்தவகையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்குரிய கிழக்கு மக்களின் ஆதரவும் வெற்றி வாய்ப்பும் அதிகரித்து வருகின்ற அதேவேளை தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குரிய மக்களின் ஆதரவு குறைந்து வருவதுடன், படுதோல்வியடைவதற்குரிய சாத்தியங்கள் தெட்டத்ததெளிவாகவும் வெளித்தெரிகின்றது. இந்நிலைமைகளுக்கிடையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் தேர்விற்குள் ஒளிந்திருக்கும் மர்மம் என்ன? என்பதை இக்கட்டுரை ஆராய்கின்றது.
கிழக்கு மகாணசபைத் தேர்தலில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது களமிறங்கும்போதே தாம் முதலமைச்சராக வரப்போவதில்லை என்பதை நன்கறிந்திருந்ததுடன்,  தற்போது அரசியலில் ஈடுபடும் பாராளுமன்ற உறுப்பினர்களின் எதிர்கால நிலைப்பையும் கருதியே வேட்பாளர் தேர்வினை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அதாவது தமது வேட்பாளர் தேர்வில் மக்கள் செல்வாக்கற்றவர்களையும், தமிழ் மக்களுக்கு துரோகமிழைத்தவர்களையும், கடத்ல்காரர்களையும் வேட்பாளர்களாக தேர்வுசெய்ததிலிருந்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை அறிந்துகொள்ள முடிகின்றது.
 
கிழக்கு மாகாண சபைத் தேர்தலிலே தமது கட்சி வெற்றி பெறாது என்றும்,  முதலமைச்சர் பதவி கிடைக்கப்போவதில்லை என்றும் அறிந்திருந்தமையும் தமது வேட்பாளர் தேர்வில் சாதாரணமானவர்களையே  குறிப்பாக மக்கள் செல்வாக்கற்றவர்களையும் குற்றவாளிகளையும் தேர்வு செய்தமைக்கு முதலாவது காரணமாகும். கிழக்கு மாகாண சபை தேர்தலில் வெற்றிபெற்று முதல்வர் பதவி வகிப்பது என்பது மிகவும் அதிகாரமுள்ள ஒரு பதவியாகும். குறிப்பாக பாராளுமன்னற உறுப்பினர்கள் பாராளுமன்றத்திலே தனது அதிகாரத்தை செலுத்தமுடியும். ஆனால் முதல்வர் பதவி என்பது கிழக்கு மண் முழுவதையும் நிர்வகிக்கின்ற ஒரு அதிகாரமாகும். கிழக்கு மண்ணின் அபிவிருத்தி திட்டங்கள் அனைத்தும் கிழக்கு மாகாண சபைக்கூடாகவே இடம்பெறும்.
 
அந்தவகையில் இத்தகைய முதல்வர் பதவியை இலக்கு வைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு களத்தில் இறங்கியிருந்தால் நிச்சயம் தற்போதைய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அவர்களோ அல்லது வேறு யாராவது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களோ இத்தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை வேட்பாளர்களாக போட்டியிட்டிருப்பார்கள். ஆனால் இத்தேர்தலில் போட்டியிட்டால் வெற்றியீட்டமுடியாது என்றும் முதல்வர் பதவியோ அல்லது மாகாணசபை  சபை உறுப்பினர் பதவியைக்கூட பெறமுடியாது என்று கருதியே தற்போதைய பாராளுமன்ற உறுப்பினாகள் எவரும் இத்தேர்தலில் போட்டியிடத் தீhமானிக்கவில்லை. ஏnனினில் தமது பாராளுமன்றப் பதவியையாவது வைத்துகொண்டிருப்போம் என்று கருதியமையே ஆகும்.
 
அந்தவகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது இத்தடவை தலைமைவேட்பாளாகளாக தேர்தலில் நிறுத்தியிருப்பவாகள் எவரும் மக்கள் செல்வாக்கற்வாகளாகவே காணப்படுகின்றனர். முன்னாளில் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து பின்னர் மக்களுக்கு சேவைசெய்யாததனால் வெறுப்படைந்த மக்களால் தோற்கடிக்கப்பட்ட துரைராசசிங்கம் என்பவரை மட்டக்களப்பில் தலைமை வேட்பாளராக நிறுத்தியுள்ளது. உண்மையில் அதேபோன்று திருகோணமலையில் தண்டாயுதபாணி; என்பவரையும், அம்பாறையில் மகேந்திரன் என்பவரையும் தலைமை வேட்பாளர்களாக களமிறக்கியது. இவ்வாறு மக்கள் செல்வாக்கற்றவர்களை தலைமை வேட்பாளர்களாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நிறுத்தியுள்ளமையே தமது கட்சி படுதோல்வியடையும் என்பதை முன்கூட்டியே உணர்ந்துள்ளமையயை எடுத்துக்காட்டுகின்றது.
 
தற்போது பாராளுமன்ற உறுப்பினர்களாக வலம்வரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரின் எதிர்கால அரசியல் இருப்பிற்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதிலும் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் சுயநலமாகக் கருதியமையும் மக்கள் செல்வாக்கற்றவர்களை தேர்தலில் களமிறக்கியுள்ளமைக்கு மற்றொரு காரணம் எனக் கூறப்படுகின்றது.
 
இத்தேர்தலில் மக்கள் செல்வாக்குள்ளவர்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் களமிறக்கினால் அவர்கள் இன்னும் இத்தேர்தலின் மூலம் பிரபல்யமடைவதுடன், அடுத்ததடவை இடம்பெறும் பாராளுமன்ற தேர்தலில் தம்மை தோல்வியடையச் செய்து விடுவர் என்று சில சுயநலமுடைய பாராளுமன்ற உறுப்பினர்கள் கருதியிருந்தனர். இக்காரணத்தினால் ஏனோதோனோ என்ற அலட்சியப் போக்கில் வீணாக தமிழ் மக்களை குழப்புவதற்காகவும் பொருத்தமற்ற வேட்பாளர்களைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்வு செய்தது.
 
