*மட்டக்களப்பில் இந்த வார இறுதியில் நடைபெற இருக்கும் தமிழரசு க்கட்சியின் 14ஆவது தேசிய மகாநாட்டில் தமிழரசு கட்சியை கிழக்கு மாகாணத்தில் வளர்த்தவரும், அக்கட்சியின் மூத்த உறுப்பினர்களில் தற்போது உயிருடன் வாழும் ஒருவருமான செல்லையா இராசதுரை கௌரவிக்கப்பட உள்ளார்.என்றும்
*தமிழரசுக்கட்சிக்காக உழைத்த மூத்தவர்கள் இந்த மகாநாட்டில் கௌரவிக்கப்பட உள்ளனர். அவர்களில் முதன்மையானவராக இராசதுரை கௌரவிக்கப்பட உள்ளார்என்றும்
*1977களில் அமிர்தலிங்கம் போன்றவர்களின் தவறான அணுகுமுறை காரணமாக தமிழரசுக்கட்சியிலிருந்து விலகியிருந்த இராஜதுரை தற்போது தமிழரசுக்கட்சியுடன் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
என்றும் பொய் செய்திகளை வெளியிட்டு மாநாட்டுக்கு விளம்பரம் செய்தது அரியேந்திரன் குழு தினக்கதிர் இணையத்தளம்.
தினக்கதிர் துரைரத்னத்தின் ஆலோசனையின் பெயரில் அரியந்திரனும் யோகேஸ்வரனும் இராசதுரைக்கு வலை வீசினர் கிழக்குமாகாண சபை தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக தமிழரசுக்கட்சி சார்பில் இராசதுரை அவர்களை களமிறக்கும் எண்ணம் இருப்பதாகவும் அரியேந்திரன் குழுவினர் இராசதுரைக்கு ஆசை காட்டினர் . இராசதுரை அவர்களை மீண்டும் மட்டக்களப்பில் களமிறக்குவதன் மூலம் தமிழ் மக்கள் விடுதலை புலிகளுக்கு ஆப்பு வைக்கலாம் என்பதுசம்பந்தரின் நப்பாசை . பழம்தின்று கொட்டை போட்ட இராசதுரையிடம் தினக்கதிர் துரைரத்னத்தின் ஆலோசனையின் பெயரில் அரியந்திரனும் யோகேஸ்வரனும் பண்ணிய இந்தஇராசதந்திரம் வேகவில்லை. தமிழரசுகட்சி மாநாட்டுக்கு முதல் நாளே முதலமைச்சர் சந்திரகாந்தனிடம் சென்று அவரை வாழ்த்திவிட்டு இந்தியாவிட்கு புறப்பட்டு விட்டார் இராசதுரை அவர்கள் .இதனால் அரியேந்திரன் குழு சம்பந்தரிடமுவும் நாராக வாங்கி கட்டி கொண்டனராம் .இராசதுரையை வளைத்து போடவும் முடியவில்லை மாநாடும் சப்பென்று போய்விட்டது .இதனால் ஆத்திரமுற்ற அரியேந்திரன் குழுவினருடைய இராசதுரை மீதான இந்த பழிவாங்கலாகும் .
தினகதிரில் வெளிவந்த இந்த செய்தியை முழுமையாக படியுங்கள்
தமிழரசுக்கட்சி மகாநாட்டில் இராஜதுரை கௌரவிக்கப்படுகிறார்! – சிவாஜி கறுப்பு கொடி காட்டுவாரா?
Published on May 24, 2012-9:09 am · No Comments
மட்டக்களப்பில் இந்த வார இறுதியில் நடைபெற இருக்கும் தமிழரசு க்கட்சியின் 14ஆவது தேசிய மகாநாட்டில் தமிழரசு கட்சியை கிழக்கு மாகாணத்தில் வளர்த்தவரும், அக்கட்சியின் மூத்த உறுப்பினர்களில் தற்போது உயிருடன் வாழும் ஒருவருமான செல்லையா இராசதுரை கௌரவிக்கப்பட உள்ளார்.
