நீர்ப்பாசன மற்றும் நீர் முகாமைத்துவ அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இன்று திங்கட்கிழமை மட்டக்களப்புக்கு விஜயம் செய்தார். இதன்போது, மட்டக்களப்பு பிராந்திய நீர்ப்பாசன அலுவலகத்தில் நடைபெற்ற, மட்டக்களப்பு நிர்ப்பாசன அபிவிருத்தி தொடர்பான கூட்டத்தில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா கலந்துகொண்டார்.
இக்கூட்டத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன். பிரதியமைச்சர்களான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா மற்றும் விநாயகமூர்த்தி முரளிதரன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் மற்றும் நீர்ப்பாசன பொறியிலாளர் எஸ்.மோகனராஜ்; உட்பட பலர் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் நிர்ப்பாசன குளங்களின் அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் விவசாயிகளின் பிரச்சினைகள் தொடர்பாக இதன்போது ஆராயப்பட்டன. மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பெரிய நீப்பாசன குளங்களான கித்துல் மற்றும் றூகம் ஆகிய இரண்டு குளங்களை ஒன்றாக இணைத்து புனரமைப்பு செய்வதற்கு அடுத்த ஆண்டு நிதி வழங்கப்படும் என அமைச்சர் உறுதியளித்தார்.
இதன் மூலம் 10,000 ஏக்கர் விவசாயம் செய்வதுடன் வெள்ள அனர்த்தத்திலிருந்தும் பாதுகாக்க முடியும் என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தரிவித்தார். இக் கூட்டத்தையடுத்து அமைச்சர் கித்துல் மற்றும் றூகம் ஆகிய குளங்களை ஒன்றாக இணைப்பது தொடர்பில் நேரடியாக குளங்களை பார்வையிட்டதுடன் பெண்டுகல் சேனைக்கும் விஜயம் செய்தார்.