அண்மையில் திருமலை மாவட்ட தமிழ்தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் ஒருவர் வெளிநாட்டுக்கு இலங்கையர்களை கடத்துவது தொடர்பில் கைதுசெய்யப்பட்டார். இத்தகைய கடத்தல் காரர்களை தமது கட்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு களமிறக்கியிருந்தது. எத்தனையோ நல்லவர்களெல்லாம் இருக்கின்றபோது இத்தகைய கடத்தல்காரர்கள்தானா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குக் கிடைத்தது. அதுமட்டுமன்றி கடந்த காலத்தில் ரெலோ, புளோட்,ஈபிஆர்எல்எப் போன்ற துணைஆயுதக் குழுக்களில் இருந்து தமிழ் மக்களுக்கு பல இன்னல்களை விளைவித்தவர்களையும் தற்போது உள்வாங்கியுள்ளது. அதுமட்டுமா முஸ்லிம் இனத்தவர்களையும்வேட்பாளர்களாக வீணாக தேர்தலில் களமிறக்கியுள்ளது. இந்த முஸ்லிம்களுக்கு சிறிய அளவில் கூட வாக்குகள் கிடைக்கப்போவதில்லை என்பதை அறிந்தும் கூட தமது சுநலங்களுக்காக தேர்தலில் களமிறக்கியுள்ளதானது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் சாணாக்கியமற்ற தன்மையினையும், மிகவும் பிற்போக்கான அரசியில் பாதையில் பயணிக்கின்றமையையும் எடுத்துக்காட்டுகின்றது.
தாம் வெற்றிபெறப்போவதில்லை,நமது பாராளுமன்றக் கதிரைக்கு ஆபத்து வரக்கூடாது போன்ற இரு காரணங்கiளாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தமது வேட்பாளர்களை நிறுத்தியுள்ளமையினால் கிழக்கில்; தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்களாக இருந்த ஒருசிலரையும் கூட மிக விரைவாக அண்மைக்காலத்தில் இழந்து வருவதனை அவர்களுடைய தேர்தல் பிரசாரக்கூட்டங்கள் தௌ;ளத்தெளிவாக உணர்த்தி நிற்கின்றன.
»»  (மேலும்)

| |

அவுஸ்ரேலியா செல்ல முயன்ற 108 பேருக்கு சந்திரகாந்தனின் ஏற்பாட்டில் பிணையில் செல்ல அனுமதி




மட்டக்களப்பு மாவட்டத்தில் கடநத் வாரம் வாழைச்சேனை பிரதேசத்திலிருந்து அவுஸ்ரேலியாவிற்கு சட்டவிரோதமான முறையில் செல்ல முயன்ற 108 பேரை பொலிசார் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தினர். இவர்கள் அனைவரும் இன்றுவரை விளக்கமறியலில் வைக்கும் படி நீதி மன்றம் உத்தரவிட்டது. இது தொடர்பான வழக்க இன்று எடுத்துக் கொள்ளப்பட்டது. ஆந்த வகையில் 108 பேருக்கு இன்று வாழைச்சேனை நீதி மன்றம் பிணையில் செல்ல அனுமதித்துள்ளது. குறித்த வழக்கு விசாரணை தொடர்பில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முதலமைச்சர் வேட்பாளர் சந்திரகாந்தனை அணுகியவுடன் இதற்கான உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்கென் விசேடமாக கொழும்பிலிருந்து வரவழைக்கப்பட்ட சட்டத்தரணி நஜீம் அவர்கள் ஆஜராகியிருந்தார். குறித்த ஒவ்வொரு குற்றவாளிகளுக்கும் தலா ஒரு இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் முதலமைச்சர் வேட்பாளர் சந்திரகாந்தன் மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
»»  (மேலும்)

7/30/2012

| |

வரதராஜப் பெருமாள் கைவிட்டு ஓடிய கிழக்கு மாகாண சபையையும் துணிந்து பொறுப்பேற்றோம் - முன்னாள் முதலமைச்சர்

நாம் இறப்பதற்கு முன்னர் எமது மக்களுக்கு ஏதாவது நல்லவற்றைச் செய்ய வேண்டும். எமது நாட்டில் இனியும் தமிழர்கள் அழியக் கூடாது. 
 
வயல்கள், கடல் வளம், ஆறுகள் என்று அனைத்துச் செல்வங்களையும் வைத்து விட்டு நாம் பிச்சைக்காரர்களாக நிற்கக் கூடாது என்பதற்காகவே எமது மக்களுக்குத் தலைமை தாங்கினோம். வரதராஜப் பெருமாள் கைவிட்டு ஓடிய கிழக்கு மாகாண சபையையும் துணிந்து பொறுப்பேற்றோம்.
 
என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் சந்திரகாந்தன் கூறினார். இன்று ஞாயிற்றுக்கிழமை கிரான் பிள்ளையார் ஆலய முன்றலில் இடம்பெற்ற அரசியல் கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில்,   
 
உங்கள் குழந்தைகள் மண் வீட்டினுள் புழுதியில் உறங்குவதை விரும்புவீர்களா? கூறுங்கள். குறைந்த பட்சம் ஒரு சீமெந்துத் தரையில் பாயிலாவது அவர்கள் படுத்துறங்க வேண்டும், அவர்கள் ஆங்கிலம் பேச வேண்டும், கணணித் துறையில் விற்பன்னர்களாக வேண்டும், கைதேர்ந்த அறிஞர்களும், நல்ல தலைவர்களும் எமது மண்ணில் உருவாக வேண்டும். நாம் யாருக்கும் கைகள் கட்டித் தலை வணங்கக் கூடாது.
 