இராஜதுரை அவர்கள் அண்மையில் யாழ்ப்பாணத்தில் தந்தை செல்வா நினைவு தின விழாவில் சிறப்பு பேச்சாளராக கலந்து கொள்ள சென்றிருந்த வேளை அங்கு அழையா நபராக நுழைந்த சிவாஜிலிங்கம் கறுப்பு கொடியை காட்டியதுடன் மட்டக்களப்பான் சக்கிலியன், துரோகி என வசைபாடியிருந்தார். இச்சம்பவம் மட்டக்களப்பு பிரதேச மக்கள் மத்தியில் ஆத்திரத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியிருந்தது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான அரியநேத்திரன், யோகேஸ்வரன் உட்பட மட்டக்களப்பு மக்கள் பலரும் சிவாஜிலிங்கத்தின் செயலை கண்டித்திருந்தனர். சிவாஜிலிங்கம் யாரை துரோகி, சக்கிலியன் என கூறினாரோ அவரை தமிழரசுக்கட்சியின் தேசிய மகாநாட்டில் கௌரவித்து சிவாஜிலிங்கத்திற்கும் அவரை சார்ந்தோருக்கும், சிவாஜிலங்கத்தின் கீழ் தரமான செயலை ஆதரித்தவர்களுக்கும் தமிழரசுக்கட்சியினரும், மட்டக்களப்பு மக்களும் செருப்படி கொடுக்க உள்ளனர்.
சிவாஜிங்கத்திற்கு துணிவு இருந்தால் மட்டக்களப்பில் நடைபெறும் தமிழரசுக்கட்சி மகாநாட்டிற்கு கறுப்பு கொடியுடன் வரட்டும் என மகாநாட்டின் ஏற்பாட்டாளர்களில் ஒருவர் தெரிவித்தார்.
சிவாஜிங்கத்திற்கு துணிவு இருந்தால் மட்டக்களப்பில் நடைபெறும் தமிழரசுக்கட்சி மகாநாட்டிற்கு கறுப்பு கொடியுடன் வரட்டும் என மகாநாட்டின் ஏற்பாட்டாளர்களில் ஒருவர் தெரிவித்தார்.
தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவர் ஒருவரை அவமதித்த சிவாஜிங்கம் தமிழரசுகட்சியின் ஊடாக பெற்ற வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினா செய்ய வேண்டும் என்றும் தமிழரசுகட்சி பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்.
சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்த ஆண்டி சிவாஜிலிங்கம் இன்று நாறிப்போய் கிடக்கிறார் என மட்டக்களப்பில் உள்ள பெரும்பாலான மக்கள் தெரிவிக்கின்றனர்.
சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்த ஆண்டி சிவாஜிலிங்கம் இன்று நாறிப்போய் கிடக்கிறார் என மட்டக்களப்பில் உள்ள பெரும்பாலான மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை தமிழரசுக்கட்சிக்காக உழைத்த மூத்தவர்கள் இந்த மகாநாட்டில் கௌரவிக்கப்பட உள்ளனர். அவர்களில் முதன்மையானவராக இராசதுரை கௌரவிக்கப்பட உள்ளார்.
1950ஆம் ஆண்டு முதல் தமிழரசுக்கட்சியில் இணைந்து தந்தை செல்வாவுடன் கிழக்கு மாகாணத்தில் தமிழரசுக்கட்சியை கட்டி எழுப்பியவர் இராசதுரை. சிறிலங்கா சுதந்திரகட்சி, ஐக்கிய தேசியக்கட்சி என சிங்கள கட்சிகளின் பக்கம் சாய்ந்திருந்த மட்டக்களப்பு தமிழ் மக்களை தமிழரசுக்கட்சியின் கீழ் அணி திரட்டி 1956ஆண்டு முதல் மட்டக்களப்பு தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தமிழரசுகட்சியின் கீழ் தக்க வைத்த பெருமை இராஜதுரையே சாரும்.
1977களில் அமிர்தலிங்கம் போன்றவர்களின் தவறான அணுகுமுறை காரணமாக தமிழரசுக்கட்சியிலிருந்து விலகியிருந்த இராஜதுரை தற்போது தமிழரசுக்கட்சியுடன் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.