150 இராணுவத்தினரின் பாதுகாப்புடன் குண்டு துளைக்காத வாகனத்தில் அரசின் சலுகைகளைப் பெற்றுக் கொண்டு பிரபாகரன் எதைச் சாதிக்கப் போகின்றான்? எனக் குரல் கொடுத்துக் கை கொட்டிச் சிரித்த ஆனந்த சங்கரிக்கு இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இடம் கொடுத்திருக்கின்றார்கள்.
 
»»  (மேலும்)

| |

களமுனைகள் தொட்டு இன்று வரை எமது பிரதேச மக்களோடு மக்களாய் நிற்கும் பிள்ளையானை ஆதரிப்போம் - ஜெயம்

நாம் சரியான முறையில் சிந்தித்து செயலாற்ற வேண்டிய நேரமிது. தேர்தல் காலங்களில் மட்டுமே உங்களைத் தேடி வருபவர்களிடம் கவனமாயிருங்கள்.
வாகரை மக்களை இலகுவில் ஏமாற்றி விடலாம் என்ற எண்ணம் பலருக்கு இருக்கின்றது. மதுபான அரசியல் செய்ய இங்கே வருபவர்களிடம் ஏமாறாதீர்கள்.
வாகரையில் உங்களை மீளக் குடியமர்த்துவதில் முன்னின்று செயற்பட்டவர்கள் யார்? ஒரு மரண வீடு நிகழ்ந்தாலும் கூட ஓடி வந்து துன்பத்தில் பங்கெடுப்பவர்கள் யார்? எத்தனை வருடத்தின் பின்னர் வாகரையில் மின்சார வசதியைக் கண்டிருக்கின்றோம், மாட்டு வண்டிகள் மாத்திரமே பயணிக்கக் கூடிய வீதிகள் இன்று வாகரையில் நெடுஞ்சாலைகளாகக் காட்சியளிக்கின்றன. எதையும் எம் மக்கள் மறந்து விடக் கூடாது.
30 வருடங்களில் துன்பத்தையே அனுபவித்த எமக்கு சிறப்பான அபிவிருத்திகளைக் கொண்டு வந்து காலடியில் போட்ட பிள்ளையானை நாம் மறப்பதா?
ஓட்டமாவடிக்குச் சென்று பொருட்களைக் கொள்வனவு செய்து வர எத்தனை சோதனைச் சாவடிகளை கடக்க வேண்டியிருந்தது. இன்று நிலைமை எவ்வாறு மாறியிருக்கின்றது, சிந்தியுங்கள்.
 
ஒரு வீடு கூடக் கட்டித்தர திறமையற்ற கூட்டமைப்பினருக்கு வாக்களிப்பதா? அல்லது களமுனைகள் தொட்டு இன்று வரை எமது பிரதேச மக்களோடு மக்களாய் நிற்கும் பிள்ளையானை ஆதரிப்பதா? எம் மக்களில் எமக்கு ஆணித்தரமான நம்பிக்கை இருக்கின்றது. அவர்கள் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுக்கே ஆணையினை வழங்குவார்கள்  என்று என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிரதி தலைவருமான நாகலிங்கம் திரவியம(ஜெயம்); தெரிவித்தார்.
 
நேற்று சனிக்கிழமை கதிரவெளி புதூர் மக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட அரசியல் கலந்துரையாடல் நிகழ்விலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.இக் கலந்துரையாடலில் முதலமைச்சர் வேட்பாளர் சந்திரகாந்தன் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், ஆலய பரிபாலன சபையினர் மற்றும் விளையாட்டு கழகங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டார்கள்.
 
»»  (மேலும்)

| |

மட்டக்களப்பு மாவட்ட வரியிறுப்பாளர் சங்கம் சந்திரகாந்தனுடன் சந்தித்து ஆதரவு தெரிவிப்பு

மட்டகளப்பு மாவட்டத்தின் வரியிறுப்பாளர் ஒன்றியம் இன்று முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனை அவரது மட்டக்களப்பு வாசஸ்த்தலத்தில் வைத்து சந்தித்து கலந்துரையாடினார்கள். இவர்களுக்கும் மாநகரசபைக்கும் இடையிலான ஓர் புரிந்துணர்வின்மை பிரச்சினை முதலமைச்சர் வேட்பாளர் சந்திரகாந்தனால் உடனடியாக தீர்த்து வைக்கப்பட்டது. முதலமைச்சரின் முன்னாள் செயலாளர் மாமாங்கராஜா  தலைமையிலான மேற்படி அமைப்பின் பிரதிநிதிகள் நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபைத் தேர்தலிலே ஒருமித்த தங்களது ஒத்துழைப்பை மீண்டும் சந்திரகாந்தனுக்கே வழங்குவதாகவும் தெரிவித்தார்கள்.
 
இக் கலந்துரையாடலிலே பல மூத்த அரசியல்வாதிகள் தமிழ் தேசிய மற்றும் இதர அரசியல் கட்சியின் முக்கியத்தர்களும் கலந்து கொண்டு ஆதரவினை தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
»»  (மேலும்)

| |

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உதவிச் செயலாளர் - நிருவாகம் அ.செல்வேந்திரன் இராஜினாமா செய்யவில்லை. கட்சியின் ஒழுக்க விதிகளை மீறியமையால் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உதவிச் செயலாளராக கடந்த 18.03.2012ம் திகதி நடைபெற்ற தேசிய மாநாட்டில் தெரிவு செய்யப்பட்ட அ.செல்வேந்திரன் கட்சியின் ஒழுக்க விதிகளுக்கு முரணாக செயற்பட்டமை தொடர்பாக கட்சியின் தலைவர் பணிக்குழுவினால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு 27.06.2012ம் திகதியில் இருந்து நீக்கப்பட்டிருந்தார்.
த.ம.வி.பு.கட்சியின் உயர் பதவியில் இருந்து கொண்டே வேறு பல கட்சிகளுடன் இரகசிய உடன்படிக்கை செய்ய எத்தனித்தமையினையும், த.ம.வி.பு.கட்சியின் தேர்தலுக்கான ஆசன முன்மொழிவுகளில் அவரது பெயர் நிராகரிக்கப்பட்டதையும் தொடர்ந்து, பதவி மோகத்தின் காரணமாக எமது கட்சிக்கு முரணான ஏனைய கட்சிகளுடன் இரகசிய ஆசன பேரம் பேசுதல் கண்டறியப்பட்டதாலும், தலைவர் பணிக்குழுவினால் நியமிக்கப்பட்ட ஒழுக்காற்று குழுவின் அறிக்கையின் அடிப்படையில் கட்சியின் அனைத்து பொறுப்புக்களில் இருந்தும், அடிப்படை உறுப்புரிமையில் இருந்தும் நீக்கப்பட்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
ஆனால் தன் மீதான ஒழுக்கமின்மையும், நிரூபிக்கப்பட்ட குற்றங்களையும் மறைப்பதற்காகவே தான் இராஜினாமா செய்தததாக ஊடகங்களுக்குத் தெரியப்படுத்தியிருந்தார்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியைப் பொறுத்தவரையில் தமிழ் பேசும் மக்களின் நலனில் அக்கறையுடன் அர்ப்பணிப்பான சேவை மனப்பான்மையுடன் தொண்டர்களைக் கொண்ட கட்சி எமது கட்சி என்பதால் கட்சிக்கு துரோகம் செய்கின்றவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் என பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.
»»  (மேலும்)

7/29/2012

| |

62 வருடங்கள் யாராலும் சாதிக்க முடியாதவற்றை எமது மாவட்டத்தில் வெறும் நான்கே வருடங்களில் சாதித்துக் காட்டியவர் எமது முதல்வர் ஒருவரே


நான்கு வருடங்களுக்கு முன்னர் இருந்த மட்டக்களப்பின் நிலையும் தற்போது இருக்கின்ற நிலையும் நாம் நன்கறிந்ததே.
 
தற்போதைய அபிவிருத்திப் பணிகளை எமக்குக் கொண்டு வந்து சேர்த்தவர் எமது முதல்வர் சி.சந்திரகாந்தன் அவர்களே.
 
62 வருடங்கள் யாராலும் சாதிக்க முடியாதவற்றை எமது மாவட்டத்தில் வெறும் நான்கே வருடங்களில் சாதித்துக் காட்டியவர் எமது முதல்வர் ஒருவரே என்பதை நாம் நன்கறிவோம் என்று கொம்மாதுறை பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
 
நேற்று வெள்ளிக்கிழமை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் திரு.சி.சந்திரகாந்தன் அவர்கள் கொம்மாதுறை பிரதேச மக்களுடன் நிகழ்த்திய கலந்துரையாடல்களின் போதே பிரதேச மக்கள் இவ்வாறு தெரிவித்திருந்தனர்.
 
வடிகான் அமைக்கும் தேவையொன்று அப் பிரதேசத்தில் இருப்பதை இனங்கண்டு கொண்ட சி.சந்திரகாந்தன் அவர்கள் செங்கலடி பிரதேச சபையின் தவிசாளர் திரு.வினோத் அவர்களை உடனடியாக அழைத்து இத் தேவையினைப் பூர்த்தி செய்து கொடுப்பது தொடர்பிலான ஆலோசனைகளை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.  
»»  (மேலும்)

| |

றெஜி கலாச்சார மண்டப புணரமைப்பு பணிகளை பர்வையிடும் முதலமைச்சர் வேப்பாளர்

தற்போது கிரான் பிரதேசத்தில் அமைக்கப்பட்டு வரும் கலாச்சார மண்டப பணிகள் சீராக நடக்கின்றனவா? எனப் பார்வையிட்டதுடன் வேலைகளைச் சிறப்பாகவும், துரிதமாகவும் மேற்கொள்வதற்கான ஆலோசனைகளையும் வழங்கியிருந்தார் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் திரு.சி.சந்திரகாந்தன் அவர்கள். 
 
நேற்று வெள்ளிக்கிழமை மாலை கிரான் பிரதேசத்திற்கான திடீர் விஜயமொன்றினை மேற்கொண்டிருந்த போதே கலாச்சார மண்டப நிர்மாணப் பணிகளைப் பார்வையிட்டு ஆலோசனைகளையும் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. றெஜி என்பவர் கருணாவின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
»»  (மேலும்)

| |

ஒரு சைக்கிள் கூடப் பயணிக்க இயலாத நிலையில் இருந்த போது தளவாய், சிங்காரத்தோப்பு பாதையினை எமக்குத் திறம்பட அமைத்துக் கொடுத்த சிவநேசதுரை சந்திரகாந்தனையும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினையும் ஆலமர விழுதுகளாகத் தாங்க நாம் தயாராகவே இருக்கின்றோம்



ஒரு சைக்கிள் கூடப் பயணிக்க இயலாத நிலையில் இருந்த போது தளவாய், சிங்காரத்தோப்பு பாதையினை எமக்குத் திறம்பட அமைத்துக் கொடுத்தவர் எமது முதல்வரே எனக் களுவங்கேணி சிங்காரத்தோப்பு பிரதேச வாழ் மக்கள் தெரிவித்தனர்.
 
மேலும் அவர்கள் கூறுகையில், மண்ணை விட மிகச் சிறியதான ஓர் விதையிலிருந்தே ஆலமரம் உருவாகின்றது அது போன்றே எமது முதல்வரும் கிழக்கில் விஸ்வரூபம் எடுத்து வருகின்றார். 
 
யாழ் மேட்டுக்குடி சிந்தனையாளர்கள் எமது இளைஞர், யுவதிகளை சிறந்த தலைவர்களாகவும், வழிகாட்டிகளாகவும் விளங்க ஒரு போதும் அனுமதிக்க மாட்டார்கள்.
 
போராளிகளை உருவாக்கும் களமாகவே அவர்கள் கிழக்கினைப் பயன்படுத்தினர். கிழக்குத் தமிழன் சிந்திக்கக் கூடாது என்பதிலேயே அவர்கள் குறியாக இருந்தனர்.
 
ஆனால்....! அனைத்து வியாக்கியானங்களையும் தகர்த்தெறிந்து ஓர் புதிய பாதையைக் காட்டி எம் சிந்தனையைக் கிளர்ந்தெழச் செய்த எம் தன்மானத் தலைவன்  சிவநேசதுரை சந்திரகாந்தனையும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினையும் ஆலமர விழுதுகளாகத் தாங்க நாம் தயாராகவே இருக்கின்றோம் என்று கூறினர்.
 
நேற்றுக் களுவங்கேணி சிங்காரத்தோப்பு சித்தி விநாயகர் ஆலய முன்றலில் பிரதேச மக்களுடனான அரசியல் கலந்துரையாடலின் போதே மக்கள் இவ்வாறு தெரிவித்தனர்.
 
இக் கலந்துரையாடலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் வவுணதீவுப் பிரதேச சபையின் தவிசாளர் கா.சுப்ரமணியம், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயற்குழு உறுப்பினர்களான திரு.ந.அருண், திரு.சுந்தரலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. 
 
 


















»»  (மேலும்)

7/28/2012

| |

விதண்டாவாதம் பேசும் வீண்பேச்சுக்காரர்களின் கொள்கைகளுக்கு பின்னால் செல்ல வேண்டாம் - சி.சந்திரகாந்தன்

அரசியல் கலந்துரையாடலின் நிமித்தம் வவுணதீவுப் பிரதேசத்தின் பல்வேறு பிரதேசங்களுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் சி.சந்திரகாந்தன் விஜயம் செய்தார்.
 
நேற்று வியாழக்கிழமை அன்று காயான்மடு, கரையாக்கன் தீவு, கொத்தியாபுல, மண்டபத்தடி, பருத்திச்சேனை, காஞ்சிரங்குடா போன்ற பிரதேசங்களுக்கே அவர் விஜயம் செய்திருந்தார்.
 
இச் சந்திப்புக்களின் போது பிரதேச மக்கள் தமது ஆதரவு குறித்து எவ்விதமான ஐயங்களும் வேண்டாமெனவும், நாம் எப்போதும் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் கரங்களை பலப்படுத்தும் சக்திகளாகவே இருக்கின்றோம் என்றும் குறிப்பிட்டனர்.
 
இதில் கலந்து கொண்டு உரையாற்றிய சி.சந்திரகாந்தன், தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வின் ஆரம்பப் புள்ளி மாகாண சபை ஆகும். எனவே இவ்வளவு காலமும் நாம் இழந்தவைகளை ஈடுசெய்வதற்கான ஓர் மையமாகவும் மாகாண சபையே விளங்குகின்றது. அந்த  வகையிலே தமிழ் மக்கள் அனைவரும் சிந்தித்து முடிவெடுக்கின்ற ஓர் வரலாற்று சந்தர்ப்பத்தில் இருக்கின்றோம். அபிவிருத்தி மாத்திரமன்றி அதிகாரத்துடன் கூடிய ஓர் மாகாண சபை முறைமையை ஏற்படுத்தி தொடர்ந்து எதிர் காலத்தில் எம் மக்களுக்கான சிறந்த சேவைகளை ஆற்றுவதற்கான சிறந்த சூழலை எற்படுத்த வேண்டிய பொறுப்பு எம் மக்களை சார்ந்தது. எனவே விதண்டாவாதம் பேசும் வீண்பேச்சுக்காரர்களின் கொள்கைகளுக்கு பின்னால் செல்லாமல் எமது மாகாணத்திற்கான சிறந்த ஓர் செயல்வீரமுள்ளவனை தெரிவு செய்யவேண்டும் என கேட்கின்றேன் எனவும் அவர் தெரிவித்தார்.
»»  (மேலும்)

| |

தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு கிழக்கில் சாவுமணி

தமிழ்த்தேசியம், தமிழர் உரிமை என்றெல்லாம் கொள்கைகளை கூறி அரசியலில் குதித்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது இன்று தமது கொள்கைகளையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு மிகவும் கீழ்த்ரமான அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டு மக்கள் மனத்தில் இருந்து அகன்றுகொண்டு வருகின்றது. அதுவும் குறிப்பாக கிழக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினுடைய செல்வாக்கு  மிகக்குறுகிய காலத்தில் சரிவடைந்து வருவதனை அவதானிக்க முடிகின்றது.
உண்மையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் அவர்களுடைய வழிப்படுத்தலில் தமது கொள்கைகளை சரிவரக் கடைப்பிடித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போது அவாகள்இல்லாத சூழலில் தமது கொள்கைகளிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகி வருவதனை அவதானிக்கக் கூடியதாகவிருக்கின்றது.  அந்தவகையில் தமது பிரதான கொள்கையான வடக்கு கிழக்கு இணைந்த தாயகக் கோட்பாட்டிலிருந்து விலகி இன்று கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுகின்றது. 
 
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினுடைய அரசியல் செல்வாக்கு கிழக்கில் சரியத்தொடங்கியதனை எடுத்துக்காட்டுவதற்கு பல்வேறு எடுத்துக்காட்டுகளை இங்கு முன்வைக்கமுடியும். அந்தவகையில் பிரதானமாக அண்மையில் இடம்பெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (தமிழ்தேசியக் கூட்டமைப்பு) வருடாந்த மாநாடு மற்றும் தற்போதைய கிழக்கு மாகாணசபைத் தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் ஆகிய இரண்டையும் எடுத்துக்கொள்முடியும்.
 
இலங்கை தமிழரசுக் கட்சி என்பது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினுடைய பிரதான தலைமைத்துவக் கட்சியாகும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இலங்கை தமிழரசுக் கட்சியே பலமானதும் தலைமைத்துவத்தையும் கொண்ட கடசியாகும். இக்கட்சியினுடைய 14 வது வருடாந்த தேசிய மாநாடு மட்டக்களப்பில் இடம்பெற்றது. இந்த மாநாட்டில் சுமார் 300 பேர் வரையிலான ஆதரவாளாகளே கலந்து கொண்டிருந்தனர். அதிலும் அதிகமானோர் வடமாகாணத்தைச் சேர்ந்தவர்கள். இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் கிழக்கில் சரியத்தொடங்கியுள்ளது என்பதற்கு மிகப் பொருத்தமான சான்றாகும். அதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தனது அரசியல் பலத்தை கிழக்கில் இழந்து வருவதாக பல அரசியல் ஆய்வாளர்கள் கூட பத்திரிகைளில் எழுதியிருந்தார்கள். இவற்றை விட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கே ஏற்கனவே தமது மாநாட்டிற்கு குறைந்த மக்களே வருவார்கள் என்பதை முன்கூட்டியே அறிந்திருந்தமையினால்தான் சிறியதொரு திருமணமண்டபத்தை ஒழுங்கு செய்திருந்தார்கள். ஆனால் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் மிகப்பெரியளவில் மைதானத்தில் தமது முதலாவது தேசிய மாநாட்டை  கல்லடியில் நடாத்தினார்கள் 13000 இற்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். இவற்றை ஒப்பிட்டு நோக்குகின்றபோது கிழக்குத் தமிழர்களின் மனங்களிலிருந்து தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு மெல்ல மெல்ல மறைந்து வருகின்றது என்பது புலப்படுகின்றது.
 
தற்போது செப்டம்பர் 8 இல் இடம்பெற இருக்கும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்காக இடம்பெறும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரசார நடவடிக்கைகளும் அதில் கலந்து கொள்வோரின் எண்ணிக்கையும் அடுத்ததாக தமிழ்தேசியக் கூட்டமைப்பின் செல்வாக்கு மிகவும் மந்த நிலையில் உள்ளதை எடுத்துக்காட்டுவதாக அமைகின்றது. குறிப்பாக இதனை விளக்குவதற்கு நாம் அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் படுவான் கரையிலும், சந்திவெளியிலும் நடாத்தப்பட்ட பிரசாரக் கூட்டங்களை சான்றாகக் காட்டலாம். 
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளரான வி.ஆர். மகேந்திரன் என்பவருக்காக படுவான் கரையில் 23.07.2012 முதலாவது பிரசாரக் கூட்டம் இடம்பெற்றது. இதில் வி.ஆர் மகேந்திரன் மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வராசா, யோகேஸ்வரன், அரியனேந்திரன் ஆகிய மூவரும் பிரசாரத்திற்காக வந்திருந்தனர். இக்கூட்டத்தில் மொத்தமாக கலந்துகொண்டவர்களின் எண்ணிக்கை 16 பேராகும் இதில் பாராளுமன்ற உறுப்பினர் மூவர் மற்றும் வேட்பாளர் மகேந்திரன் தவிர்த்துப் பார்த்தால் 13 பேர் ஏனையோர் அதிலும் கூட ஆலயத்தில் பணிபுரியும் சேவகர்களும் அடங்கும். அந்தவகையில் இந்த கூட்டத்தில் மக்கள் துளியளவெனும் ஆதரவில்லை என்பதனை எடுத்துக்காட்டப் போதுமானதாகும். 
 
அத்துடன் அண்மையில் சந்திவெளியிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுடைய வேட்பாளர் கிருஸ்ணப்பி;ளை சேயோன் என்பவருக்கான இடம்பெற்ற கூட்டத்திலும் இதே நிலைமையே காணப்பட்டது. குறிப்பாக 30 பேர் வரையிலானவர்களே கலந்து கொண்டனர். அதிலும் சுமார் 20 பேர் வேட்பாளளருடைய உறவினர்களாவார்கள்.
 
படுவான் கரைப்பிரதேசமோ அல்லது சந்திவெளிப்பிரதேசமோ தமிழ்மக்களால் சூழப்பட்ட பிரதேசங்களாகும். அது தவிர கடந்த போராட்ட காலத்தில் பல வீரர்களை தியாகம் செய்த பிரதேசங்களுமாகும். அத்தகைய பிரதேசங்களே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிரை இக் கிழக்கு மகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவதனை விரும்பவில்லை என்றால் ஏனைய பிரதேசங்களைப் பற்றிச் சொல்ல வேணடியதில்லை. தமிழ்த்  தேசியக் கூட்டமைப்பனர் தமிழர் மனங்களிலிருந்து அகற்றப்படுகின்றமைக்கு காரணமே அவர்களுடைய கொள்கை மாறிய அரசியலும் தடம்புரண்ட அரசியல் பாதையுமே ஆகும். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் இத்தகைய பிரசாரக் கூட்டங்களுக்கு மக்கள் சமூகமளிக்காத தன்மையானது எதிர்வரும் செப்டம்பர் மாதம் இடம்பெறும் தேர்தலில் அவர்களுக்கு படுதோல்வியை ஏற்படுத்தும் என்பதை எடுத்துக்காட்டும் சான்றாதாரங்களாகும். 
 
அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர் ஒரவர் கூறினார்' இத்தடவை இடம்பெறும் கிழக்கு மகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டு படுதோல்வியடைவதை விட, தேர்தலில் நிற்காமலேயே விட்டிருக்கலாம். ஏனெனில் குறிப்பிட்டளவு செல்வாக்காவது மக்களிடத்தில் இருந்;திருக்கும். கொஞ்சம் கௌரவத்தையாவது காப்பாற்றியிருக்கலாம்.' என்று மிகவும் கவலையுடன் கூறினார். இது கூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தோல்வி உறுதியாகி விட்டதனை எடுத்துக்காட்டுவதற்குரிய சான்றாகும். உண்மையில் இவ்வருட ஆரம்பத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேசியத்தலைவரும் முன்னாள் முதல்வருமான பிள்ளையான் அவர்கள் பேச்சுக்கு அழைத்தும் கூட ஒரு பதிலும் கூறவில்லை. பல தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் கூட தமிழ்தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியுடன் பேச்சுவார்த்தையை நடாத்தி சில இணக்கப்பாடுகளுக்கு வரவேண்டும் என கோரியிருந்தனர். எல்லாவற்றையும் உதாசீனம் செய்து மீண்டும் கிழக்கின் முதல்வராக ஆளப்போகும்  பிள்ளையான் அவர்கள் முதல்வராக வராமல் இருப்பதற்கே  நாம் கிழக்குத் தேர்தலில் போட்டியிடுகின்றோம் என்ற இறுமாப்புடன் தேர்தலில் குதித்தவர்கள் இன்று தமது இருப்பிற்கே உலைவைக்கப்பட்டதனை உணர்ந்து கதிகலங்கிப் போயுள்ளனர் .
 
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பிரசாரம் சில ஆதாரங்கள்
- ஆரவாணண் - 
 
»»  (மேலும்)

| |

மீன்பாடும் தேன் நாடு என்றழைக்கப்படும் மட்டக்களப்பு மாவட்டத்தின் தலைநகரம் இன்று ஒரு நவீன நகரைப் போன்று அழகாக தோற்றமளிக்கின்றது.



மீன்பாடும் தேன் நாடு என்றழைக்கப்படும் மட்டக்களப்பு மாவட்டத்தின் தலைநகரம் இன்று ஒரு நவீன நகரைப் போன்று அழகாக தோற்றமளிக்கின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் அடையாள சின்னமாக இருந்த கல்லடி பாலம் இப்போது அகலப் படுத்தப்பட்டு, புனர்நிர்மாணம் செய்யப்பட்டு வருகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் இப்போது இருக்கும் குடும்பத் தலைவிகளின் எண்ணிக்கை 26ஆயிரத்து 965 ஆகும். இவர்கள் அனைவரும் யுத்தத்தினால் அல்லது சுனாமியினால் அல்லது இயற்கை காரணங்களினால் கணவன்மார்களை இழந்து கைம்பெண்ணானவர்களே இவர்களாகும். இதில் 18ஆயிரத்து 468 பேர் இயற்கை காரணத்தினாலும் 2ஆயிரத்து 883பேர் யுத்தத்தினால் கணவன்களை இழந்தவர்களாகும்.
விவாகரத்தினால் பிரிந்த பெண்கள் ஆயிரத்து 41 பெண்கள் இருக்கிறார்கள். குடும்பத் தலைவன் காணாமல் போனதால் குடும்பப் பொறுப்பை ஏற்றுள்ள பெண்களின் எண்ணிக்கை 349 ஆகும். கணவன் ஊனமுற்றதனால் குடும்பப் பொறுப்பை ஏற்றிருக்கும் பெண்களின் எண்ணிக்கை 507 ஆகும். வேறு காரணங்களினால் குடும்பத்தலைவிகளாக இருக்கும் பெண்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 717 ஆகும். இவர்கள் அனைவருக்கும் கிழக்கின் உதயம் திட்டத்தின் கீழ் தங்கள் குடும்பங்களை கொண்டு நடத்துவதற்கான வாழ்வாதாரங்கள் கிடைத்துள்ளன.
குடிசைக் கைத்தொழில்களை மேற்கொள்வதற்கு இவர்களுக்கு வங்கிக் கடன் உதவியும் கிடைத்துள்ளது. சிறிய விற்பனை நிலையங்களை திறப்பதற்கும், தையல் தொழில் புரிவதற்கும், மீன்பிடித்து வாழ்க்கை நடத்துவதற்கு சிறிய படகுகள் மற்றும் வலைகளும் இவர்களுக்கு இலவசமாக கொடுக்கப்படுகிறது.
இதனால் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கைம்பெண்கள் வறுமையின் பிடியில் இருந்து மீட்கப்பட்டு இன்று ஓரளவு நிம்மதியான வாழ்க்கையை மேற்கொண்டு வருகிறார்கள். மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை 76ஆயிரத்து 930 வீடுகளுக்கும் 789 கைத்தொழிற்சாலைகளுக்கும் 7ஆயிரத்து 452 வர்த்தக நிலையங்களுக்கும் மின்சார இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் சமுர்த்தி நிவாரணம் பெறுபவர்களின் எண்ணிக்கை இன்று 86ஆயிரத்து 564ஆக அதிகரித்திருக்கிறது. 19ஆயிரத்து 51 பேருக்கு மாதாந்தம் 210 ரூபாவும் 7ஆயிரத்து 782 பேருக்கு மாதம் ஒன்றுக்கு 250 ரூபாவும் 8ஆயிரத்து 582 பேருக்கு 150 ரூபாவும் ஆயிரத்து 216பேருக்கு 375 ரூபாவும் 47 ஆயிரத்து 962பேருக்கு 415 ரூபாவும் ஆயிரத்து 486பேருக்கு 525ரூபாவும் 415 பேருக்கு 615ரூபாவும் 70 பேருக்கு 900 ரூபாவும் சமுர்த்தி கொடுப்பனவாக வழங்கப்படுகிறது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்வித்துறையும் சிறப்புற்று விளங்குகிறது. இம்மாவட்டத்தில் எல்லாமாக ஒரு லட்சத்து 26ஆயிரத்து 958 மாணவ, மாணவிகள் இருக்கிறார்கள். இவர்களுக்கு என 326 பாடசாலைகள் இருக்கின்றன. இந்தப் பாடசாலைகளில் 6ஆயிரத்து 70 ஆசிரிய, ஆசிரியைகள் பணிபுரிகிறார்கள். மட்டக்களப்பு மாவட்டத்தில் 21 பிள்ளைகளுக்கு ஒரு ஆசிரியர் என்ற அடிப்படையில் ஆசிரிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று தேர்தல் பிரிவுகள் இருக்கின்றன.
அவை கல்குடா, மட்டக்களப்பு, பட்டிருப்பு பிரிவுகளாகும். இவற்றில் எல்லாமாக 3லட்சத்து 44ஆயிரத்து 750 வாக்காளர்களின் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளன. கல்குடா பிரிவில் 99ஆயிரத்து 955 வாக்களர்களும் மட்டக்களப்பில் ஒரு லட்சத்து 61ஆயிரத்து 116 வாக்காளர்களும், பட்டிருப்பு பிரதேசத்தில் 83ஆயிரத்து 679 பேரும் இருக்கிறார்கள். மட்டக்களப்பு மாவட்டத்தில் எல்லாமாக 14ஆயிரத்து இரண்டு தொலைபேசி இணைப்புகள் இருக்கின்றன.
அங்கு சி.டி.எம்.ஏ. தொலைபேசி இணைப்புகள் 16ஆயிரத்து 597 இருக்கின்றன. ஏ.டி.எஸ்.எல். வலையமைப்பில் 3ஆயிரத்து 477 பேர் இணைந்துள்ளார்கள். மட்டக்களப்பு மாவட்டத்தில் 21 பிரதான அஞ்சல் நிலையங்களும் 66 உப அஞ்சல் நிலையங்களும் காணப்படுகின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு போதனா ஆஸ்பத்திரியும் 4 ஆதார வைத்தியசாலைகளும் 3 மாவட்ட ஆஸ்பத்திரிகளும் 3 மத்திய மருந்தகங்களும் 9 கிராமிய ஆஸ்பத்திரிகளும் ஒரு இடைநிலை ஆஸ்பத்திரியும் என்று எல்லாமாக 21 ஆஸ்பத்திரிகள் இருக்கின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தில் இப்போது 92ஆயிரத்து 771 நிரந்தர வீடுகளும் 20ஆயிரத்து 537 நிர்மாணம் பூர்த்தி பெறாத வீடுகளும் 35ஆயிரத்து 414 தற்காலிக வீடுகளும் இருக்கின்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 5ஆயிரத்து 944 பேர் ஓய்வூதியம் பெறுகிறார்கள். மட்டக்களப்பில் விவசாயம் பருவகால மழையுடன் மேலோங்கி நிற்கின்றது. அங்கு 49ஆயிரத்து 850 விவசாய குடும்பங்கள் இருக்கின்றன. பெரும்போகத்தில் அங்கு 18ஆயிரத்து 987மெற்றிக் தொன் நெல் அறுவடை செய்யப்படுகின்றது. சிறு போகத்தில் 87ஆயிரத்து 386 மெற்றிக் தொன் நெல் அறுவடை செய்யப்படுகின்றது. மட்டக்களப்பில் 6 பாரிய நீர்த் தேக்கங்களும் நடுத்தர அளவிலான 15 நீர்த்தேக்கங்களும் 302 சிறிய நீர்த்தேக்கங்களும் காணப்படுகின்றன.
இங்கு கால்நடை வளர்ப்பு, பால் உற்பத்தி, கோழி முட்டை உற்பத்தியும் சிறப்புற்று விளங்குகின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சனத்தொகையில் 71.87சதவீதம் தமிழர்களாவர். 26.84 சதவீதத்தினர் முஸ்லிம்களாவர். 0.66 சதவீதத்தினர் பறங்கியராவர். 0.58 வீதத்தினர் சிங்களவராகும். ஏனையோர் 0.05 சதவீதமாகும். மட்டக்களப்பில் மீன் உற்பத்தி 41ஆயிரத்து 655.2 மெற்றிக் தொன் ஆக அதிகரித்துள்ளது. இவர்கள் நன்னீர் மீன் பிடிப்பிலும், ஆழ்கடல், கரையோர மீன்பிடிப்பிலும் ஈடுபட்டு மீன் உற்பத்தியை பெருக்கி வருகிறார்கள். இவ்விதம் மீன்பாடும் தேன் நாடு இன்று வளம்மிக்க பிரதேசமாக மாறிக்கொண்டிருக்கிறது.
»»  (மேலும்)